மாவீரர் கனவை நனவாக்கும் காற்று மெல்ல வீச ஆரம்பிக்கிறது...

Source:http://www.alaikal.com/news/?p=50669



மாவீரர் வாரம் இன்று ஆரம்பிக்கிறது. புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் வழமைபோல மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்காக அந்தந்த நாடுகளில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


கார்த்திகை மாதம் 27ம் திகதி முதலாவது மாவீரராக மரணித்த லெப்டினன் சங்கரின் நினைவாக கார்த்திகை 27 மாவீரர்தினமாக அனுட்டிக்கப்பட்டு வருகிறது. 
இந்த மாவீரர்நாளில் தமிழீழ தேசிய மலரான கார்த்திகைப் பூ சகல இடங்களிலும் முக்கியப்படுத்தப்படும். அத்தோடு விடுதலைப்புலிகளின் தேசியக் கொடியேற்றல், மரணித்த மாவீரர்களுக்கு தீப அஞ்சலிகள் போன்றன பெருமெடுப்பில் நடைபெறும்.
வழமையாக மாவீரர் வாரம் ஆரம்பிக்கும்போது தமிழர் தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் மாவீரர் வாரம் சூடு பிடிக்கும். மாவீரர் நாள் இடம் பெறும் தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் உரை முக்கிய இடம் பெறும். அத்தோடு அந்த உரைக்கு விளக்கம் சொல்லும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் உரையும் முக்கியம் பெறும்.


சிங்கள ஆட்சியாளர் உட்பட உலகத்தின் பிரதான செய்தியாளர்கள் எல்லாம் வே.பிரபாகரனின் உரையை அவதானிப்பார்கள். அந்த உரையின் உட்பொருள் குறித்த விவாதங்கள் ஊடகங்களில் முக்கிய இடம் பிடிக்கும்.
வே. பிரபாகரன் ஆற்றிய கடந்த ஐந்து மாவீரர்தின உரைகளும் சர்வதேச சமுதாயம் ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்க முயல்கிறது என்ற குற்றச்சாட்டையே கூறிவந்துள்ளன.
அந்தக் குற்றச்சாட்டுக்குரிய நிலையில் இன்று குற்றவாளிக் கூண்டில் சர்வதேச சமுதாயம் நிற்கிறது. புதுமாத்தளனிலும், முள்ளிவாய்க்காலிலும் நடைபெற்ற போரின் இறுதிக்கட்ட நிகழ்வுகள் 
வர்ணிக்க முடியாத அவல நிகழ்வுகளாகியுள்ளன.


தமிழீழ தேசியத் தலைவர் எங்கே என்ற கேள்விக்கு உரிய பதிலற்ற நிலையில் இம்முறையும் மாவீரர்நாள் நடைபெறுகிறது. 


ஆனால் யாருமே தேவையில்லாத நிலையில் வே. பிரபாகரனின் கடந்தகால உரைகளே காற்றில் தவழ்ந்து புதிய காலத்தை உருவாக்ககிக் கொண்டிருக்கின்றன. மாவீரரின் மூச்சுக்காற்று வலுவுடன் வீச ஆரம்பித்திருக்கிறது. இதன் தாக்கம் விரைவில் தெரியவரலாம்..


மாவீரர் தூபிகள் தமிழர் தாயகத்தில் உடைத்து சிதைக்கப்பட்டுள்ளன. புலம் பெயர் நாடுகளிலும் ஒன்றுபட்டு நின்ற புலிகள் அமைப்பில் பிளவுகள் காணப்படுவதாக எதிரிகள் கூறுகிறார்கள். அதேவேளை வன்னி மக்களைப் போலவே புலம் பெயர் தமிழரை அழிப்பதற்கான சதி வேலைகள் பல பக்கங்களிலும் அரங்கேறியுள்ளன. ஆனால் அனைத்து அவலங்களையும் ஈழத் தமிழர் கடப்பதற்கு வலுவாக மாவீரர் தியாகம் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. எத்தகைய நெருக்கடிகள் தலைதூக்கி நின்றாலும் புலம் பெயர் நாடுகளில் மாவீரர்தின நிகழ்வுகளை நடாத்திவிடுவது என்ற உறுதியுடன் அவ்வவ் நாடுகளில் தொடர்ந்தும் செயற்படும் விடுதலைப் புலிகள் அமைப்பின் பணியகங்கள் முயன்றுள்ளன.
எத்தகைய இடர்கள் வந்தாலும், எவர் தடுத்தாலும் மாவீரர்தின நிகழ்வுகளுக்கு சென்று தேசத்திற்காக இன்னுயிர் தந்த மாவீரர்களை அஞ்சலிப்பது நமது கடமை. உலகமே ஒன்று திரண்டு நிற்க போர்க்களமாடிய ஒரு வீர இனத்தின் வரலாறாய் உறங்கும் மாவீரர் நமது மண்ணின் மைந்தர்கள். இதில் மாறுபாடான கருத்து கொண்டு நிற்க யாரும் இங்கு இல்லை.
மாவீரர்களின் தியாகம் வீணானது அல்ல..
அந்தப் புனிதர்களின் கனவு நனவாகுமா என்ற கேள்வி பலர் மனதில் இப்போது உள்ளது..
ஆனால் அந்தக் கனவுகள் நிறைவேறக்கூடிய சர்வதேச காற்றுக்கள் மெல்ல மெல்ல வீச ஆரம்பித்துள்ளன.
.

மாவீரர் தியாகம் வீண்போகாது இதை ஈழத்தமிழினம் கண்முன் காணும் ..
மணியோசை கேட்கிறது..
தீபங்கள் சுடர்கின்றன..
மாவீரர் வாரம் ஆரம்பிக்கிறது…
அலைகள் 21.11.2010

Comments

  1. நிச்சயமாய் எமக்காய் உயிர் நீந்த்த அத் தியாக தீபங்களின் கனவுகள் மிக விரைவில் நனவாகும். மாவீரர் எமை ஒன்று சோப்பர்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire