Monday, November 26, 2012

பூச்சியியல் கட்டுப்பாட்டு துறை அனுமதி தருவதில் தாமதம் தேங்கும் வேளாண் விளை பொருட்களால் வர்த்தகம் பாதிப்பு

Source:http://www.dinamalar.com/district_detail.asp?Id=593184

சென்னை:மத்திய பூச்சியியல் கட்டுப்பாட்டு துறை அனுமதி தருவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், சென்னை துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் வேளாண் விளைபொருட்களின் வர்த்தகம் பாதிக்கப்
பட்டுள்ளது.

வர்த்தகர்கள் பிற துறைமுகங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.சென்னை துறைமுகம் ஆண்டுக்கு, 18 லட்சம் "கன்டெய்னர்களை' கையாள்கிறது.
இதில், மக்கா சோளம், மிளகாய், வெங்காயம், வேர்க்கடலை போன்ற, 1.8 லட்சம் "கன்டெய்னர்கள்', வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலக வர்த்தக ஒப்பந்தத்தின்படி, இந்த விளை பொருட்களை மத்திய பூச்சியியல் துறை ஆய்வு செய்து, பூச்சி பாதிப்பு ஏதும் இல்லை என, சான்று அளிக்க வேண்டும்.தென் மாநிலங்களுக்கான பூச்சியியல் கட்டுப்பாட்டு துறை அலுவலகம், சென்னை மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
துணை இயக்குனர், உதவி இயக்குனர், ஆய்வாளர்கள் என, 18 முக்கிய அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.சென்னை துறைமுகம் வழியாக அனுப்ப வேண்டிய, வேளாண் விளைபொருட்கள் குறித்து, ஏற்றுமதியாளர் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து, அன்றைய தினமே, சான்று அளிப்பர். 

போதிய அளவுக்கு பூச்சிக்கட்டுப்பாடு செய்யாமல் இருந்தால், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வைப்பர்.கடந்த, 15 நாட்களாக, இதற்கான அனுமதி அளிப்பதில், பூச்சியியல் கட்டுப்பாட்டு துறை, மூன்று, நான்கு நாட்கள் என, தாமதம் செய்து வருவாதாக கூறப்படுகிறது.
இறக்குமதியாகும் வேளாண் பொருட்களுக்கும் இதுபோன்று அனுமதி தேவை. இதற்கும், அனுமதி தர நான்கு நாட்கள் வரை ஆவதால், "கன்டெய்னர்கள்' தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஏற்றுமதி வர்த்தகர் ஒருவர் கூறியதாவதுசென்னையை சுற்றியுள்ள, 30 "வேர்ஹவுஸ்'களில் "கன்டெய்னர்கள்' வந்ததும், அவற்றை பரிசோதித்து சான்று அளிக்க, பூச்சியல் கட்டுப்பாட்டு துறைக்கு விண்ணப்பிக்கிறோம்.முன்பு, ஒரு நாளில் சான்று தரப்பட்டது. "ஆன்-லைன்' வசதி வந்தும், தற்போது நான்கு நாட்கள் ஆகிறது. மீனம்பாக்கத்திலிருந்து அதிகாரி வந்து கிடங்குகளில் ஆய்வு செய்து சான்று தர வேண்டும்.போதிய ஆட்கள் இல்லை என, தாமதம் செய்கின்றனர். இதனால், பொருட்கள் நாசமாவதோடு, "கன்டெய்னர்' தேக்க கட்டணம் என, பல மடங்கு செலுத்த வேண்டியுள்ளது. இறக்குமதியாகும் பொருட்கள் தேங்குகின்றன.நிலைமை சிக்கலாக உள்ளதால், பல வர்த்தகர்கள், தூத்துக்குடி, விசாகப்பட்டினம், கிருஷ்ணாம்பட்டினம் என, பிற துறைமுகங்களை நோக்கி செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.மற்றொரு வர்த்தகர் கூறுகையில், ""கடந்த மாதம், பூச்சியியல் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி, ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுத்தனர். வர்த்தகர்கள் புகார் செய்ததாக கருதி, பழிவாங்கும் நோக்கில், அதிகாரிகள் சான்று வழங்குவதை திட்டமிட்டு தாமதப்படுத்துகின்றனர்,'' என்றார்.கடந்த சில ஆண்டு
களுக்கு முன், ராயபுரம் பகுதியில் பூச்சியியல் கட்டுப்பாட்டு துறையின் கிளை செயல்பட்டு வந்தது. அப்போது, இதுபோன்று ஏதும் சிக்கல் இல்லை.மீண்டும், துறைமுக வளாகம், சுங்க துறை வளாகம் என, துறைமுகத்தை ஒட்டிய பகுதியிலேயே பூச்சியில் துறை அலுவலகத்தின் கிளையை துவக்கினால், சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்; ஏற்றுமதி வர்த்தகம் மேம்பட வழி வகுப்பதாக அமையும்.

No comments:

Post a Comment

Kids Enjoying in Village Pond