Thursday, March 17, 2011

வன்னி யுத்தத்தில் இரண்டு கைகள்,கண்களை பறிகொடுத்த ஒரு உறவின் வாழ்வு! முடிந்தால் உதவுங்கள்!

Source: http://www.puthinamnews.com/?p=21619



இலங்கையின் வடக்கே வன்னிப்பிராந்தியத்தில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இரண்டு வருடங்களைக் கடந்துள்ள போதும் அதனால் ஏற்பட்டுள்ள வடுக்கள் இன்னும் மறையாமல் இருக்கின்றது.
சிறிலங்கா அரசின் மனிதாபிமான நடவடிக்கை என்ற போர்வையில் இடம் பெற்ற கொடிய யுத்தத்தின் பலனாக நாம் தற்போது பல துயரங்களை சுமந்து நிற்கின்றோம்.
யுத்தத்தின்போது ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்காண பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்காண உறவுகள் காணாமல் போயுள்ளனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்காண மக்கள் தங்களின் அங்கங்களை இழந்துள்ளனர். மக்களின் வீடுகளும்,உடமைகளும் அளிக்கப்பட்டுள்ளது.
இது தான் இலங்கை அரசின் மனிதாபிமான நடவடிக்கை எம்மக்களுக்கு கொடுத்த பரிசு. இது ஒருபுறமிருக்க வன்னியில் இடம் பெற்ற யுத்தத்தினால் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் மாந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈச்சலவக்கை கிராமத்தினைச்சேர்ந்த முருகவேல் நிஸாந்தன்(வயது-22) ஏற்பட்ட யுத்த பாதிப்பு கொடூரமானது.
மக்கள் யுத்தத்தின் தாக்குதலின் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக ஒவ்வொரு இடமாக மாறி மாறி சென்று கொண்டிருந்தனர்.
அதன் போது நிஸாந்தன், அவருடைய தாய் முருகவேல் செங்கம் மற்றும் நிஸாந்தனின் சகோதரர்கள் மூவர் உட்பட ஐந்து பேரும் இடம் பெயர்ந்து சென்று கொண்டிருந்த போது 03-07-2007 அன்று புளியங்குளம் பகுதியில் இடம் பெற்ற செல் தாக்குதலின் போது நிஸாந்தன் படுகாயமடைந்தார்.
ஏனையவர்கள் சிறு காயங்களுக்குள்ளானர். நிஸாந்தனுக்கு செல் தாக்குதலின் போது இரண்டு கையினையும் முழங்கையுடன் இழந்ததோடு இரண்டு கண்களினதும் பார்வையினை முற்றாக இழந்துள்ளார். நிஸாந்தனின் தந்தையான முருகவேல் ஏற்கனவே சுகவீனமான நிலையில் மரணமானார்.
பின் நான்கு பிள்ளைகளையும் தாயாரான செங்கம் பராமரித்து வந்துள்ளார். தந்தையற்ற நிலையில் பிள்ளைகளை எவ்வித குறையுமின்றி பாதுகாத்து வந்த போதும் இந்த கொடிய யுத்தம் எனது மகனின் வாழ்வை நாசப்படத்தி விட்டதாக செங்கம் புலம்பிக்கொண்டிருக்கின்றார்.
தற்போது நிஸாந்தனை பராமரிப்பதற்கு யாராவது ஒருவர் அவர் அருகில் எந்த நேரமும் இருக்கவேண்டும் என தெரிவிக்கின்றார் தாயார் செங்கம்.
உழைத்து வயதான என்னையும் சகோதரர்களையும் பராமரிக்க வேண்டிய வயதில் கொடுமையான யுத்தத்தில் எனது மகனை முடமாக்கி எங்கும் செல்ல முடியாதவாறு ஒரு இடத்தில் ஒதுக்கிவைத்துள்ளதாக தாயார் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றார். அதுமட்டுமின்றி யுத்தத்தினால் எங்களது வீடும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் அங்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட் எனது மகனுக்கு அரசாங்கத்தினால் எவ்வித உதவிகளும் சரியான முறையில் இதுவரை வழங்கப்படவில்லை. எனினும் எனது மகனுக்கு இரண்டு கைகளையும் பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியாது.
ஆனால் இரண்டு கண்களில் ஒரு கண்ணுக்காண பார்வையினை ஏற்படுத்த முடியும். ஆனால் அதற்கானபணத்தினை எங்களால் செலுத்த முடியாது.
எனவே வாழ்க்கையில் பலவற்றை இழந்த எனது மகன் நிஸாந்தனுக்கு கண் பார்வையினை ஏற்படுத்த எம் உறவுகள் முன்வந்து பங்களிப்பினை செய்யுமாறு தாயார் வேண்டுகோள் விடுக்கின்றார்.
அது மட்டுமின்றி பழைய நிலைமைக்கு வராவிட்டாலும் கண்பார்வையினை பெற்று எனது தாயாருக்கான சிரமத்தை சற்று என்னால் குறைக்க முடியும் என நிஸாந்தான் நம்பிக்கை தெரிவிக்கின்றார்.
நிஸாந்தனின் சிகிச்சைக்கு பண உதவி செய்ய விரும்புபவர்கள் அவருடைய தாயருடைய வங்கி கணக்கிற்கு பணம் வைப்பிலிட முடியும்.
நிசாந்தனுக்கு உதவி செய்யவிரும்புபவர்கள் editor@eelanation.com என்ற மின்னஞ்சலில் +61 420 686 030 என்ற தொலைபேசியில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். உதவிசெய்ய விரும்புபவர்களுக்கு பயனாளியுடன் தொடர்பு விபரங்களை பகிர்ந்துகொள்ளமுடியும்.

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...