Saturday, January 29, 2011

துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் கோரி கூடுதல் டி.ஜி.பி.யிடம் மீனவர்கள் மனு


Source: http://www.dinamani.com/
 
சென்னை, ஜன. 28: இலங்கை கடற்படையினரிடமிருந்து தற்காத்துக் கொள்ள பாரம்பரிய மீனவர்களுக்கு துப்பாக்கி வைத்து கொள்ள உரிமம் வழங்க வேண்டும் என காவல்துறை கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணனிடம் மீனவர் அமைப்பினர் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தனர்.

தென்னிந்திய மீனவர் நலச் சங்கம், கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு மீனவர் மக்கள் பேரவை ஆகிய மூன்று மீனவர்கள் சங்கத்தின் சார்பாக இந்த மனு அளிக்கப்பட்டது.

மனுவின் விவரம்: பாரம்பரியமாக மீன்பிடி தொழில் செய்து வரும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறார்கள்.

இதனால் கடந்த ஆண்டுகளில் பல மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள். இந்த துப்பாக்கி சூடு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

மேலும் மீனவர்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விசைப்படகுகள், வலைகள், நவீன மீன்பிடிக் கருவிகள் உள்ளிட்டவை இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பல மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் படுகாயமடைந்தும், உடல் ஊனமுற்ற நிலையிலும் பல மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இதனால் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாமல் அவர்களின் குடும்பத்தினர் வறுமையில் வாடி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்புத் தர வேண்டிய இந்திய கடற்படையும், கடலோரக் காவல்படையும், தமிழக காவல்துறையும் உரிய பாதுகாப்பைத் தர இயலவில்லை.

எனவே, தமிழகத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள காரணத்தால், ஒவ்வொரு மீனவருக்கும் தற்காப்புக்காக குறைந்தபட்சம் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...