Thursday, July 8, 2010

ஜ.நா முன் நடந்த நாடகம் அம்பலம்: கோத்தபாய, விமல் உரையாடல் வெளியாகியுள்ளது

Source: www.athirvu.com


அரசின் ஆதரவுடனும் ஆசிர்வாதத்துடனுமே ஐ.நாவின் கொழும்பு அலுவலகம் மீதான முற்றுகை அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

நேற்றுமுன் தினம் மாலை ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர்
விமல் வீரவன்ஸ் வீதியில் நின்றவாறு பாதுகாப்பமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவுடன் தொலைபேசியில் பேசி விட்டு அத்தொலைபெசியை பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் கையளித்தார்.
பாதுகாப்பமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆர்பாட்டக்காரர்களை கலைக்கும் நடவடிக்கையை உடனடியாக விட்டு விட்டு கலைந்து செல்லுங்கள் என்று அந்த அதிகாரிக்கு அத்தொலைபேசியில் உத்தரவிட்டிருக்கின்றார். அந்த பொலிஸ் அதிகாரிக்கும் பாதுகாப்பமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை வெளிப்படுத்தி நிற்கும் ஆடியோ ஒன்று எமக்கு கிடைத்துள்ளது.




இந்த உரையாடல் சிங்கள மொழியில் அமைந்துள்ளது. அதன் தமிழ் வடிவத்தை எழுத்தில் தருகின்றோம்.

பொலிஸ் அதிகாரி:- சேர் ... உங்களுடன் கதைத்தாரென.. அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறுகின்றார்?

கோட்டா:- இந்த இடத்துக்கு பொலிஸை அனுப்ப வேண்டாம் என்று நான் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு இட்டிருந்தேனே?

பொலிஸ் அதிகாரி:-சேர் ... பொலிஸ் மா அதிபர்தான் எங்களை இங்கு போக சொன்னார்.ஆகவேதான் வந்திருக்கிறோம்.

கோட்டா:- இந்த இடத்தில் இருந்து பொலிஸார் உடனடியாக வாபஸ் பெற வேண்டும். ஒரு பொலிஸ் கூட மிஞ்சக் கூடாது.

பொலிஸ் அதிகாரி:- சரி சேர்.சரி

கோட்டா:- தேவை இல்லாத வேலை.ஏன் நீங்கள் இந்த ஆட்களை அடித்தீர்கள்?

பொலிஸ் அதிகாரி:- சரி சேர்.சரி

கோட்டா:- ஏன் நீங்கள் அடித்தீர்கள்? பொலிஸ் மா அதிபரை இன்றிலிருந்து வேலையில் இருந்து தூக்கி விடுவேன்.

பொலிஸ் அதிகாரி:- சரி சேர்.

கோட்டா:-எல்லாப் பொலிஸ்காரர்களும் இந்த இடத்தை விட்டு வெளியேறிச் செல்லுங்கள்.

பொலிஸ் அதிகாரி:- நல்லது சேர்.

கோட்டா:- ஒரு பொலிஸ் கூட மிஞ்சக் கூடாது.

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...