Tuesday, September 15, 2009

தொடருமோ எங்கள் மௌனம்?

எம் சக உதரர்ஆடைகிழித்து
நிர்வாணமாக்கி வரிசை வரிசையாய்
ஆயிரமாயிரமாய்உயிர் பொசுக்கி
அழித்திட்டகோழைச் சிங்களக் கயவர்களின்
வஞ்சகப் படுகொலைக் காட்சிகள்
கண்டபின்னும் தொடருமோ எங்கள் மௌனம்?

எங்கள் முந்தையர் ஆண்டமண்ணை
தங்கள் முன்னவர் தேசமெனகூசாது
பொய்யுரைக்கின்றார் கொடுஞ்சிங்களவெறியர்!

எம்மவர் வியர்வையில் பசுமைகொண்ட
வன்னிமண்ணாள் இன்றுஎம்மவர் குருதியாற்றில்
மூழ்கிச் சாகின்றாள்!

தமிழன் உயிரைக் குலைகுலையாய்
கொய்துகோரமாய் குருதிபிதுக்கிக்
குடித்த பின்னும் தீரவில்லை
சிங்களவெறியரின் நரபலி வேட்கை!
‘சும்மா இருப்பான் நிலம் விட்டுப்
போன சோம்பேறித்தமிழன்தான் வாழும்
தேசங்களில்…
மௌனித்திருக்கும் பாருலகுமிங்கு
எம்மைத் தட்டிக் கேட்பாரின்றியே..
தமிழனுக்காய் குரல் கொடுக்க
எவரிவர்க்கு உள்ளாரினி?
ஆடுமட்டும் வேட்டையாடி இறுதித்தமிழன்
உயிரெச்சமும் சொச்சமேனும் மிஞ்சாமல் இனமழித்துவிடலாமினி!’ கொக்கரித்து கொட்டமடிக்கும் கொடுஞ்சிங்கள
வெறியர்களின் தொடரும் அநீதி கண்டபின்னும்
தொடருமோ எங்கள் மௌனம்?
வேட்டையாடுகின்றார்கள் நாட்டையிழந்தபின்னும் நாதியற்ற தமிழர்களை நையப்புடைத்து கசக்கிப் பிழிகின்றார் தட்டிக் கேட்க
எட்டுக்கோடி தமிழர் இருந்தும்
தொடருமோ எங்கள் மௌனம்?
உறங்கியது போதும் உயிர்த்தெழடா தமிழா!
அழுததும் போதும் துடித்தெழடா தமிழா!
மாண்ட வீரர் கனவு பலிக்க
மண்ணவர்க்காய்புலத்துத் தமிழா புடைத்து நீ எழடா!
புலத்தில் களமமைத்து போராடி
ஈழம் காண ஓடோடி வாரும்
தரணிவாழ் தமிழ் மக்காள்!
நிரந்தரமற்ற மூச்சுக்குள் உயிர் சுருக்கி
மடிந்த படிவதைமுகாங்களில் சாவிழுங்கிய
வாழ்வுக்குள் நம்பிக்கையிழந்து வாடும்
எங்கள் சகோதரர் கண்ணீரைக் களைந்தெறியக+ளையாது
களம்பலதொடராய் இனிப் படைப்பீர்!
தமிழன் என்ற ஒற்றைக் குடையின்
கீழ்பேதங்கள் களைந்து ஓன்றிணைவோம்
வாரும் தமிழர்காள்!

நீதி வெல்லும் வரை அநீதி அழியும் வரைதொடரட்டும் எம் போராட்டம்!மௌனச்சிறையுடைத்து புறப்படடா
தமிழா பெருந்தீயாய் நீயெழுந்து அநீதிகளை பொசுக்கிவிடு!
தமிழன் உயிர்காக்கதமிழர் நாம் உள்ளோம்!
உலகதிர உரத்துரைப்போம் உயிர்காக்கப் புறப்படுவோம்!மௌனச்சிறையுடைத்து புறப்படடா தமிழா!
சரித்திரம் படைத்திடவேசமராட நீ எழு!

-சிவவதனி.பி-
Source: http://www.pathivu.com/news/3304/54//d,view.aspx

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...