கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போன வணங்காமண் நிவாரணம்: இந்திய உடன்பாட்டை இலங்கை அரசு மதிக்கவில்லை





வணங்காமண் நிவாரணப் பொருட்களை முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு விநியோகிக்கும் பொறுப்பிலிருந்து கைகழுவி விட எண்ணியுள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
வன்னியில் முள்வேலி முகாம்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக ஐரோப்பிய தமிழர்கள் வணங்கா மண் நிவாரணப் பொருட்களை சிறுக சிறுக சேகரித்து, பல இன்னல்களுக்கு மத்தியில் தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் அழுத்தங்கள் காரணமாய் கொழும்பு கொண்டு சேர்க்கப்பட்டது.
இப்பொருட்களை விநியோகிக்க இலங்கை செஞ்சிலுவை சங்கம் முடிவெடுத்து, அதற்கான பணிகளில் நிவாரணப் பொருட்கள் கொழும்பு அடைந்ததிலிருந்து செய்து வந்தது.
இது தொடர்பில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் துணை இயக்குநர் சுரேன் பெரீஸ், 'டெய்லி மிரர்' என்னும் ஆங்கல நாளிதலுக்கு கொடுத்த செய்தியில், தங்களது சங்கத்தின் தலைவர் இலங்கை அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:-
வணங்காமண் நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் கிடப்பதால், அதற்கான வரி தொடர்ந்து ஏறிக் கொண்டு போகும் நிலையில், இவ்வரியை எப்படி எதிர்நோக்குவது என இலங்கை அரசு இதுவரை எவ்வித நிலைப்பாடும் எடுக்காமல் இருந்து வருகிறது.
ஆதலால், வணங்கா மண் நிவாரணப் பொருட்களை தனது வசம் எடுத்து முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு தங்கள் சங்கம் விநியோகிக்கும் பொறுப்பிலிருந்து கைகழுவி விட எண்ணியுள்ளதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், துறைமுக கட்டண தள்ளுபடிக்கான எழுத்து பூர்வமான ஆவணம் சென்ற வாரமே தங்களுக்கு துறைமுக அமைச்சகத்திடமிருந்து கிடைக்கப் பெற்றபோதிலும், இலங்கை அரசுக்கு வரி பாக்கி செலுத்த வேண்டியுள்ளது.
இந்த வரிக்கான சலுகை பற்றி எவ்வித பயனுள்ள பதிலும் கிடைக்கப் பெறவில்லை. வற் வரி மற்றும் தேசிய கட்டமைப்பு வரி (என்.பி.டி) கடந்த யூலை முதல் செப்ரெம்பர் 22ம் தேதி வரை சுமார் 20 லட்ச ரூபாய் செலுத்தப்பட வேண்டியுள்ளது, எனத் தெரிவித்தார்.
27 பெரிய பெட்டகங்களில் 884 தொன் வணங்கா மண் நிவாரணப் பொருட்கள் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டது முதல் பல இடையூறுகளை சந்தித்து வந்திருக்கிறது.
முதலில், சோதனை என்ற பெயரிலும், பின்னர் துறைமுக கட்டணம் என்ற பெயரிலும், இப்போது வரிக்காகவும் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்ட நிலையில், முள்வேலிக்கு பின் உள்ள தமிழர்களுக்கு அனுப்பப்படாமல் கிடப்பில் இருந்து வருகிறது.
வணங்கா மண் நிவாரணப் பொருட்களை தமிழர்களுக்கு விநியோகிக்க எவ்வித நடவடிக்கையையும் எடுக்காததைப் பார்க்கும் போது, இலங்கை அரசு உடன்பாடு செய்து கொண்டபடி இந்திய அரசையோ, தமிழக அரசையோ மதிப்பு கொடுப்பதாய் தெரியவில்லை.
மனித நேய அடிபடையில் கூட முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்ற அக்கறையும் இல்லையென்பதே காட்டுகிறது. என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய அரசு மீது இலங்கை அரசு மதிக்காததற்கு இந்தியாவில் உள்ள அமைச்சர்களின் மெத்தனப்போக்கும், அவர்கள் வடக்கில் வசந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தினால், கிடைக்கப்போகும் கமிசன் பணத்திற்காக இலங்கையிடம் கையேந்தி நிற்பதினால் தான் என டெல்லி உள்ள அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
.

Source:http://tamilseithekal.blogspot.com/2009/09/blog-post_2536.html



Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire