தமிழ்ச் செல்வன் அண்ணா எங்கே போனாய்!
அண்ணா எங்கே போனாய்
அவசர அவசரமாய் எங்களை விட்டு
அண்ணா நீ எங்கே போனாய்
அவலப்படும் மக்களின்
துன்ப துயரங்களை
அவனியெல்லாம் நீ உரைத்தாய்
புன்னகையுடனேயே
புத்த அரசின் புழுகுகளை
வெளிக் கொணர்ந்தாய்!
அன்று
அலறியது தொலைபேசி
பின் குதறியது அதன் செய்தி
பதறியது மனம்
பின் கிறுகியது – தலை
என்ன பிழை செய்தோம் -நாம்
காற்றில் வந்தவனைக்
கரையேற்றிய பாவம்! –அன்று
அவலத்தில் வந்தவன் - இன்று
எம்மை ஆட்சி செய்கிறான்
எதிரி எம் மண்ணில்
எதிரி எம் கடலில்
நாம் என்ன செய்தோம்.
திலீபன் - பட்டினித் தீயில்
கிட்டன் - கடல் தீயில்
கௌசல்யன் - வஞ்சகத்தீயில்
அன்ரன் - நோய்த்தீயில்
தமிழ்ச் செல்வன் - குண்டுத் தீயில்
அனைத்தையும் நினைந்து
அழுவதற்கென்று
பிறந்த இனமல்ல - நாம்
ஆழ்வதற்கு பிறந்த இனம்
ஒன்று படுவோம் - ஒன்று படுவோம்
கண்ணீராலும் ஆயுதம் செய்து
கயவனை விரட்டுவோம்.
சிரிக்க கற்றுக் கொள் - தமிழ்ச் செல்வனைப் பார்த்து
பேசக் கற்றுக் கொள் - அன்ரனைப் பார்த்து
நேசிக்கக் கற்றுக் கொள் - திலீபனைப் பார்த்து
தாக்கக் கற்றுக் கொள் - கிட்டண்ணாவைப் பார்த்து
திட்டம் தீட்டக் கற்றுக் கொள் - பொட்டம்மானைப் பார்த்து
அனைத்தையும் கற்றுக் கொள் - எம் தலைவரைப் பார்த்து.
ஆக்கம் ரத்தினா.
Source: www.pathivu.com
Comments
Post a Comment