Thursday, July 29, 2010

3 தினங்களுக்கு முன்னர் மணலாறில் நடந்தது என்ன?

Source: www.athirvu.com

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் மணலாறுக் காடுகளில் இராணுவத்தினர் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்றும், அதில் இடம்பெற்ற தாக்குதலில் சுமார் 40 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது. இராணுவத்தில் உள்ள சரத் பொன்சேகாவுக்கு ஆதரவான சிலரையே இவ்வாறு, கொண்டுசென்று கோத்தபாயவுக்கு ஆதரவான படையினர் கொன்றனர் என்றும் செய்திகள் கசிந்தது. இருப்பினும் தடுப்பு முகாமில் உள்ள புலிகளின் உறுப்பினரை புலிகளின் சீருடைகளை அணியச் செய்து அவர்களை, காட்டிற்கு கொண்டுசென்று இராணுவம் அவர்களை சுட்டுக்கொலைசெய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது மணலாறில் இருந்து வெளியாகியுள்ள புகைப்படங்களில் இவை நன்கு புலனாகிறது. இராணுவத்தினர் மணலாறு காட்டிற்கு செல்லும் வழியில் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன. அதில் இராணுவத்தினர் பாரிய தாக்குதல் எதுவும் நடாத்தும் திட்டத்தோடு செல்லவில்லை என்று புலனாகிறது. சிறிய ரக துப்பாக்கிகள் சகிதம் வேறு நடவடிக்கைக்காகவே இவர்கள் புறப்பட்டது தெள்ளத்தெளிவாகிறது. இராணுவத்தினர் தாம் விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்பு சாதனங்களைக் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும் இராணுவத்தினர் காட்டுப்பகுதிக்கு எதற்காகச் சென்றனர், அங்கு நடைபெற்றது என்ன, என்பது இதுவரை ஆதாரத்தோடு வெளியாகவில்லை. இராணுவ முகாமில் இருந்து மணலாறு நோக்கி புறப்பட்ட இராணுவத்தையே இப் படத்தில் காண்கிறீர்கள். அடர்ந்த காடுகளுக்குள் நடந்தது என்ன என்பது குறித்து இதுவரை சரியாகத் தெரியவில்லை.

No comments:

Post a Comment

Kids enjoying evening in village