தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இவர்கள்?

இலங்கை நாட்டுக்கு சுற்றுலா சென்று மிருக காட்சி சாலைகளை கண்டு கூண்டுகளை நடாத்தும் ஆசாமிகளை சால்வை போட்டு நன்றி தெரிவிக்கும் காக்கை கூட்டம்.




இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து பேசிய தமிழக எம்பிக்கள் குழுவினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10ஆம் தேதி மதியம் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.முதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திய தமிழக குழுவினர், கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்களிடம் குறை கேட்டனர்.மாலையில், வவுனியாவில் உள்ள மனிக் பார்ம் வளாகத்தில் உள்ள 5 முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை தமிழக குழுவினர் பார்வையிட்டனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வு நிகழ்ச்சி, முழுமையாக வீடியோ படமாக எடுக்கப்பட்டது. பின்னர் குழுவினர் பல பிரிவுகளாக சென்று தமிழ் அகதிகளிடம் குறை கேட்டனர்.பின்னர் இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலையகப்பகுதிக்கு தமிழக குழுவினர் திங்கட்கிழமை சென்றிருந்தனர். இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பின் பேரில், ஹெலிகாப்டர் மூலம் நோர்வூட் மைதானத்தில் தமிழக குழுவினர் வந்து இறங்கினார்கள். பின்னர் அங்கிருந்து ஹட்டன் நோக்கி வாகனத்தில் பயணம் செய்தனர்.திங்கள்கிழமை காலை 10.45 மணிக்கு ஹட்டன் நகருக்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு, வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.தேயிலை தோட்டங்கள் நிறைந்த நுவரேலியாவுக்கும் தமிழக குழுவினர் சென்றனர். தொண்டமான் பெயரில் அமைந்துள்ள தோட்டப்பயிர் பயிற்சி மையத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். இரவில், மலையக பகுதியில் தமிழக குழுவினர் தங்கினார்கள்.இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை தமிழக குழுவினர் திங்கட்கிழமை சந்தித்து பேசுவதாக இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) ராஜபக்சவுடன் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று திமுக கூட்டணி எம்பிக்கள் அந்நாட்டு ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து பேசினார்கள்.
தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எம்பிக்கள் ராஜபக்சவிடம் வலியுறுத்தினர். இந்த சந்திப்பின் போது இலங்ûகை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானும் உடனிருந்தார்.
இதன்பொழுது மு.க.கனிமொழி, தொல்.திருமாவளவன், ரி.ஆர்.பாலு ஆகியோரை உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் மகிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது. இதேயிடத்தில் பசில் ராஜபக்சவை ரி.ஆர்.பாலு ஆரத்தழுவிக்கொண்டார்.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire