Saturday, September 5, 2009

அந்தமானில் ஆளில்லாத தீவுகளை பாதுகாக்க கலாம் வலியுறுத்தல்







போர்ட் பிளேர், செப். 4:


அந்தமான் தீவுகளில் மக்கள் வசிக்காத தீவுகளில் சட்டத்துக்குப்புறம்பான ஆக்கிரமிப்புகளை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வலியுறுத்தியுள்ளார்.
அந்தமான் தீவுகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கு போர்ட் பிளேரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று அவர் பேசியது:
அந்தமானில் மொத்தமுள்ள 572 தீவுகளில் 36-ல் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். காலியாக உள்ள தீவுகளில் அன்னியர்கள் யாரேனும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனரா என்பதை பாதுகாப்புப் படைகள் கண்காணிக்க வேண்டும்.
அந்தமான் தீவுகள் இயற்கை வளங்கள் அதிகம் கொண்டவை. எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகிய வளங்களும், கடல் உயிரினங்கள் அதிகம் நிறைந்த தீவுகளாகும். நாட்டின் 30 சதவீத பொருளாதாரம் இங்கு கிடைக்கிறது. இவற்றின் பாதுகாப்பை அவ்வப்போது உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றார்.








No comments:

Post a Comment

Kids enjoying evening in village