Tuesday, October 6, 2009

கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை! கற்பழிப்பில் கைதேர்ந்த இலங்கை இராணுவம்: செய்தி விமர்சனம்

Published in www.tamilwin.com

[ செவ்வாய்க்கிழமை, 06 ஒக்ரோபர் 2009, 08:20.47 AM GMT +05:30 ]

கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை! கற்பழிப்பில் கைதேர்ந்த ஸ்ரீலங்கா இராணுவத்தை கட்டியம் கூறி நிரூபிக்கத் தேவையில்லை!
- ஹைத்தி நாட்டில் அந்நாட்டுப் பெண்களை தான்தோன்றித்தனமான கற்பழிப்பு!
-கிரிசாந்தி கற்பழிப்பு - கொலை - கீழதரமான செயலுக்கு எடுத்துக்காட்டு
-சாரதாம்பள் கற்பழிப்பு - கொலை - சரித்திரம் அழிந்துபோகாத பதிவு
-கோணேஸ்வரி கற்பழிப்பு - கொடூரத்தின் ஒரு எடுத்துக்காட்டு
-தர்சினி கற்பழிப்பு - கொலை தரங்கெட்ட ஸ்ரீலங்கா இராணுவத்தின் பதிவு!
-13 வயதான மனோதுஸ்காவை கற்பழிப்பு மனித குலத்திற்கே கேவலமான பதிவு!
-தென்னிலங்கையில் முட்டை விற்கச் சென்ற 14 வயதுச் சிறுமியைக் கற்பழித்தது!
இவையெல்லம் ஒரு சில உதாரணங்களே தவிர இன்னமும் முழுமையான விபரக் கோவைகள் கைவசம் உள்ளன. அவற்றைக் கையும் மெய்யுமாகச் சர்வதேசத்திடம் ஒப்படைக்க முன் வரும் இலங்கைப் பிரஜைகளாயினும் சரி, வெளிநாட்டுப் பிரஜைகளாயினும் சரி அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று பொய்க்குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்பட்டு,பின்னர் கொலை செய்யப்பட்டு, அவர்கள் பற்றிய தடயங்களை அழித்து விடுவதிலும், இலங்கையின் இராணுவத்திற்கும், புலனாய்வுப்பிரிவு என்று கூறிக்கொள்ளும் கொலைகாரப் பிரிவுக்கும் கைவந்த கலையாகிவிட்ட வேளையில் எப்படித்தான் அமைச்சர்கள் எல்லோரும் தங்கள் நாட்டு இராணுவம் பாலியல் துஸ்பிரயோகம் செய்யாதவர்கள் என்று பச்சைப் பொய்யைச் சொல்லிக் கொள்வதுடன், அமெரிக்க அமைச்சர் மாண்புமிகு கிலாரி கிளிங்டன் அவர்களின்குற்றச்சாட்டை வாபஸ் வாங்கச் சொல்கிறார்களோ தெரியாது.
சர்வதேச பாதுகாப்பு இராணுவமாக ஹைத்தி நாட்டிற்கு இலங்கை இராணுவத்தின் அதி உயர் (றோயல்) பிரிவினர் சென்றபோது, அங்கும் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் திருப்பி இலங்கைக்கு அனுப்பப்பட்டது இன்னமும் பதிவில் உள்ளதை மகிந்த அன்கோ மறந்து விடக்கூடாது என்பதை இங்கு ஸ்ரீலங்கா அரச மட்டத்தினருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அதி உயர்பிரிவு இராணுவத்தினரே, வெளிநாட்டில் எத்தனையோ கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த பாலியல் நாடகம் ஆடியவர்கள் என்றால் , உள்நாட்டில், பிறர் கட்டப்பாடுகள் ஏதுமற்ற நிலையில், தங்கள் முழுமையான கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள அப்பாவிப் பெண்கள் மீது இவர்கள் எத்தகைய வெறித்தனங்களைக் காட்டியிருப்பார்கள். இதுவும்கூடத் தெரியாதவர்கள் அல்ல சர்வதேச சமூகம் என்பதை ஸ்ரீலங்கா பாசிச அரசமட்டத்தினர் புரிந்துகொள்ள வேண்டும் .
அதுமட்டுமல்லாது, இலங்கை இராணுவத்தின மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்படுவது அபாண்டமானது என்பதை அவர்கள் மகிந்தர் சமூகம் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அமெரிக்க அமைச்சர் மாண்புமிகு ஹில்லரி கிளிங்டன் அவர்களை வாபஸ் வாங்கச் சொல்ல இலங்கை அரச மட்டத்தினருக்கு எந்தவிதமான அருகதையும் இல்லை என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை இராணுவத்தினரால் அரங்கேற்றப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கான பல தடயங்கள் இதோ இத்துடன் இணைக்கப்பட்டள்ளது.
இது மட்டும் போதுமா? இல்லை இன்னும் பல ஆதாரங்கள் வேண்டுமா?
இராணுவத்தின் பல பாலியல் துஷ்பிரயோரயோகத்திற்கான தடயங்களை அதிக பணத்திற்கு விற்க முயன்ற சிங்கள இளைஞர்கள் கடந்த மாதம் மாளிகாவத்தையில் பாதாள உலகக் குழுவினர் என்று கூறி இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் என்கவுண்டர் முறையில் சுட்டக்கொல்லப்பட்டது அனைவுருக்கும் ஞாபகமிருக்கும்.
இப்படித் தடயங்களை அழித்துவரும் அரசின் புலனாய்வுத்துறை. இதற்கு மத்தியில் தங்கள் இராணுவத்தின் இல்லாத தூய்மைபற்றிப் பேச அரச அமைச்சர்களுக்கு என்ன அருகதைஇருக்கின்றதோ. உண்மைகளை ஒளிக்காமல் வெளிக்கொண்டுவரும் வீரப் பெண்மணி ஹில்லரி கிளிங்டன் அம்மையாருக்கு உலகத்தமிழ் மக்கள் சார்பில் நன்றி கலந்த வாழ்ததுக்கள்.!
தொடரட்டும் உங்கள் பணி! உண்மைகள் உறங்குவதில்லை! ஒருநாள் முழுமையாக வெளிவரும்.
- சங்கிலியன் -

No comments:

Post a Comment