"இஸ்ரேல் மொசாட் படை" வழங்கும் ஒத்த பாதுகாப்பு தேசியத் தலைவருக்கு வழங்கப்பட்டதா?

Source:http://www.athirvu.com/
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அவர் மெய்ப்பாதுகாப்பாளர்களால் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேறு எங்கும்பார்க்க முடியாத அளவு பாதுகாப்பு வாய்ந்தது என இலங்கைஇராணுவத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளார்.


தேசியத் தலைவர் இரவு நேரத்தில் தங்கும் இடம் ஒன்றை தற்போது இராணுவம் தனதுஇரகசியக் கட்டளைபீடம் ஒன்றாக மாற்றியுள்ளதாக அறியப்படுகிறதுஇந்த இரகசியக்கட்டளை பீடத்துக்குச் சென்ற நபர் ஒருவருக்கு மேற்படி இராணுவம் இத் தகவல்களைத்தெரிவித்துள்ளது.

அதன் முக்கிய நபர் ஒருவருக்கு "மொசாட் படைஎவ்வாறு பாதுகாப்பு வழங்குமோஅதுபோலவே தேசியத் தலைவரின் பாதுகாப்பும் அமைந்திருந்ததாக அவர் மேலும்தெரிவித்தார்.

சுமார் 6 கிலோமீற்றர் சுற்றளவுள்ள மூன்று முட்கம்பி வேலிகளால் ஆன சுற்று வளையம்ஒன்றுக்குள் தேசியத் தலைவர் தங்குமிடம் இருந்ததாகவும்அதனைச் சுற்றி 10காவலரண்கள் இருந்ததாகவும்அவை ரோந்தில் ஈடுபடும் வண்ணம்அமைந்திருந்ததாகவும் அறியப்படுகிறது.

பின்னர் அந்தச் சுற்றுவளையத்தைச் சுற்றி அடுத்த முட்கம்பிகள் போடப்பட்டு, 7காவலரண்கள் சீரான முறையில் அமைந்திருந்ததாகவும்அதன் பின்னரே தேசியத்தலைவர் தங்கியிருந்த வீடு இருந்ததாகவும் சொல்லப்படுகிறதுஒரு சுற்றுவட்டப்பாதையில் இரவுநேரங்களில் 3 அடுக்குகளாக ரோந்து செல்லக்கூடிய வகையில் அதுஅமைந்திருந்தது என் குறப்படுகிறது.

அவரது வீட்டிற்கு நேரடியாக உள்ளே செல்லக்கூடிய ஒரு பாதையும்பின்புறமாகவும்வேகமாகவும் பதுங்கு குழிக்குள் செல்லக்கூடிய வகையில் ஒரு பாதை இருப்பதாகவும்கூறப்படுகிறதுஅதாவது இலங்கை போர் விமானங்கள் அவர் வாகனத் தொடரணியைபின் தொடர்ந்து வந்தால் கூடஅவர் வாகனம் நேரடியாக சுரங்கப் பாதைக்கு செல்லும்திறன்கொண்டதாக அது அமைந்துள்ளது என அவ்வதிகாரி விளக்கியுள்ளார்இதுபோன்றபாதுகாப்பு ஏற்பாடுகள் இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவான "மொசாட்அமைப்பாலேயேஅதிகம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் விவரித்துள்ளார்அதுபோல மொசாட்படையினர் கொடுக்கும் ஆலோசனைகளைப் போன்ற அமைப்புகளே அங்கேகாணப்பட்டதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

மிகவும் நேர்த்தியாகவும்சமாந்தரமாகவும் எவரும் உட்புகுமுடியாத அளவு உச்சக்கட்டபாதுகாப்பு அவருக்கு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறதுதலைவரின் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டிருந்தவர்கள்முக்கிய நபர்களைப் பாதுகாக்கும் பயிற்சிகளைப்பெற்றிருந்ததாகவும்அவர்கள் பல வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் எவ்வாறு தனதுதலைவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவார்கள் என்ற விடையத்தை நன்குகற்றுத்தெரிந்துவைத்திருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்சமீபத்தில் இப் பகுதிகளில் இருந்துகைப்பற்றப்பட்ட பல புத்தகங்களும்பாதுகாப்பு சம்பந்தமான வீடியோக்களுமே இதற்குஆதரம் என்கிறார் அந்த அதிகாரிதேசிய தலைவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும்,அவ்விடத்தை இராணுவம் தற்போது இரகசியக் கட்டளைப் பீடமாக மாற்றியுள்ளதாகவும்அறியப்படுகிறது.





Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire