தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் பீ தின்னலாம்










இலங்கையில் நடப்பது அப்பட்டமான தமிழின அழிப்பு என்று அமெரிக்காவும் மேற்கு உலக நாடுகளும் ஐ.நா.சபையில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக இந்தியா (கியூபாவும் சேர்ந்து கொண்டது என்பதுதான் ஆச்சரியம்) வாக்களித்தது. இதன்மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய இக்கட்டில் இருந்து ராஜபக்சேவை காப்பாற்றிவிட்டது, இந்திய அரசு.இப்படியான சூழ்நிலையில் ஜனநாயகத்துக்கான இலங்கைப் பத்திரிகையளர்கள் என்ற அமைப்பினர் வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரம், உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியையும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கடும் இக்கட்டையும் ஏற்படுத்திவிட்டது. தமிழர்களை நிர்வாணமாக்கி கண்களைக் கட்டி சுட்டுத்தள்ளுகிறது இலங்கை ராணுவம். இதை வெளியிட்டது, இலங்கைப் பத்திரிகையாளர்கள். ஜனநாயத்துக்கு ஆதரவான பத்திரிகையாளர்கள்.அந்த நாட்டில் தமிழர்களுக்கு ஆதரவாக மூச்சு விட்டாலே தன் நண்பனாக இருந்தாலும் (உ.ம். லசந்த விக்ரமசிங்க) கொன்றொழித்துவிடுவான், ராஜபக்சே. உயிருக்கே ஆபத்து என்கிற சூழ்நிலையிலும் ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பாற்றியிருக்கிறார்கள், அந்த ஊர் பத்திரிகையாளர்கள். ஆனால் இங்கே.....அச்சம் என்பது மடமையடா என்ற பாட்டுக்குச் சொந்தக்காரர்களான தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்களில் பலரும், இலங்கைத் துணைத் தூதரகம் கொடுக்கும் பிச்சைக் காசுக்கு ஆசைப்பட்டு சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கிறார்கள். சிங்களப் பத்திரிகையாளர் லசந்தே கொல்லப்பட்ட போது ஒருசில பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதை வரவேற்கிறேன்.
இலங்கை அரசுக்கு ஆதாரவாக ஐ.நா.வில் வாக்களித்த இந்திய அரசை கேள்வி கேட்க அருமையான வாய்ப்பு இந்த வீடியோ ஆதாரம் மூலம் கிடைத்திருக்கிறது. இந்திய மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய ஆயுதங்களை இலங்கைக்குக் கொடுத்தது, நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக நிவாரண நிதி என்ற பெயரில் இலங்கைக்கு ஐநூறு கோடி ரூபாய் கொடுத்தது என தமிழகமும், இந்தியாவும் இலங்கையில் நடக்கும் இனஅழிப்புக்குத் துணை போவதை சுட்டிக் காட்ட இதுவே நல்ல சந்தர்ப்பம்.
ஆனால் தமிழகப் பத்திரிகையாளர்கள் இந்த வீடியோ விவரம் தொடர்பாக இதுவரை எந்த எதிர்வினையையும் பதிவு செய்யவில்லை. ஒரு போராட்டம், ஓர் ஆர்ப்பாட்டம் உண்டா? இவர்கள் எல்லாம் சோற்றைத் தின்கிறார்களா? இல்லை பீ தின்கிறார்களா?இப்போது இலங்கைப் பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்திருக்கிறது, இலங்கை நீதிமன்றம். இதை அமெரிக்கா கண்டிக்கிறது. இந்தியாவோ இலங்கைக்கு கூட்டிக் கொடுக்கிறது. கருணாநிதி அதற்கு விளக்குப் பிடிக்கிறான். அவர்களை செருப்பில் அடித்தால் என்ன? அதற்கு முன்பு முதுகெலும்பு இல்லாத தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் முகத்தில் காறித் துப்ப வேண்டும் என்று தோன்றுகிறது.
திஸ்ஸநாயகம் விவகாரத்திலாவது ஒரு போராட்டத்தை தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் விரைவில் நடத்தினால் மேற்கண்ட பாராவில் உள்ள என் கண்டனத்தை அந்தப் போராட்ட மேடையிலேயே நான் வாபஸ் பெற்றுக் கொள்வேன். அதுவரையிலும் ம்னதளவில் தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்களை காறித்துப்பிக் கொண்டுதான் இருப்பேன்.பன்றிக் காய்ச்சலை பரபரப்பாக்குகிறார்கள் என்று ஊடகவியலாளர்கள் மீது குறைப்பட்டுக் கொள்ளுபவர்கள் இதற்கெல்லாம் வாய் திறக்க மாட்டார்களா?


நன்றி

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire