ராஜபக்சவை பழிவாங்க 100 பிரபாகரன்கள் வருவார்கள்: சொல்வது மங்கள சமரவீர

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பழிவாங்குவதற்கு 100 பிரபாகரன்கள் உருவாகி வருவார்கள் என்று தெரிவித்துள்ளார் சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர. பிரபாகரன்கள் மட்டுமல்லாது சிங்களச் சமூகத்தினர் அனைவருமே அவரைப் பழிவாங்குவார்கள் எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் உள்ள விகாரமாதேவி திறந்தவெளி அரங்கில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மகிந்த ராஜபக்சவால் ஒருபோதும் தமிழர்களின் மனங்களை வெல்ல முடியாது எனத் தெரித்தார்.
மகிந்த ராஜபக்ச குடும்ப முன்னணியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
வன்னியில் உள்ள தடுப்பு முகாம்களின் படிப்படியாக மோசமாகி வரும் நிலை அங்கு மீண்டும் பிரிவினைவாத இயக்கம் ஒன்று உருவாகுவதற்கான ஊக்கத்தை வழங்கப்போகிறது.
இந்த நாட்டில் ஊடக சுதந்திரமோ அரசியல் சுதந்திரமோ கிடையாது. எதிர்க் கட்சியினருக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளுக்ககாக சட்ட மா அதிபரும் காவல்துறை மா அதிபரும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தீவிரவாதத்தைத் தோற்கடித்து விட்டபோதும், 'சண்டே லீடர்' வார ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவைக் கொன்றவர்களையும் 'சிரச' தொலைக்காட்சி மீது தாக்குதல் நடத்தியவர்களையும் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்த காவல்துறையினர் தவறிவிட்டனர்.
இவ்வாறு மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்காகவே ராஜபக்ச அரசு தமிழ் மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
வன்னி முகாம்களில் 3 லட்சம் தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வரையிலானோர் அடுத்த அரச தலைவர் தேர்தலில் வாக்களிக்கக் கூடியவர்கள். அவர்களை வாக்களிக்காமல் தடுப்பதன் மூலம் தற்போதைய ஆளும் கூட்டணி தனது வெற்றியை மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்த முயற்சிக்கிறது.
2005 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அரச தலைவர் தேர்தலின் போது வடக்கு – கிழக்கு தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என விடுதலைப் புலிகள் உத்தரவிட்டதன் மூலமே ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியைத் தட்டி விட்டனர்.
புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இது மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார்.
Source: http://www.puthinam.com/full.php?2b24OOI4b34U6D734dabVoQea03Y4AKc4d3cSmA2e0dM0MtHce03f1eC2ccdScYm0e

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire