கடலோடு வந்த நான் காற்றோடு கலக்கமுன் காப்பாய் தமிழா!! வளைகுடாவிலிருந்து,,,,,,,,,,,,,சங்கிலியன்



சிறீலங்கா இதை காதில் கேட்டால் கசக்குதடா….
சிங்கக்கொடி கண்டால் நெஞ்சம் குமுறுதடா ,
தாயும் தந்தையும் தனையனும் தங்கையும் கூடி
உறவாடி கும்மாளம் கொட்டி கொண்டாடி  கரிகாலன்
காலடியில் கம்பீரமாய் வலம் வந்தோம்
,
நினைக்கும் போதே இனிக்குதாடா நெஞ்சம் துடிக்குதடா
எவன் தயவும் தேவையில்லை உழுது சோறுண்டு உற்சாகமாய்
உலாவந்தோம்
சிங்கத்தின் வாரிசுகள் வானத்தில் பறந்தடித்து பருந்து போல்
நோட்டமிட்டு மாயமாய் மறைந்ததடா  யுத்தம்,,,,,,, யுத்தம் ,,,,,
எங்குமே பிஞ்சுகளின் சத்தம் . இரத்தம் ,,,,,,,இரத்தம்,,,,,,,
தாயின் இருதயம் வெடித்து பாய்கிறது ,,,,, உயிர் கொடுத்தவள்
தண்ணீர் கேட்டு கதறினாள் தண்ணீருக்குப்பதிலாக
என் கண்ணீரைத்தான் கொடுத்தேன்
ஒளிகொடுத்த தந்தையே ஒளியற்றுக்கிடக்கிறார் ஒட்டுமொத்த
தமிழனும் ஒரு குளியில் புதைக்கப்பட்டான்   என்
கண்களால் கண்டேனடா கண்டகண்ணை கத்தியால் குத்திவிட்டு
கடலிலே வீசினான் சீர்கெட்ட சிங்களன்
நானும் தங்கையும் அலையோடு அடிபட்டு ராவோடு ராவாக
ராமேஸ்வரம் செண்றுவிட்டோம்
என் தமிழ் சொந்தங்கள்
வாரி அணைத்ததடா
,,,அடைக்கலமும் தந்ததடா,
,
யுத்தம் முடிந்ததாம் பயங்கரவாதம் ஒளிந்ததாம்  ஓதுகிறான்
சிங்களன் ஒட்டுமெத்த தமிழனும் புதைகுழியில் கிடக்கையில்
பட்டாசுகொழுத்தி கொண்டாட்டம் நடக்குதடா,
தமிழகம்தான் தஞ்சம் என நம்பித்தான் வந்தேனடா வந்தபின்
தான் தெரிந்ததடா அங்கு ஆட்சியாளன் சீக்கியன் எண்று
தமிழில் தான் பேசுகிறான் அனால் தமிழன் போல் இல்லை அவன்
உயிரைக்காப்பதற்கு ஊர் ஊராய் அலைந்தேனடா
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார் திரவியம்
தேவையில்லை உயிர்வாழவேனுமென கடலிலே இறங்கி
வெகுதூரம் நீந்திவிட்டேன்  கப்பல் ஒண்றில் ஏறியும்  அமர்ந்து
விட்டேன்
தலைதூக்கி பார்க்கும்போது தலையே சுத்தியதே என்னருமை
சொந்தங்கள் சோறிண்றி கிடக்குதாடா வாசலில் கதவோரம்
வாடையொண்று வருகிறதே என்னவெண்று கேட்டபோது
வரும்வழியில் வயோதிபர் மாண்டு போனாரம்
தாயாக நினைத்துத்தான் தாயகத்தை கூடவிட்டு
தாய்லாந்து வந்தோமடா ஆயுதம் கொண்டரவில்லை அகதியாய்
வந்தோம் என என பதிவுகூட செய்துவிட்டோம்  உடுத்த உடையுடன்
உறக்கமிண்றிக்கிடக்கிறோம் எவனுக்கும் கண்ணில்லை
திரைகடல் ஓடியும் தமிழனைக்கொல்வோம் என சிங்களவன்
இங்கும் வந்து இடையூறு செய்கிறான்  நாம் என் செய்வேம்
எம் பிரானே நாம் என்செய்வேம்
புலத்தமிழன் உள்ளான் என நம்பித்தான் வந்தோமடா அவன் கூட
புலம்பித்திரிவான் எண்று எண்ணிகூட பாக்கலடா
வயிறு பசிக்குதாடா குளந்தை அழுகுதடா தொற்றுநோய் கூட பரவுதடா
எதுவும் வேண்டமடா எம்மையும் கொண்று எமனுக்கு விருந்தளித்து
மூடிமறைத்துவிட்டு சிண்ண விபத்து எண்று சிங்களவன்  சொல்லமுன்னே
ஒண்றுகூடி விரைந்துவந்து எங்கள் விலங்கினை உடைத்திடுவீர்.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire