தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும் – வே. மதிமாறன்

ஜூனியர் விகடன் பத்திரிகையில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ், இலங்கை அரசிடம் காசுவாங்கிக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகவும், அதற்காகத்தான் ‘தமிழணர்வு’ கொண்ட ஜூனியர் விகடன் அவரை வேலை நீக்கம் செய்ததாகவும் ஒரு செய்தி சமீபத்தில் பரபரப்பாக அலசப்பட்டது.
தமிழ்ப் பத்திரிகைகள், இலங்கை அரசிடம் காசு வாங்கிக் கொண்டு படுகொலை செய்கிற ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக, தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிடுகிறது என்பது ஊர் அறிந்த ரகசியம். இதில் ஜூனியர் விகடன் விகேஷ் மட்டுமல்ல, இன்னும் பல ‘எட்டப்பன்கள்-பச்சைத் தமிழன் புதுக்கோட்டை மகாராஜா ரகுநாத தொண்டைமான்கள் -ஆற்காட்டு நவாப்புகள்’ பத்திரிகை உலகில், பல பெரிய பொறுப்புக்களில் இருக்கிறார்கள்.. (நக்கீரன் மட்டும்தான் அம்சா சதியை அம்பலப்படுத்தியது )
ஆட்சியில் நடக்கும் ஊழல்களை துப்பறிந்து உலகத்துக்கு அம்பலப்படுத்துவதாக மார்தட்டுகிறது ஜூனியர் விகடன். ஆனால், தன் நிறுவனத்தில் இப்படி ஒரு ஊழல் நடப்பது உலகத்துக்கே தெரிந்த பிறகும், தனக்கு தெரியாமல் ஜூனியர் விகடன் துப்பு கெட்டு கிடந்தது எதனால்?
திடீர் என்று தன்னை நல்லவனாக காட்டிக் கொள்வதற்கு விகேஷை மட்டும் பலியிட்டது எதனால்?
இதே ஜீனியர் விகடனும், இன்னும் பல பத்திரிகைகளும் ஈழத்தமிழர்களின் கொலைகளை நியாப்படுத்தியும், போராளிகளை காட்டிக் கொடுத்த துரோகிகளின் பேட்டிகளை பிரசுரித்தபோதும், எத்தனை பேர் இந்த பத்திரிகைகளை கண்டித்தார்கள்?
மாறாக, ‘நம்ம கிட்ட ஒரு பேட்டி எடுக்க மாட்டானா? நம்மள ஒரு கட்டுரை எழுத சொல்ல மாட்டானா?’ என்று நாக்கை தொங்கபோட்டுக் கொண்டு அலைந்தார்கள் எழுத்தளார்களும், பிரபலங்களும். அல்லது அதை கண்டித்தால் நாம அந்தப் பத்திரிகைகளில் எழுத முடியாது. நம்ம தொடர நிறுத்திடுவான். நம்ம பேட்டிய போட மாட்டானுங்க… என்று பம்மிக் கொண்டு கிடந்தார்கள்.
ஒரு பேட்டிக்கும், இரண்டு பக்கம் கட்டுரை எழுதற வாய்ப்புக்காகவும் பத்திரிகைகளின் மோசடிகளை கண்டிக்காமல், காந்தியின் குரங்குகளைப்போல், கண்ணை, காதை, வாயை மூடிக்கொண்டு சோரம்போகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள், ‘சமூக அக்கறை’ கொண்ட பெரும்பாலான எழுத்தாளர்களும், பிரபலங்களும்.
தமிழனல்லாவர்கள் யாராவது தமிழின விரோதிகளாக இருந்தால், ‘தமிழனாக இருந்தால் இதை செய்வானா?’ என்று சவடால் பேசுகிறார்கள், சில தமிழனவாதிகள். இன்று பத்திரிகை, தொலைக்காட்சி என்று பல முதலாளிகளும், பொறுப்பில் உள்ளவர்களும் பச்சை தமிழர்கள்தான்.
இவர்கள் என்ன செய்து கிழித்தார்கள்?
தமிழன் என்பதற்காகவே தமிழர்களை கொன்று குவித்த, இலங்கை அரசின் படுகொலைகளை நியாப்படுத்தி, ‘விடுதலைப் புலிகளுடன் நடந்த போரின் போது, இடையில் சிக்கி பலியான தமிழர்கள்’ என்று படத்திற்கு கீழ் ஏதோ தமிழர்கள் தற்செயலாக கொல்லப்பட்டதுபோல் ‘புட்நோட்’ எழுதினார்கள்.
புலிகளை காட்டிக் கொடுத்தவர்களோடு உறவு வைத்துக் கொண்டு பணம் பார்த்தார்கள்.
இன்னொருபுரம் ஆதரவாக செய்தி வெளியிடுதைப்போல், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய செய்திகளை, கட்டுக்கதைகளாக எழுதி அவர் படங்களை பிரசுரித்து, புலிகளின் ஆதரவாளர்களையும், வாசகர்களையும் ஏமாற்றி பணம் சேர்த்தார்கள்.
ஈழத்தில் 3 லட்சம் தமிழர்களுக்கு மேல், மிக கொடூரமான முறையில் துன்புறுத்தப்படுகிறார்கள். பலர் நிர்வாணப்படுத்தப்பட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்படுகிறார்கள். ஆனால் இந்த தமிழ் பத்திரிகைகள் இந்த கொடுமைகளை அம்பலப்படுத்தி தமிழர்களிடம் அரசயில் எழுச்சியை உண்டாக்குவதற்கு பதில், கொஞ்சமும் வெட்கம் இல்லாமல், ‘ஈழ வரலாறு-இலங்கை வரலாறு-பிரபாகரன் வரலாறு’ என்று பழைய கதைகளை எழுதி, தமிழர்களை வெற்று பெருமை பேச வைத்து, பணம் பார்க்கிறார்கள்.
விபத்தில் சிக்கி உயிருக்கு போரடுகிறவர்களின் பாக்கெட்டில் கைவிட்டு திருடுகிறவனைப்போல், ஈழத் தமிழர்களின் துயரங்களை வைத்து பணம் சம்பாதிப்பவைகளாகத்தான் இருக்கிறது தமிழ் பத்திரிகைகள்.
தமிழக தமிழர்களின் ஈழ ஆதரவு நிலை, ஈழத்தமிழர்களுக்கு எந்தவகையிலும் உதவவில்லை. அதன் மூலம் பலகோடி ரூபாய் பெரும் லாபம் அடைந்தவர்கள் தமிழ் பத்திரிகைகள்தான்.
எரியிற வீட்ல புடுங்கன வரைக்கும் லாபம் என்று செயல்படுபவைகள்தான் தமிழ் பத்திரிகைகள்.
தமிழ் பத்திரிகையாளர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவளார்களான சில உணர்வாளர்கள்கூட, தங்கள் உணர்வை ரகசியமாக புனைப் பெயர்களில்தான், பகிர்ந்து கொண்டார்கள். ‘ஆபிசுக்கு தெரிஞ்ச பிரச்சினை.. யாருக்கிட்டயும் சொல்லாதீங்க…அதை எழுதுனது நான்தான்…’ என்கிற பாணியில்…
ஆனால், தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் கொடுமையை உலகத்துக்கு அம்பலப்படுத்தியவர்கள், சிங்களப் பத்திரிகையாளர்கள்தான். தமிழர்களை கொன்று குவிக்கிற ராஜபக்சே அரசை கண்டித்து, தமிழர்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்தார்கள் சிங்களப் பத்திரிகையாளர்கள். சிங்களப் பத்திரிகையாளர்களின் ஜனநாயகத் தன்மைதான், இன்று தமிழர்களின் துயரங்களை உலகின் பார்வைக்கு கொண்டு வந்தது.
ஹிட்லருக்கு பிறகு, கடந்த் 50 ஆண்டுகளில் உலகில் இதுவரை, இதுபோன்ற ஒரு கொடூரத்தை எந்த நாடும் தன் சொந்த மக்களுக்கே செய்ததில்லை என்பதை நிரூபிப்பதைப்போல், தன் நாட்டில் வாழும் தமிழ் மக்களை மிக கொடுமையான முறையில் கொன்று ஒழிப்பவன் ராஜபக்சே. இவனின் கொடுமைகளை வெளிகொண்டு வந்ததற்காக, நாடு கடத்தப்பட்ட சிங்களப் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 30.
தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூரத்தை அம்பலப்படுத்தி செய்திகள் வெளியிட்டதால், சிங்கள அரசால் இதுவரை கொலை செய்யப்பட்ட சிங்கள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 20.
2006 ல் இலங்கை அரசை அம்பலப்படுத்தி எழுதியதற்காக, திஸ்ஸ நாயகம் என்கிற பத்திரிகையாளருக்கு 20 ஆண்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் துன்புறுத்தப்படுகிறார்.
இன்று இலங்கை ராணுவம் தமிழர்களை நிர்வாணப்படுத்தி, சுட்டுக்கொல்கிற கொடூரத்தை வெளி கொண்ர்ந்ததும் சிங்களப் பத்திரிகைளார்கள்தான்.
ஆனால், தமிழ் முதலாளிகளால், தமிழர்களால் நடத்தப்படுகிற இந்த தமிழ் பத்திரிகைகள்….. ச்சீ…
சவடாலாக பேசும் தமிழனவாதிகள் இதற்கு பதில் சொல்லவேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளின் யோக்கியதை குறித்தும், பார்ப்பன அறிவாளிகளின் அயோக்கியத்தனத்தை பற்றியும் 16-02-2009 அன்று கு. தமிழ்ச்செல்வன் என்பவரின் கேள்விக்கு எழுதிய பதிலை மீண்டும் பிரசுரிக்கிறேன்.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்
உண்மையான தமிழன்தான் ஈழமக்களின் துயரங்களுக்காக போராடுவான். பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை அவர்களால் எப்படி தமிழர்களுக்கு உண்மையாக இருக்கமுடியும்?
-கு. தமிழ்ச்செல்வன்
‘தமிழர்களுக்கு என்று ஒரு தனிநாடு வேண்டும், அல்லது விடுதலைப் புலிகளை ஆதரிப்பது தமிழர்களின் கடமை’ என்று கோரி பொதுமக்கள் யாரும், தமிழக வீதியில் போராடவில்லை.
‘ஒருபாவம் அறியாத குழந்தைகள், பெண்கள், முதியவர்களை கொன்று குவிக்கிறது சிங்கள அரசு. இந்திய அரசே அதற்குத் துணைபோகாதே’ என்கிற மையமானப் பிரச்சினையை வைத்துத்துதான் போராடுகிறார்கள். இதற்கு தமிழனாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல, மனிதனாக இருந்தாலே போதும். மனிதாபிமானம் இருக்கிற யாரும் சிங்கள அரசின் கொடுமையை, இந்திய அரசின் துரோகத்தை எதிர்ப்பார்கள்.
இந்த மனிதாபிமான உணர்வோடுகூட பார்ப்பனர்கள் பெருமளவில் தங்கள் பங்களிப்பை செய்யவில்லை. அவர்கள் எதையும் பார்ப்பன, இந்துக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள், என்பதுதான் வருத்தற்குரியது.
மற்றபடி, தனக்கென்று சுயஅரசியலும், மனிதாபிமானமும் இல்லாதவன் பச்சைத் தமிழனாக இருந்தால்கூட அவனால் எந்த உபயோகமும் இல்லை. கெடுதல்தான்.
‘சிங்கள அரசு தமிழர்களைக் கொன்று குவிக்கிறது’ என்று ஆதாரத்தோடு எழுதிய, சிங்களப் பத்திரிகையாளர்களை சிங்கள அரசு கொன்றது. தமிழர்களுக்காக மனிதாபிமானம் கனபபனகொண்ட அந்த ‘சிங்களவர்கள்’ தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள்.
ஆனால், இங்கு பச்சைத் தமிழர்களான தமிழ் பத்திரிகையாளர்கள் சிங்கள அரசிடம் பணம் வாங்கிக் கொண்டு, ‘விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிங்கள அரசின் போர்’ என்ற பெயரில், தமிழர்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தி செய்திகள் வெளியிடுகிறார்கள்.
சிங்களப் பத்திரிகையாளர்களுக்கு இருக்கிற நேர்மை, துணிவு ஏன் பச்சைத் தமிழர்களான, தமிழ் பத்திரிகையாளர்களிடம் இல்லை?
காரணம், கொலை செய்யப்பட்ட அந்த சிங்களப் பத்திரிகையாளர்கள் – யார் பாதிக்கப்படுகிறார்களோ, யார் தரப்பில் நியாயம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவாக, தங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக நடந்து கொண்டார்கள். அதனால்தான் தங்கள் இனம் தாண்டி, எது உண்மையோ அதன் பக்கம் நின்றார்கள். சிங்கள அரசின் கொலைவெறியை துணிந்து உலகத்திற்கு அம்பலப் படுத்தினார்கள்.
ஆனால், பல தமிழ் பத்திரிகையாளர்களுக்கு கொள்கை என்று எதுவும் இல்லை. பணம்தான் முக்கியம். அதனால்தான் யாரெல்லாம் பணம் தருகிறானோ அவர்களுக்கெல்லாம் ஆதரவாகவும், பணம் தருகிறவர்களுக்கு யாரரெல்லாம் எதிரியோ, அவர்களுககு எதிராகவும் செய்திகள் வெளியிடுகிறார்கள். சில நேரங்களில் பணம் தரமறுத்தாலும், அதுவரை தந்துக் கொண்டிருந்தவனைப் பற்றியே எதையாவது அவதூறும் எழுதி விடுவார்கள். 50 ரூபா கொடுத்தால் தன்னையே திட்டி எழுதிகொள்கிற பத்திரிகையாளர்களும் இருக்கிறர்கள்.
நேர்மையான, திறமையான பத்திரிகையாளர்களை உடன் வேலை செய்கிற சக பத்தரிகையாளர்களுக்கும் பிடிப்பதில்லை. நிர்வாகத்திற்கும் பிடிப்பதில்லை. ஏதோ ஒரு வகையில் அவர்களை டம்மி ஆக்கி வைத்துக் கொள்வார்கள். அல்லது வேலையை விட்டு தூக்குவதற்கு நிர்வாகத்தோடு இணைந்து சக பத்திரிகையாளர்களும் சதி செய்வார்கள்.
நிர்வாகத்திற்கு எதிராக இல்லாத வகையில் அந்த எல்லைக்குள் ஊழல் செய்கிற, ( எங்கிட்ட சம்பள உயர்வு கேக்காத, ஆபிஸ் பொருளை திருடி விக்காத, எவன் கிட்டயாவது வாங்கி தின்னுக்க) இதுபோன்ற பத்திரிகையாளர்களைத்தான் பத்திரிகை முதலாளிகளும் விரும்புகிறார்கள் அவர்களுக்குத்தான் முக்கிய பொறுப்புகளையும் கொடுக்கிறார்கள். ஏனென்றால், இவர்களின் ஊழல் சில ஆயிரம், முதலாளிகளின் ஊழல் பலகோடி. ஜாடிக்கேத்த மூடி.
குறிப்பு:
* சிங்களப் பத்திரிகையாளர்களைப் போல் தமிழ் பத்திரிகையாளர்களை உயிரை தியாகம் பண்ணச் சொல்லவில்லை. வீதியில் இறங்கி ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாவிட்டாலும், ஆதரவாக செய்திகள் வெளியிட முடியாவிட்டாலும் கூட பரவயில்லை. பச்சைத் துரோகத்தையாது நிறுத்தக்கூடாதா?
* ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டுவரும் ‘நக்கீரன்’ பத்திரிகையை மிரட்டுகிற தொனியில் கடிதம் எழுதியிருக்கிற ராஜபக்சேவின் தூதுவர் அம்சாவிற்கு கண்டத்தை தெரிவிப்பது தமிழர்களின் கடமை.
* ‘தமிழிலேயே தான்தான் பெரிய எழுத்தாளப் புடுங்கி, நீயெல்லாம் ஒன்னும்கிடையாது’ என்று தெருநாயைப் போல் சண்டைப் போட்டுக்கொள்கிற ‘ஊதாரி-உதவாக்கரை-தரமான’ எழுத்தாளன்களில் பலபேர், ஈழமக்கள் படுகொலையைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாமல் இருக்கிறார்கள். எருமாடு மேல மழை பெய்தது போல்.
16-02-2009 அன்று எழுதியது.

Source: http://tamilseithekal.blogspot.com/2009/09/blog-post_1535.html

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire