Monday, June 28, 2010

ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி

Source: www.maalaimalar.com

25 ரூபாயே உள்ள பெட்ரோலுக்கு சுமார் 30 ரூபாய் வரை வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் மற்ற எந்த பொருளுக்கும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசலுக்கு அதிகமாக வரி விதிக்கப்படுகிறது.

இதனால்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோலை கச்சா எண்ணையில் இருந்து பிரித்து எடுத்து மார்க்கெட்டுக்கு வெளியிடும் போது அதன் விலை ரூ.25 அளவிலேயே உள்ளது.

ஆனால் அதன் மீது மத்திய அரசும், மாநில அரசும் விதிக்கும் பல்வேறு வரிகள் 30 ரூபாய்க்கும் மேல் உள்ளது. இதனால்தான் பெட்ரோல் விலை ரூ.55 வரை உள்ளது.

பெட்ரோலுக்கு கலால் வரி, கல்வி வரி, சுங்க வரி, மாநில வாட்வரி, போக்குவரத்து கட்டணம், என விதித்து பல்வேறு வகையில் விலையை ஏற்றுகின்றனர்
.

No comments:

Post a Comment

Kids enjoying evening in village