Source: http://meenakam.com/?p=10840
தற்பொழுது தாய்லாந்தில் அகதிகளாக, புகலிடம் தேடுபவர்களாக UNHCR இல் பதிவு செய்து விட்டு வாழ்ந்து வரும் இலங்கைத்தமிழரின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது.
அவர்கள் அனைவரும் தாம் எந்த நேரத்தில் கைது செய்யப்படுவோமோ என்ற பீதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பாங்கொக்இல் சபான்மை (SaphanMai) என்ற இடத்தில் இருந்து சிறிவர், பெண்கள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளடங்கலாக 136 பேர் 11.10.2010 அன்று அதிகாலையில் அவரவர் இருப்பிடங்களில் வைத்துக் கைது செய்யபட்டிருக்கிறார்கள்.
தாய்லாந்தின் குடியகல்வு அதிகாரிகள், கனடா நாட்டைச் சேர்ந்த சில அதிகாரிகள்,என்போர் இராணுவத்தினர் சகிதம் சென்று கைது செய்திருக்கின்றார்கள்.
கைது செய்யப்பட்ட அனைவரும் தாய்லாந்தில் உள்ள இல் பதிவு செய்துள்ளவர்கள் என்பதும் UNHCRஇன் அக்திகளுக்கான,புகலிடம் கோருவோருக்கான ஆவணத்தை வைத்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கஸ்ரமான வேளையில் UNHCRஅகதிகளுக்காக எந்தப் பாதுகாப்பையோ,பரிந்துரையையோ,ஆதரவையோ வழங்கவில்லை. தாய்லாந்து 1951 இன் அகதிகளுக்கான உடன்படிக்கையிற் கையெழுத்திடாத நாடு என்பதால் இந்நாட்டில் விசா இல்லாமல் இருப்பவர்கள்,அவர்கள் UNHCR இல் பதிந்திருந்தாற்கூடக் கைது செய்யப்படலாம்.
ஆனாலும் முன்பு தாய்லாந்து அரசாங்கம் இவற்றைக்கண்டும் மனதளவில் அனுமதித்துக் கொண்டிருந்தது. இப்போ இது மோசமானதற்கான காரணமாகக் கனடா அரசாங்கம் உள்ளது.இதற்கான காரணமாக அண்மைக்காலங்களில் தாய்லாந்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தல் நடைபெறுவது தான் என்கிறார்கள்.
ஆனால் கைது செய்யப்பட்டவர்களில் 3,4 வருடங்களாக இங்கிருந்தவர்களும் அடங்குவர். இவர்கள் கப்பலில் செல்ல வந்திருந்தால் இவ்வளவு காலம் இங்கு தங்கியிருக்க மாட்டார்கள்.
மேலும் இந்த அதிகாரிகள் கைது செய்யும் போது யாரையும் சரியான சாட்சியுடனோ,அத்தாட்சி கொண்டோ கைது செய்யவில்லை.தமது கையில் அதிகாரம் இருக்கு என்பதால் இக்கைது நடவடிக்கையை நடத்தியுள்ளனர். அவர்கள் கடந்த 13ந்திகதி ஒருவரைக்கைது செய்தபோது அந்த அதிகாரிகளுடன் வந்த ஒருவர் இலங்கைத்தமிழர் போலவே தமிழில் பேசியுள்ளார்.
மேலும் அந்தக்கைதானவர் UNHCR க்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது அத்த்மிழில் பேசிய நபர் ” UNHCR தான் உங்களைப் பிடிக்கும்படியே கூறியது”என்று கூறியுள்ளார்.
இது இங்குள்ள பலருக்கு UNHCR தொடர்பாகக் குழப்பத்தையும்,பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மேலும் UNHCR இன் அண்மைக்கால இலங்கைத்தமிழர் தொடர்பான அணுகுமுறையும் நம்மைச் சந்தேகம் கொள்ளவைப்பதாகவே உள்ளது.அகதிகளுக்கான உரிமையை எழுத்தில் மட்டும் “சரத்துக்களாக”வைத்துக்கொண்டு அவர்கள் கைது செய்யப்படும் போது எந்தப்பதிலிறுப்பையும் காட்டாமல் இருந்தால் அது எவ்வாறு அகதிகளுக்கானாமைப்பாகமுடியும்.
இங்குள்ள பல நிறுவனங்கள் பாகிஸ்தானிகளோ,வேற்றினத்தவரோ 100 குடும்பமாகச் சேர்ந்து வாழ்கிறார்களெனப் பாராட்டிப்பேசுகிறார்கள்.ஆனால் சிறீலங்கன் 10 பேர் சேர்ந்து வாழ்ந்தால் உடனே கைது செய்யப்படுகிறார்கள்.
ஆனால் வேற்றினத்தவர்கள் கைது செய்யப்படுவதில்லையென்பது இங்கு தங்கியிருக்கும் தமிழர்களுக்குப் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் சட்டம் எல்லா நாட்டவருக்கும் ஒரேமாதிரியாகவிருந்தும் நாம் ஏன் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குகிறோம் என்பது தெரியவில்லை.மேலும் தாய் லாந்து அரசாங்கம் UNHCR இன் வேலைத்திட்டங்கள் பற்றியறியும்.அதேபோல் தாய்லாந்துச் சட்டம் பற்றி UNHCR அறியும்.
இங்கு UNHCR இல் பதிந்து வசித்த நாம் குற்றவாளிகளெனில் அகதிகளை அங்கீகரித்த,அதற்காக ஒரு செயலகத்தை நிறுவியுள்ள UNHCR தானே முத்ற்குற்றவாளி.
ஏதோ இப்போ தான் இங்கு சிறீலங்கன் இருப்பதை அறிந்து கொண்டதுபோல் இந்த அதிகாரிகள் நடந்து கொள்வது அதிர்ச்சியாகவும்,வேதனையாகவும் உள்ளது.
மேலும் இத்துன்பங்களுக்குக் கனடாவே மூலகாரணமாக இருந்தமையானது கனடாவின் கொடூர முகத்தை விளங்க வைத்துள்ளது.தாய்லாந்துக்கு வருபவர்கள் 2,3 வருடங்களிற்கூட மீளக்குடியமர்த்தப்படுவதில்லை.
இது அவர்களின் வாக்குமூலம்(statement) UNHCR இன் வரைவிலக்கணங்களுக்குள் அமைந்து அங்கீகரிக்கப்பட்டிருந்தாற்கூட.அவர்களின் 3ம் நாட்டிற்கான குடியமர்த்தல் நடைபெறமுதல் இங்குள்ளவர்கள் அனுபவிக்கும்துன்பங்களோ ஏராளம்.உதாரணமாக ஒரு குடும்பம் 6 பிள்ளைகளுடன் கிட்டத்தட்ட 2 வருடங்கள் IDC இல் உள்ளார்கள்.
அவர்கள் அமெரிக்காவின் 2வது நேர்முகத்தேர்வு முடிந்து 6 மாதங்களின் பின் கைது செய்யப்பட்டார்கள்.உலக நியாயங்களில் முதலாளியான அமெரிக்கா இன்றுவரை அவர்களுக்கான முடிவைச் சொல்லவில்லை.
இப்போ IDC இல் நிரம்பி வழியும் தமிழர்களால் நித்திரை கூடக்கொள்ளாமல் குந்தியே இருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.பெயருக்கு அங்கீகரித்துவிட்டு மனிதர் வாழமுடியாத தொகையை மாதாந்தம் கொடுத்துக்கொண்டு,படிக்க அனுமதிக்காமல்,மருத்துவ உதவியை மட்டுப்படுத்தி,மாடச் சுதந்திரம் இல்லாமல் என்று கூறிக்கொண்டேபோகலாம்.
இவ்வளவு துன்பங்களையும்,இங்குள்ள மனிதாபிமான நிறுவன அதிகாரிகளின் அவமானப்படுத்தல்களையும் தாங்கிக்கொண்டு 5,6 வருடங்களாக உண்மையில் உயிரச்சுறுத்தல் இல்லாதவர்கள் தொடர்ந்து இங்கு இருப்பார்களா? BRC என்ற நிறுவனத்தின் உதவித் தொகையானது ஒரு குடும்பத்தலைவருக்கு 2500THB,குடும்பத்துணைக்கு 1500THB,பிள்ளைக்கு 1000THB கொடுக்கப்படுகின்றது.
இத்தொகையில் ஒரு குடும்பம் தனது வாடகை,சாப்பாடு,போக்குவரத்து,உடை,பாதணி என அனைத்தையும் பெற்றுக்கொள்ளவேண்டும்.இதுவே அங்கீகரிக்கப்படாத குடும்பமெனில் அவர் எதையும் பெற முடியாது.
தாய்லாந்தில் சட்டப்படி வேலையும் செய்ய முடியாது.இந்நிலையில் எவ்வாறு UNHCR அகதிகளுக்கான மிகப்பெரிய நிறுவனமென சொல்லமுடியும்.மேலும் தாய்லாந்துப்பணம் என்பது டொலருக்கோ,யூரோக்கோ ஈடானதல்ல.
இதன் பெறுமதி கிட்டத்தட்ட இந்தியாவிற்கு ஈடானது.ஆனால் இந்தியாவை விட வாழ்க்கைச்செலவு இங்கு மிகவும் அதிகம்.வாடகைப்பணம் குறைந்தது 3500 தேவைப்படும்.இந்தக்கஸ்ரங்களுடன் இப்போ எப்போ கைது செய்யப்படுவோம் எனத்தெரியாமல் குடும்பத்திற் சிறுவர்கள் உட்பட அனவரும் நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையர்களைக்கண்டவுடன் கைது செய்யும்படி உத்தரவு போடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது.இவ்வாறு அகதிகள் அச்சுறுத்தப்படும்போது UNHCR இங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றது என்று இங்குள்ளவர்களுக்கு விளங்கவில்லை.ஒருவர் கைது செய்யப்பட்டபின் அவரை விடுவதா அல்லது க்குக்கொண்டு செல்வதா என்பதை 4 அதிகாரிகள் தீர்மானிக்கலாம் என்றால் ஏன் UNHCR ஆக்க பூர்வமான செயலை ஆற்றமுடியாது?இச்செய்தி மூலம் நாம் உலகத்தமிழர்களை,மனித உரிமை நிறுவனங்கள்,மனித உரிமை ஆர்வலர்கள் என்போரிடம் கேட்பதெல்லாம் எங்களுக்காக இல், எதிர்மறையான எண்ணம் கொண்ட அரசாங்களிடத்தில் குரல் கொடுங்கள்.
எங்கள் கைதை நிறுத்தவும்,இல் வாடுவோரை விடுதலை செய்யவும் UNHCR தனது செயற்பாட்டை விரைவு படுத்தவும் வற்புறுத்துங்கள்.
உங்கள் துரிதமான எதிபார்க்கும் இலங்கைதமிழர்.மேலும் நாம் இச்செய்தியை வெளிப்படுத்த கனேடியத்தமிழ் வானொலியை நாடியபோது அவர்கள் உதவ முன்வரவில்லை என்பது வேதனைக்குரியது.
No comments:
Post a Comment