Sunday, October 11, 2009

இலங்கைத்தமிழர் பிரச்சினை உலகத் தமிழர் பிரச்னையாக மாறியுள்ளது: இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம்

இலங்கை பிரச்னை இப்போது உலகத் தமிழர் பிரச்னையாக மாறியுள்ளது என்று இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
“இலங்கையில் தமிழின அழிப்பு’ என்ற கருத்தரங்கு சென்னை மயிலாப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:
இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை எப்படியாவது விடுவிக்க வேண்டும். இதற்கு ஆதரவாக எலைன் சாண்டர் போன்ற மனித உரிமை ஆர்வலர்களை உலகளாவிய அளவில் நாம் திரட்ட வேண்டும்.
நமது தமிழ் இலக்கியங்கள் உலகாயத சிந்தனைகளுடன்தான் படைக்கப்பட்டுள்ளன. ஆனால், இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுவதை உலக நாடுகள் வேடிக்கை பார்த்தது வேதனை அளிக்கிறது. உலகின் மனசாட்சியை நாம் தட்டி எழுப்ப வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் இதுவரை நடத்தியது முதற்கட்ட போராட்டம்தான். இலங்கைத் தமிழர் பிரச்னை இப்போது உலகத் தமிழர்களின் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இஸ்ரேல், பிரிட்டனை விட இலங்கை ராணுவமயமாகி வருகிறது.
40,000 வீரர்கள் மட்டுமே இருந்த இலங்கை ராணுவத்தில் இப்போது 3 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கையை 5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை இலங்கைத் தமிழர்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். இலங்கையில் எல்லாம் முடிந்த பின் இப்போது எம்.பிக்கள் குழு சென்றுள்ளது. அவர்கள் என்ன வந்து சொல்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இலங்கைத் தமிழர்களுக்காக உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.
இலங்கைத் தமிழர் மீட்பு, பிரச்னை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரசார இயக்கம் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ், ராமேசுவரத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கன்னியாகுமரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோரது தலைமையிலும், ஊட்டியில் எனது தலைமையிலும் இந்தப் பிரசாரப் பயணம் தொடங்கும்.
நிறைவாக 29-ம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும்.
மதிமுக பொதுச் செயாலாளர் வைகோ: இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களும் ஜெனிவா மனித உரிமை பிரகடன விதிகளுக்கு மாறாக துன்புறுத்தப்படுகின்றனர்.
ஆனால், தமிழினத்தை ராஜபட்ச அரசு அழித்ததைப் பார்வையிட எம்.பி.க்கள் குழுவை அந்நாட்டு அரசு இப்போது அழைத்ததா?
தமிழர்களின் புராதனமான ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன. இலங்கைப் பிரச்னைக்கு தமிழ் ஈழம் மட்டுமே ஒரே தீர்வு.
இந்தியாவின் பாதுகாப்பு குறித்து இந்திரா காந்தியின் தொலைநோக்குப் பார்வை இப்போது சிதைக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படை கப்பல்களில் சீனர்கள் வருவதாக ராமேசுவரம் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளால் தமிழகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன என்றார் வைகோ.
பாமக நிறுவனர் ராமதாஸ்: இலங்கைக்கு சென்றுள்ள எம்பிக்கள் குழு, மட்டக்களப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக வீரகேசரி இதழின் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அங்குள்ள முகாம்களை எம்.பி.க்கள் சுதந்திரமாகச் சென்று பார்வையிட முடியாது. இப் பயணத்தின் முடிவு நாம் அறிந்தது தான்.
தமிழ் மக்களை அழித்த ராஜபட்சவுக்கு பாடம் புகட்ட தமிழ் ஈழத்தை மலரச் செய்வது ஒன்றே வழி. வழிதவறிச் செல்லும் நமது இளைஞர்களிடையே தமிழ் உணர்வை ஊட்ட வேண்டும்.
இலங்கைப் பிரச்னைக்கு ஆதரவாக தமிழக மக்களை நாம் ஒருங்கிணைக்க வேண்டும். காலம் நிச்சயம் மாறும் என்றார் ராமதாஸ்.

ENGLISH STORY ON THE MEET:
Eelam movement now handed over to Tamil Diaspora: Nedumaran

Chennai, Oct 10:The second phase of struggle for the self-determination of the Tamils in Sri Lanka has been now handed over to the Tamil Diaspora, leader of Tamil Nationalist Movement (TMM) and coordinator of Sri Lankan Tamils Protection Movement Pazha Nedumaran has said.

Addressing a gathering of thousands of Eelam Tamil supporters here, Nedumaran said, “This is the time for all Tamils to go for self retrospection on the Sri Lankan Tamils issue and everyone (here) has to take the responsibility for determining the fate of Tamils living rights in their own homeland.”
To rejuvenate Tamils, especially youths who had not been fully briefed about the Sri Lankan ethnic problems and about the ongoing IDP camp crisis, we have decided to begin three-day mega campaign from October 27 from four directions of Tamil Nadu, Nedumaran said.

He further said: “PMK leader Dr Ramadoss will start his campaign from Chennai, CPI leader D Pandian from Kanyakumari, MDMK leader from Rameswaram and I will begin the hard hitting campaign from Ooty, and all of them will meet at Trichy on October 29 where we will be addressing a huge rally for the rights of Lankan Tamils.”
MDMK leader Vaiko while addressing the crowd, which was chanting LTTE Supremo Velupillai Prabakaran’s name time and again, questioned the Lankan government’s intention to keep 3.2 lakh innocent Tamil people in its concentration camps.
Reiterating that the Tamils in the Island nation would not love to live like slaves at the hands of Sinhalese, Vaiko called the likeminded youths in the state to rededicate themselves for securing the peoples’ birth rights.

Source: http://www.meenagam.org/?p=13092

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...