நிதி நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் சிறிலங்கா அனைத்துலக நாடுகளிடம் பிச்சை எடுக்கிறது



பெரும் நிதி நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் சிறிலங்கா அரசு, வன்னியில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை வதைமுகாம்களில் வைத்து தொடர்ந்த பராமரிப்பதற்காக அனைத்துலக நாடுகளிடம் பிச்சை எடுத்து வருகின்றது என கொழும்பு வார ஏடான 'சண்டே லீடர்' தெரிவித்துள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள விபரம் வருமாறு:
பணமே இல்லாத மகிந்த ராஜபக்ச அரசு, மேலும் பணம் பெறுவதற்காக அனைத்துலக நாடுகளின் பிச்சை கேட்டு கூத்தாடி வருகின்றது. வடபகுதியில் 2 லட்சத்து 50 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களைத் தொடர்ந்தும் முகாம்களில் வைத்திருப்பதற்காகவே இவை எல்லாம்.
இடம்பெயர்ந்த மக்களின் பராமரிப்பு விடயத்தில் ஏற்கனவே 225 மில்லியன் டொலர் நிதி உதவிகள் சிறிலங்காவிற்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அது போதாத நிலையில், மேலும் நிதி தேவை என அனைத்துலக நாடுகளிடம் புதிய கோரிக்கை விடுத்துள்ளது நாடு.
இடம்பெயர்ந்த மக்களின் நாளாந்தப் பணிகளுக்கான நிதித் தேவையை சமாளிக்க உடனடியாக உதவி செய்யுமாறு சிறிலங்கா நிபுணர்கள் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களின் நிலை தொடர்பில் விரைவில் எந்தவிதமான முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என்றால் நிதி உதவிகள் அனைத்தையும் நிறுத்திவிடப் போவதாக முதன்மை நிதி வழங்குநர்களில் ஒருவரான பிரித்தானியா அண்மையில் எச்சரித்திருந்தது. இந்த விடயத்தில் அரசு நடந்து கொள்ளும் விதம் திருப்தி அளிக்கவில்லை என்றும் அது தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்தே நிதித் தேவை குறித்த அரசின் புதிய கோரிக்கையை அனைத்துலக சமூகத்தின் முன்வைத்துள்ளது.
"பிரித்தானிய அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் மைக் போஸ்டர் தெரிவித்த காட்டமான கருத்துக்கள் அரசினால் தூக்கி எறியப்பட்டுவிடவில்லை. அதேசமயம் அந்தக் கருத்துக்கள் அரசை அச்சமடையும் சூழலுக்குள் தள்ளிவிட்டுள்ளன" என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அனைத்துலக நாடுகளுக்கு கோரிக்கைகள் விடுக்கப்படும் அதேநேரம், பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை மக்களிடமும் நிதி உதவிக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
"சிறிலங்கா அரசு அனைத்துலக நாடுகளிடம் நிதி உதவிகளைக் கோரிவரும் அதேசமயம், பிரித்தானிய தூதரகம் அதேபோன்ற ஒரு கோரிக்கையை புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் மக்கள் மத்தியில் விடுக்க விரும்புகின்றது. இந்த முக்கியமான தருணத்தில் அவர்களின் உதவிகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன" என லண்டனில் உள்ள சிறிலங்காத் தூதரகம் தெரிவித்துள்ளது.
நிதி உதவிகளை மட்டுமே தற்போதைக்கு தூதரகம் பெறும் என்றும் பொருள் உதவிகளைப் பெறுவதற்குத் தூதரகம் தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் மனித உரிமைகள் மற்றும் பேரிடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க மற்றும் அமைச்சின் செயலாளர் ரஜீவ விஜயசிங்க ஆகியோரைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை.
அரசின் நிதி நிலைமை இப்படி இருந்தபோதும் படைத்துறைக்கான செலவை 20 விழுக்காட்டினால் அது கடந்த வியாழக்கிழமை அதிகரித்துள்ளது.
வன்னியில் போரினால் இடம்பெயர்ந்த அரச பணியாளர்களுக்கான சம்பளப் பணத்தை வழங்குவதற்காகவும் போரில் இறந்து போனவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்காகவும் 33 மில்லியன் ரூபாவை நாடாளுமன்றம் மேலதிகமாக அனுமதித்துள்ளது.

இவ்வாறு அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



IN ENGLISH:


Cash strapped government on begging spree
By Munza Mushtaq
Suffering from a massive financial debacle, the cash-strapped Mahinda Rajapaksa government is on an international begging spree in an effort to collect more aid to upkeep some 250,000 Internally Displaced Persons (IDPs) in the north.
Despite receiving a sum of $ 225 million in foreign aid so far, the government appears to be suffering from a massive financial shortfall and has thus made a fresh appeal to the international community and the Sri Lankan expatriates seeking urgent help to maintain the IDPs’ day to day maintenance costs.
The fresh attempt comes following a stern warning issued by Britain, one of the largest aid providers who expressed disappointment in the manner the government was handling the displaced and even threatened to withdraw funding if no significant progress is seen soon.
“The ultimatum issued by British Development Minister Mike Foster has not gone down well with the government and it has thrown them into panic mode,” sources told The Sunday Leader yesterday.
Meanwhile, in a appeal targeted at the Sri Lankan expatriates living in Britain, the Sri Lankan High Commission in the UK said, “While the Government of Sri Lanka is appealing to the international community for financial and material support, the Sri Lanka High Commission in London wishes to make a similar appeal to the Sri Lankan diaspora living in London for appropriate contribution to this noble cause. This is a unique opportunity to express your solidarity with the needy people and reinforce your patriotism and commitment to your motherland.”
The High Commission will only be accepting cash donations citing purposes of convenience and no material donations are currently being accepted. Continuous attempts made by The Sunday Leader to contact Human Rights and Disaster Management Minister Mahinda Samarasinghe proved futile. Human Rights Ministry Secretary Rajiva Wijesinha was also not available for comment, at the time this edition went to press.
Meanwhile, the government raised its defence expenditure by another 20 percent on Thursday.
Parliament approved an additional Rs. Rs. 33 billion to be utilised for payment of salaries, to beef up former LTTE controlled areas and to pay compensation to those who lost their lives during the war.


Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire