Friday, December 17, 2010

லஷ்கரை விட இந்து தீவிரவாதம் அபாயகரமானது ராகுல் – விக்கிலீக்ஸ்

Source:http://www.alaikal.com/news/?p=52466

பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களை விட இந்தியாவில் அதிகரித்து வரும் இந்து தீவிரவாத அமைப்புகளால்தான் இந்தியாவுக்கு பேராபத்து உள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிமோதி ரோமரிடம் இவ்வாறு அவர் கூறியதாக விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிமோதி ரோமரை சந்தித்தபோது ராகுல் இவ்வாறு கூறியதாக ரோமர், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பிய தகவலில் தெரிவித்துள்ளார். அதைத்தான் தற்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ராகுல் காந்தி கூறியதாக ரோமர் அனுப்பிய செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது…
ராகுல் காந்தி என்னைச் சந்தித்தபோது, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்திய முஸ்லீ்ம்களில் சிலர் ஆதரவாக உள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன. இருந்தாலும், இந்தியாவில் அதிகரித்து வரும் இந்து தீவிரவாதம், இந்து தீவிரவாத அமைப்புகளின் வளர்ச்சி அபாயகரமானதாக இருக்கிறது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், முஸ்லீம் தீவிரவாதத்தை விட இந்து தீவிரவாதம்தான் மிகப் பயங்கரமானதாக இருக்கும் என நான் கருதுகிறேன். முஸ்லீம் சமுதாயத்தினருடன் மோதலில் ஈடுபடுவது, பதட்டத்தை ஏற்படுத்துவது என்று இந்து தீவிரவாத அமைப்புகள் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவுக்குள்ளேயே வளர்ந்து வரும், அதிகரித்து வரும் இந்த தீவிரவாத செயல்கள், பாகிஸ்தானிலிருந்து வரும் தாக்குதல்கள், பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய தீவிரவாத குழுக்களை விட இந்தியாவுக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்த வல்லவை என்று நான் கருதுகிறேன். எனவே இதுகுறித்து கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது என்று என்னிடம் ராகுல் தெரிவித்தார் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான ஒரு விக்கிலீக்ஸ் செய்தியில், மும்பை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையிலான பிளவை அதிகரித்து மதவாத அரசியலில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க தூதர் அனுப்பிய செய்தி வெளியாகியிருந்தது. இந்த நிலையில் ராகுல் காந்தி இந்து தீவிரவாதம் குறித்து ரோமரிடம் பேசிய தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாக். தீவிரவாதிகளை ஊக்கப்படுத்தி விட்டார் ராகுல்-பாஜக:

இதற்கிடையே, ராகுல் காந்தியின் பேச்சு குறித்து பாஜக தலைவர் ரவி சங்கர் பிரசாத் கருத்து தெரிவிக்கையில், எல்லை தாண்டிய தீவிரவாதமும், நக்சலைட்டுகளும்தான் இந்தியாவின் பாதுகாப்பு பெரும் ஆபத்தாக உள்ளனர் என்று பிரதமர் கூறி வருகிறார். ஆனால் ஒரே அடியாக தனது பேச்சின் மூலம் ஒட்டுமொத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் ஊக்கம் கொடுத்து விட்டார் ராகுல் காந்தி.
இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானிய தீவிரவாதம், பாகிஸ்தானிய தீவிரவாத குழுக்கள், பாகிஸ்தானிய தீவிரவாதம் ஆகியவற்றுக்கு ராகுல் காந்தியின் பேச்சு பெரும் ஆதரவாக அமைந்துள்ளது.
மேலும், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போரையும் வெகுவாக பலவீனப்படுத்தியுள்ளது ராகுல் காந்தியின் பேச்சு. நமது நாட்டின் பாதுகாப்புக்கும் ராகுல் காந்தியின் பேச்சு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் பிரசாத்.

ராகுல் அப்படிச் சொல்லவில்லை-காங்.
விக்கிலீக்ஸ் தகவல் குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
தீவிரவாதம் மற்றும் மதவாதம் என்பது எந்த ரூபத்தில் வந்தாலும், யார் மூலம் வந்தாலும் அது இந்தியாவுக்கு ஆபத்து என்பதே ராகுல் காந்தியின் கருத்தாகும். தீவிரவாதத்தில் யார் ஈடுபட்டாலும், எந்த வகையில் அதைச் செய்தாலும் அதை நாம் அனுமதிக்க முடியாது, கவனமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ராகுல் காந்தி அவ்வாறு கூறியுள்ளார் என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

கடும் துன்புறுத்தலுக்குள்ளாகும் காஷ்மீர் கைதிகள்:
அதே போல காஷ்மீரில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு கைதானவர்களை இந்திய அரசு கடுமையாக சித்திரவதை செய்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் அமெரிக்காவிடம் கூறிய தகவலை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு இந்த புகாரை செஞ்சிலுவைச் சங்கத்தினர் அமெரிக்க தூதர்களிடம் தெரிவித்துள்ளனர்.
தங்ஹக்: ஐய் உய்ஞ்ப்ண்ள்ட்
இதுகுறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் அமெரிக்க தூதர்களிடம் கொடுத்த அறிக்கைகளில், காஷ்மீரில் கைதிகள் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்திய அரசுக்கு நாங்கள் பலமுறை கோரியும் கூட அது கண்டுகொள்ளாமல் உள்ளது. மேலும் இந்த சித்திரவதையை இந்திய அரசு நியாயப்படுத்துகிறது.
இந்தியாவின் சித்திரவதைக்குள்ளாவோர் தீவிரவாதிகள் அல்ல, மாறாக அப்பாவி மக்கள்தான் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Kids enjoying evening in village