Saturday, February 1, 2014

கலைஞர் டிவிக்கும் 2ஜி வழக்குக்கும் என்ன தொடர்பு ?

Source:http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=1922%3A2014-02-01-03-39-58&catid=1%3A2010-07-12-16-58-06&Itemid=19

ஜாபர் சேட்டுக்கும், 2ஜி வழக்கில் குற்றவாளியான, கலைஞர் டிவியின் முன்னாள் மேலாண் இயக்குநர் சரத்குமார் இடையே நடந்த உரையாடலை சவுக்கு வாசகர்களுக்காக பிரத்யேகமாக வெளியிடுவதில் சவுக்கு பேருவுவகை கொள்கிறது. 

ஜாபர் சேட் : ஷரத்... ஷரத்...
வினோதகன் :  ஷரத்தும் அமிர்தமும் இருக்காங்க. 
ஷரத் ரெட்டி :  ஹலோ
ஜாபர் சேட் :  ஷரத் உங்கள் போன் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கிறதே..
ஷரத் ரெட்டி : ஆமாம் சார்... நான் போனை காரிலேயே வைத்து விட்டேன். தலைவர் வீட்டுக்கு வந்துள்ளேன். 
ஜாபர் சேட் :   ஓ.கே... ஓ.கே...
ஷரத் ரெட்டி :  சார். அந்த சினியுக் ஆட்கள் டெல்லி மற்றும் மும்பையிலிருந்து அழைத்தார்கள். அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி, அனேகமாக இந்த வாரம் வந்து விடுவார்கள். இந்த முறை கேள்விகளோடு வரமாட்டார்கள். வந்து இயக்குநர்களை கைது செய்து விடுவார்கள்.  அதனால் தயாராக இருக்குமாறு சொன்னார்கள். நான் எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், பாஸ், எங்கள் தகவல் 100 சதவிகிதம் சரி.  உங்கள் தலைவரிடம் சொல்லி விடுங்கள்.  நான் இது மதியம் என்பதால் சொல்ல முடியாது என்று கூறினேன். இதை எப்படி கையாள வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.  இது மதியம் என்பதால் சொல்ல முடியாது என்று சொன்னேன்.  சரி... அதை எப்படிக் கையாள்வது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.  இதைத்தாண்டி எங்களால் எதுவும் சொல்ல முடியாது.  
ஜாபர் சேட் :   போன முறை கூட அவர்கள் இதைத்தானே சொன்னார்கள்... 
ஷரத் ரெட்டி :  போன முறை அவர்கள்...... (குரல் தெளிவில்லை) 
ஜாபர் சேட் :   டிவி அலுவலகத்துக்கு வருவார்கள் என்று சொன்னார்கள், நினைவிருக்கிறதா ?
ஷரத் ரெட்டி :  ஆமாம்... இப்போதும் சொன்னார்கள். எல்லாம் தயாராக இருக்கிறது. இப்போது கைதுக்கு தயாராகிறார்கள்.  விசாரணைக்கு அல்ல.  கைதுக்கு.  ஆகையால் இது குறித்து நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.  நீங்கள் உங்கள் சோர்ஸ்களில் விசாரித்து விட்டு, இதை உறுதி செய்யுங்கள்.  அமிர்தம்(கலைஞர் டிவியின் ஒரு இயக்குநர்) சாரை அழைத்தேன்  ஒரு விழாவுக்கு போய் விட்டார்.  ராமநாராயணன் பேத்தியின் விழா.  முதலில் அவர் இதை விட்டு விடு என்றார். பிறகு முதலில் சண்முகநாதன் சாரிடம் சொல்லுங்கள் (கருணாநிதியின் உதவியாளர்) என்றார்.  அப்போது நான் உங்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். நாங்கள் இங்கே வருகிறோம் என்று.  இங்கே வந்த பிறகு சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தோம். பிறகு மீண்டும் வரச் சொல்லி தொலைபேசி அழைப்பு வந்தது. 
ஜாபர் சேட் :   இல்லை. நான்தான் சண்முகநாதனிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்னேன்.  முதலில் நாம் இதை சரி பார்க்க வேண்டும். 


ஷரத் ரெட்டி : கரெக்ட் சார். முதலில் நாம் சரி பார்த்து 100 சதவிகிதம் சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும். இப்போதுதான், சிதம்பரம் மற்றும் மொத்த காங்கிரஸ் ஆட்களும் வந்துள்ளார்கள்.  அதனால் நாங்கள் காத்திருக்கிறோம்.  டி.ஆர் பாலு சார், அவர் இதை பார்த்துக் கொள்வதாக சொன்னார். இதுதான் இப்போதைய நிலை.  
ஜாபர் சேட் :   தலைவரிடம் சொல்லும்போது, என்னிடமும் இதை சொல்லி விட்டதாக சொல்லுங்கள். 


ஷரத் ரெட்டி : நன்றி சார்.  நன்றி. 
ஜாபர் சேட் :   நானும் சரிபார்த்துக் கொண்டிருக்கிறேன்.  50-50 சான்ஸ்தான் இருக்கிறது. யாரும் உறுதி செய்ய மாட்டேன் என்கிறார்கள். வாய்ப்பே இல்லை என்று சொல்கிறார்கள்.  இரண்டு மூன்று லாஜிக் சொல்கிறார்கள்.  ஒன்று, மூத்தவர்களைத்தான் முதலில் கை வைப்பார்கள் என்று சொல்கிறார்கள். 
ஷரத் ரெட்டி : கரெக்ட் சார். 
ஜாபர் சேட் :   அது நடக்கவில்லை.  அழுத்தம் தர வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்யலாம். அப்போதுதான் அந்த திசையில் பார்க்க மாட்டார்கள் என்பதற்காக.  பரிவர்த்தனை விபரங்களை தெரிவித்து விட்டோம். அவர் இயக்குநர் இல்லை என்பதையும் (கனிமொழி) தெரிவித்து விட்டோம்.  அவர் பங்குகளை மட்டுமே வைத்துள்ளார்.  மற்றொரு இயக்குநனர் அங்கே இல்லை.  இது போன்ற விவகாரங்கள்... ....
ஷரத் ரெட்டி :  சார்.. அந்த பரிவர்த்தனை நடக்கையில் அவர் (கனிமொழி) அங்கே இருந்தார்.  அதுதான்...
ஜாபர் சேட் :   என்ன...? என்ன...? 
ஷரத் ரெட்டி : சார் பரிவர்த்தனை நடந்தபோது அவர் அங்கே ஒரு இயக்குநர். 
ஜாபர் சேட் :   உண்மையாகவா ?
ஷரத் ரெட்டி :  ஆமாம் சார். 
ஜாபர் சேட் :   அன்றைக்கு இல்லை என்று சொன்னீர்களே... 
ஷரத் ரெட்டி : சார் அவர் டிசம்பர் மாதத்தில் இயக்குநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்  எல்லாம் பழைய தேதிகள் சார்.  நான் இப்போது உட்கார்ந்து சரி பார்த்துக் கொண்டிருக்கிறேன். 
ஜாபர் சேட் :   இல்லை.. டிசம்பரில் ராஜினாமா.  அது உள்ளே வருகிறதா என்ன?
ஷரத் ரெட்டி : சார். பணம் 2008ல்தானே வந்தது? 
ஜாபர் சேட் :   ஓ... இந்த டிசம்பரில்தானே அவர் ராஜினாமா செய்தார். எந்த டிசம்பர்? 
ஷரத் ரெட்டி : ஆமாம் சார்.  இந்த டிசம்பரோ... போன டிசம்பரோ... ஆனால், அவர் அந்த காலகட்டத்தில் இயக்குநராக இருந்தார்.  நான் ஒரு 100 பக்கங்களை பின்தேதியிட்டு நேற்றுதான் கையெழுத்திட்டேன்.  எல்லாவற்றையும் நகல் எடுத்து படித்துக் கொண்டிருக்கிறேன். 
ஜாபர் சேட் :   ம்ம்.
ஷரத் ரெட்டி : பிரச்சினை என்னவென்றால், நாம் பல விஷயங்களை கேள்விப்படுகிறோம்.  பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதற்கு தகுந்தாற் போல, ஆவணங்களை திருத்துகிறோம்(Manipulating). அதனால் பக்கங்கள் மாற்றப்படுகின்றன.  
ஜாபர் சேட் :   ம்ம்.. 
ஷரத் ரெட்டி : கனி மேடம் 2007-ல் இல்லை.  2007-க்குப் பிறகு பெரியம்மா (தயாளு அம்மாள்) இருந்தார்.
ஜாபர் சேட் :  பெரியம்மா இருந்தது எனக்குத் தெரியும்.  அவருக்கு ஆங்கிலமும் தெரியாது, தமிழும் தெரியாது என்பதால் அவர் இருந்தார்.   
ஷரத் ரெட்டி : கரெக்ட்... கரெக்ட்... 
ஜாபர் சேட் :   அவரை இதோடு அவர்களால் இணைக்க முடியாது. இல்லையென்றாலும் கூட, அந்தப் பரிவர்த்தனை உண்மைதானே.. அது வெளிப்படையான பரிவர்த்தனை.  காசோலை மூலமாக நடந்தது. 
ஷரத் ரெட்டி : அது சரிதான் சார்.  ஆனால், எந்த கோணத்தில் இது போகப்போகிறது என்பதுதான் கேள்வி.  
ஜாபர் சேட் :   அதைத்தான் நான் சொல்கிறேன்.  என்னுடைய ஆட்கள், என் சோர்ஸ்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இது சிக்கலாகக் கூடியது.  அதை அவர்கள் செய்ய மாட்டார்கள்.  முதலில் விசாரணை செய்வார்கள்.  அது நடந்தாலும் கூட, விசாரணையில் அவர்கள் திருப்தி அடையாவிட்டால், இதில் ஏதோ விவகாரம் இருக்கிறது என்று அவர்கள் நினைத்தால்... கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தால்.. அல்லது சாட்சிகளை அழித்து விடுவீர்கள் என்று நினைத்தால், அப்போதுதான் அதற்காக (கைது) போவார்கள். 
ஷரத் ரெட்டி : அதற்குப் பிறகு ரொம்பவும் தீவிரமாக இருப்பார்களே... 
ஜாபர் சேட் :   ஆமாம்.
ஷரத் ரெட்டி : நான் உங்களிடம் சொல்லி விட்டேன்.  நீங்கள் சண்முகநாதன் சாரிடம் பேசுங்கள்.  இதை அவரிடம் சொல்லுங்கள். தமிழில் சொல்லுங்கள். என்னை விட நீங்கள் சொன்னால் பெட்டராக இருக்கும்  
ஜாபர் சேட் :   சரி... சரி.... நான் சொல்கிறேன்.  நீங்கள் தலைவரைப் பாருங்கள். இதையும் சொல்லுங்கள்.  நான் மாலையில் தலைவரிடம் சொல்லுகிறேன். 
ஷரத் ரெட்டி : ஓகே சார்.. நன்றி சார். 

No comments:

Post a Comment

Kids Enjoying in Village Pond