சிறிலங்காவில் சமாதானம் சாத்தியமா?
சிறிலங்காவில் சமாதானம் என்பது சாத்தியமான பாதையி்ல் பயணிக்கின்றதா அல்லது அதற்கு சாத்தியமான பாதையை - போர் முடிவுற்றதாக அறிவித்துள்ள - சிங்கள அரசு உருவாக்கிவருகிறதா என்ற அடிப்படை கேள்வி இன்றைய காலகட்டத்தில் பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளது. போர் முடிவடைந்து நான்கு மாதங்களாகியும் அங்கு அமைதி என்ற சொல்லுக்கு இன்னமும் அர்த்தம் இல்லாத நிலையே காணப்படுகிறது. சிறிலங்கா என்ற நாடு சமாதானமாகவும் சுபீட்சம் மிக்கதாகவும் இருப்பதற்கு விடுதலைப்புலிகள்தான் பெரும்தடை என்ற கருத்துருவாக்கத்துடன் தசாப்தங்களாக இரத்தவெறி பிடித்த போரை பகுதி பகுதியாக மேற்கொண்ட சிங்கள அரசுகள் இன்றைய காலகட்டத்தில் ஏதோ ஒரு புள்ளியில் வெற்றிகண்டிருக்கிறது. அந்த வெற்றி தமிழ்மக்களது ஆயுதப்போராட்டத்துக்கு எதிராக வெற்றி மட்டுமே என்பது அனைவரும் அறிந்தவிடயம் . ஆனால், அந்த வெற்றியினூடாக இன்னமும் அங்கு சமாதானத்தை சிங்கள அரசினால் கொண்டுவர முடியவில்லை என்றால், நாட்டின் சுபீட்சத்துக்கு தடையாக இருப்பது என்ன என்பது சர்வதேச அரசியல் ஆய்வாளர்களால் சிறிலங்காவை நோக்கி முன்வைக்கப்படும் கேள்வியாகும். இதற்கான பதிலில்தான், தமிழர்களது போராட்ட காரணங்களும் அ...