Wednesday, January 19, 2011

ராமநாதபுரம் மாவட்டம் :சத்துணவை பார்க்காத அரசு பள்ளி : ஏமாற்றத்தில் குழந்தைகள்

Source:http://www.dinamalar.com/district_detail.asp?id=168984

ராமநாதபுரம் : பள்ளி தொடங்கிய நாள் முதல் சத்துணவு, முட்டை வினியோகிக்காத அரசு பள்ளி அவலத்தால், ஆதிதிராவிட குழந்தைகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியத்தில் உள்ளது குளத்தூர் காலனி. இப்பகுதியில் 2002 செப்., 17ல் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. 
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் உதயமான இப்பள்ளி, அதன் பின் அதிகாரிகளின் பாராமுகத்தில் இயங்கத்தொடங்கியது. பள்ளி தொடங்கிய நாள் முதல் இன்று வரை சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. 


கல்வித்துறை அதிகாரிகளிடம் கிராமமக்கள் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. அமைச்சர் தங்கவேலனின் மகன் திவாகரன், நயினார்கோவில் ஒன்றியக்குழுத்தலைவராக உள்ள நிலையில், சத்துணவு திட்டம் சென்றடையாதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்துணவு திட்டம் இல்லாத பள்ளிகளில் அருகில் உள்ள பள்ளியிலிருந்து சத்துணவு வழங்கும் நடைமுறை உள்ளது. இப்பள்ளியிலிருந்து ஒன்றரை கி.மீ., தூரத்தில் குளத்தூரில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கிருந்தாவது சத்துணவு கொண்டு வரச்செய்திருக்கலாம். அதற்கும் அதிகாரிகள் முன்வரவில்லை. இருக்கும் இரண்டு ஆசிரியர்களில் ஒருவரை வேறு பகுதிக்கு "டெப்டேஷன்' அனுப்புவதால், பாடம் எடுப்பதிலும் சிரமம் உள்ளது. இதனாலேயே பள்ளிக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து, 12 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த காமராஜ் கூறியதாவது: எனது குழந்தைகள் இங்கு தான் படிக்கின்றனர். இதுவரை சத்துணவு, முட்டை வழங்கியதில்லை. மதிய உணவுக்கு வீட்டிற்கு வந்துவிடுவார்கள்.பள்ளி தொடங்கியது முதல் இதே நிலை தான் உள்ளது, என்றார். தலைமை ஆசிரியர் அலங்கீர்தம் கூறியதாவது: சத்துணவு கேட்டு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். அதற்கான செலவு கணக்குகள் எதுவும் எழுதவில்லை, என்றார்.

No comments:

Post a Comment

Kids Enjoying in Village Pond