Saturday, February 5, 2011

"தினமலர்' செய்தி எதிரொலியால் கல்வித்துறை அதிரடி நடவடிக்கை


Source:http://www.dinamalar.com/News_Detail.asp?Id=181019

சென்னை:"தினமலர்' செய்தி எதிரொலியாக, மேடவாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 300 மாணவர்களுக்கு நேற்று மதியம் சத்துணவு வழங்கப்பட்டது.
சென்னை, மேடவாக்கத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 1,446 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், பல கிராமங்களை சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.இப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இதனால், மாணவ, மாணவியர் பட்டினியோடு கல்வி பயிலும் அவலம் காணப்பட்டது. 
 
இதுகுறித்து, தினமலர் நாளிதழ், நேற்று, படத்துடன் கூடிய செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக, முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம், வட்டார வளர்சி அலுவலர் மற்றும் சேப்பாக்கம் சமூக நலத்துறை இயக்குனர் ஆகியோர் பள்ளியை நேரில் வந்து பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, மாணவர்களுக்கு உடனடியாக சத்துணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பள்ளியின் அருகில் உள்ள துவக்கப்பள்ளியில் இருந்து தற்காலிகமாக உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது. 
முதற்கட்டமாக, 300 மாணவர்களுக்கு, நேற்று மதியம் சத்துணவு வழங்கப்பட்டது. தட்டுகள் வழங்க முடியாத காரணத்தால்,பேப்பர் தட்டில் உணவுகள் வழங்கப்பட்டது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,"மேடவாக்கம் அரசு பள்ளியில் இன்று முதல் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படும்.தற்காலிகமாக பத்து நாட்களுக்கு அருகில் உள்ள துவக்கப் பள்ளியில் உணவு சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
பின், பள்ளி வளாகத்திலேயே சமைத்து நிரந்தரமாக வழங்கப்படும். தற்போது 300 மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 667 மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க கோரியுள்ளனர். அவர்களுக்கும் வழங்க விரைவில் ஏற்பாடு செய்யப்படும்,' என்றனர்.
பெற்றோர், ஆசிரியர்கள் மகிழ்ச்சி: மேடவாக்கம், அரசு பள்ளியில் மாணவ, மாணவியருக்கு நேற்று மதியம் சத்துணவு வழங்கப்பட்டதை அடுத்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் "தினமலர்' நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், "மாணவர்களுக்கு சத்துணவு வழங்க கடந்த மூன்று வருடங்களாக கல்வித் துறைக்கு கோரிக்கை விடப்பட்டது. தற்போது "தினமலர்' செய்தி எதிரொலியாக மாணவர்களுக்கு மதிய உணவு கிடைத்துள்ளது,' என்றனர்.

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...