சிறைக்கம்பிகளுக்குள் சீரழியும் நோபல்பரிசு...

Source:http://www.alaikal.com/news/?p=47795

இந்த நாள் ஒரு மகிழ்ச்சிகரமான நாள் சர்வதேச மனித உரிமைகள் கழகம்
ஆனந்தச் செய்தி.. நோபல் பரிசாளர் ஒரு கிறிமினல் – சீனா சீற்றம்

சீனாவின் ஆட்சி முறைமை தவறானது, அங்கு நிலவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி உலக ஒழுங்கிற்கு தப்பான செயல் என்று விமர்சித்து வந்த லீ குவாங்கிற்கு வழங்கிய நோபல் பரிசு தவறானது என்று நோர்வேக்கான சீனத் தூதுவர் சீற்றமடைந்துள்ளார்.
 இவர் சீன சட்டங்களுக்கு முரணாகச் செயல்பட்டு தற்போது சிறையில் தள்ளப்பட்டுள்ள நபர் என்றும், நாட்டின் ஒழுங்கு முறைக்குள் குழப்பத்தை ஏற்படுத்திய ஒரு கிறிமினல் என்றும் இவருக்கெல்லாம் ஏது நோபல் பரிசு என்றும் ஏளனமாகக் கேட்டுள்ளார்.
ஆக இந்தப்பரிசை வேண்ட அவருக்கு சீனா சிறைக்கதவுகளை திறக்காது, அவர் சீனக் கொட்டடிச் சிறைக்குள் சித்திரவதைப்படப்போவதுதான் அதிகரிக்கும்.
அதேநேரம் இது குறித்து கருத்துரைத்த சர்வதேச மன்னிப்புச் சபையின் டென்மார்க் தலைவர் லாஸ் நோர்மன் ஜொகான்சன் கூறும்போது இன்றய நாள் மனிதகுல வரலாற்றில் ஒரு மகிழ்ச்சிக்குரிய நாளாக அமைகிறது என்றுள்ளார். சீனா போன்ற உலக மக்கள் தொகை கூடிய ஒரு நாட்டில் பல கட்சிகள் கொண்ட ஜனநாயக ஆட்சி மலரவேண்டும் என்று போராடிய ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள நோபல் பரிசு மகத்தானது, இந்த நாள் மகிழ்ச்சிக்குரிய நாள் என்றும் தெரிவித்தார். 
டந்த டிசம்பர் மாதம் சீன போலீசாரால் கைது செய்யப்பட்ட லீக்கு 11 வருடங்கள் கடும் சிறைவாசம் விதிக்கப்பட்டுள்ளது. நோர்வேயில் உள்ள நோபல் பரிசுக் கமிட்டி இந்தப்பரிசை அவருக்கு எவ்வாறு வழங்கப்போகிறது என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.
அதேவேளை சர்வாதிகார ஆட்சிகள், மனித உரிமை மீறல்கள் போன்ற அரசு முறைசார் அராஜகங்களை நடாத்தும் ஆட்சியாளரின் முகமூடிகளைக் கிழிப்பதற்கு இத்தகைய பரிசுகள் ஒரு தூண்டுகோலாக அமைவதையும் மறுக்க இயலாது.
பர்மாவில் உள்ள இராணுவ சர்வாதிகார ஜிந்தா ஆட்சிக்கு எதிராக அங்குள்ள தலைவர் ஆங் சூங் சுகி அம்மையாருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதும், அவர் இன்றுவரை தடுப்புக்காவலிலேயே இருப்பதும் உலகறிந்த விடயமாகும். 
அதேபோல இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை எழுதிய சல்மான் ருஷ்டிக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்க அவருக்கு ஈரானிய மதத்தலைவர் அயதுல்லா கொமெய்னி மரணதண்டனை அறிவித்ததும் பழைய கதைகளாகும்.
எவ்வாறாயினும் லீக்கு வழங்கப்பட்டுள்ள பரிசு வரும் நாட்களில் பலத்த சர்ச்சைகளை உருவாக்க வாய்ப்புள்ளது.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire