சுதந்திரத் தமிழீழமும், விடுதலைத் தமிழர்களும்!
Source: http://www.tamilwin.com/show-RUmqzBRbNUls7.html கடந்த கால துயரங்கள் கடந்துபோகும் போதெல்லாம் ஓன்று நாம் உடைந்து போகின்றோம். அல்லது உறைந்து போகின்றோம். பொதுவாக நவம்பர் மாதமென்பது மழையாலோ அல்லது பனியாவோ குளிர்விக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. ஆனால் அந்த முப்பது நாட்களும் தமிழர்களுக்கு மட்டும் வெப்பமாகவே வேதனையைத் தருகின்றது. ஆம் .......... நவம்பர் மாதம் ........ மாவீரர் மாதம் எங்கள் மனங்கள் ரணங்களாகிய படியே மாவீரர்களை நினைவு கூர்கின்றோம். "மாவீரர்கள் " உயிரைக் கொடுத்து விடுதலையை கேட்பவர்கள் தம்மை அழித்து தமிழர்களுக்கு விலாசம் தந்தவர்கள். அவர்களை நினைத்து இப்போது புகழப்போறீர்களா? அல்லது அவலத்தை நினைத்து எப்போதும் புலம்பப் போறீர்களா? இந்த இரண்டைத் தவிர சாமான்யத் தமிழர்களால் இப்போது என்ன பெரிதாய் சாதித்துவிட முடியுமென்றால் "முடியும்" தமிழர்களே என்று முழக்கமிட்டுச் சொல்வேன். சரித்திரம் படைப்பதற்கு முன் சரித்திரம் படைத்த எல்லோருமே சாமான்யர்கள் தான். இன்றைய போராளிகளெல்லாம் நேற்றைய சாமான்யர்கள் தான். என்ன நீங்கள் எழுந்து விடாத அளவிற்கு உங்கள் மீது...