Thursday, September 27, 2012

Justice Kapadia: right man, right time, right place


Source: http://www.livemint.com/Specials/hDId0qCPi3BqfJnlN2Mc1H/Right-man-right-time-right-place.html
At 871 days, chief justice Kapadia has enjoyed one of the longest tenures in recent history as India’s judicial chief. Photo: HT
There will be good judges after him, just as there were before him, but few can claim the enviable legacy that Chief Justice Sarosh Homi Kapadia will when he retires on Friday after 28 months in office.
In part this is because of the timing and circumstances through which Kapadia steered the apex court. He took charge at a time when serious questions were being posed about India’s ability to make the transition from a regime defined around the government’s discretion to one that was transparent and rules-based—akin to that pursued (or sought to be pursued) in industrialized countries.
Not only did the Chief Justice serve as the moral anchor to a nation desperate for assurance, he also pronounced judgements that unequivocally emphasised the sanctity of law at a time when a wave of corruption scandals was threatening to trigger a cycle of cynicism.
“At a time when things were really getting bad, there was one man whose integrity could not be doubted at all,” commented one senior counsel, who did not wish to be identified.
This personal standing added to and complemented the ability of India’s apex court to uphold the law. In cases such as ones concerning the 2G scam, the tax on Vodafone Group Plc., and the spat between the Sahara group and stock market regulator Sebi, the Kapadia-era Supreme Court has arguably laid down the law for both the government and companies.
Similar clarity on the sanctity of law was provided in a ruling by the Supreme Court when it set aside its own previous rulings to remove the ambiguity that had crept into the interpretation of provisions of the Arbitration and Conciliation Act, 1996, which allowed interference by domestic courts in arbitration disputes with foreign owners.
In the Vodafone income tax judgment, Kapadia outlined the philosophy behind the court’s reasoning. “FDI (foreign direct investment) flows towards location with a strong governance infrastructure which includes enactment of laws and how well the legal system works. Certainty is integral to rule of law. Certainty and stability form the basic foundation of any fiscal system.”
Last Saturday, Kapadia said as much at a conference on economic growth and the business environment in the presence of his successor, chief justice designate Altamas Kabir, and Prime Minister Manmohan Singh.
The law, he said, as reported in The Hindu, was the “single largest” factor stimulating economic growth.
That was a rare public appearance by a chief justice notorious for keeping a low public profile outside the realms of the Supreme Court.
Born into a poor Parsi family just after India’s independence, he later worked as a peon-level employee in Bombay, lunched on roasted channa at Mumbai’s Flora Fountain near the Bombay high court. He began practising law in 1974 and in 1991 he became a judge in the Bombay high court.
While he was at his best in dealing with vexing issues involving economics and business, Kapadia will also be remembered for upholding the constitutional validity of the revolutionary Right to Education Act. Less favourably, perhaps, the constitution bench hearing into regulating media reporting of court cases attracted flak not just from media but also from several advocates for an ambiguous pronouncement.
That said, judging the law is only half the job of a Chief Justice of India, who is nominally entrusted with managing India’s sprawling court system that comes loaded with more than 30 million pending cases and the baggage of institutional and historical inefficiencies.
When he took office in April 2010 a total of 55,018 cases were pending in the Supreme Court. This increased by nearly 16% until August 2012, when 63,749 cases were pending, of which 42,583 have been on the books for more than one year. The numbers in the lower courts too, which, to be fair, are not directly under Kapadia’s control, have continued to rise.
What will make Kapadia’s legacy enduring is that his successors will not have his advantage of time on their side. At 871 days, Kapadia has enjoyed one of the longest tenures in recent history as India’s judicial chief—in 27 years, only three have served for longer.
Kapadia’s successors Kabir, and after him, Justice P. Sathasivam, are scheduled to head the country’s judiciary for only around nine months each. 

Monday, September 24, 2012

துறைமுகம் செல்லும் கண்டெய்னர் லாரிகள் 4 நாள்கள் வரிசையில் நிற்கும் அவலம்...


...தொடர்ந்து போக்குவரத்து ஸ்தம்பிப்பு: இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிப்பு
பிரச்னைக்கு யார் காரணம்?

"இத்தனைக்கும் கப்பல்த்துறை அமைச்சர் ஜி.கே.வாசன்நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இணை அமைச்சர் பழனிமாணிக்கம் ஆகிய மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான். மூன்று அமைச்சர்களும் ஓரே நாளில் இப்பகுதிக்கு நேரடியாக வந்து ஆய்வு, தமிழக முதலமைச்சர் அளவில் ஆலோசனை செய்து துரித நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வு காணமுடியும்."

முகவை.க.சிவகுமார்.
திருவொற்றியூர்: சென்னைத் துறைமுகத்திற்குச் செல்லும் கண்டெய்னர் லாரிகள் 4 நாள்கள் வரிசையில் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.  துறைமுக இணைப்புச் சாலைகளான எண்ணூர் விரைவுசாலை, மாதவரம் உள்வட்டச் சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை உள்ளிட்டவைகளில் ஆயிரக்கணக்கான லாரிகள் தொடர்ந்து வரிசை கட்டி நிற்கின்றன. 
           இதனால் பயணிகள் பேருந்து உட்படட அனைத்து போக்குவரத்தும் அடியோடு ஸ்தம்பித்துள்ளன.  இதனால் பொன்னேரி, மீஞ்சூர், மணலி, மாதவரம், திருவொற்றியூர் இடையே பயணிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழக்கைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீஞ்சூரில் இருந்து மணலி புதுநகர் வழியாக  திருவொற்றியூர் வர 30 நிமிடங்கள் ஆகும் என்பது இயல்பானது. ஆனால் தற்போது மீஞ்சூரிலிருந்து பொன்னேரி, பஞ்செட்டி, காரனோடை, செங்குன்றம், மாதவரம் வழியே பணித்தால் சுமார் 2 மணி நேரம் ஆகும். கண்டெய்னர் லாரிகளால் போக்குவரத்து ஸ்தம்பிப்பதால் பொதுமக்களுக்கு வேறு வழியில்லை. இவ்வழியே பயணிகள் பேருந்து இயக்கம் பாதிக்கும் மேல் குறைந்து விட்டது. மீஞ்சூர், பொன்னேரி செல்ல சாலை மார்க்கப் பயணத்திற்கு உத்தரவாதம் இல்லை என்பதால் ரயில் பயணத்திற்கு பெரும்பாலோர் மாறிவிட்டனர். இச்சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் கூட பயணிக்க முடியாத அவல நிலை தொடர்ந்து நீடிக்கிறது.
ஓட்டுனர்கள் அவதி, பணி செய்ய மறுப்பு:
     துறைமுகம் செல்லும் லாரிகள் நான்கு நாள்கள்வரை காத்திருப்பதால் லாரி ஓட்டுனர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு போதிய உணவு வசதியில்லை. இயற்கை உபாதைகளைக் கூட செய்ய முடிவதில்லை. இதனால் சென்னையில் கண்டெய்னர் லாரிகளை ஓட்ட டிரைவர்கள் மறுக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் 'கத்துக்குட்டி' டிரைவர்கள் லாரிகளை இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பல உயிரழக்கும் சம்பவங்களும் தொடர்கின்றன.  
     மாதக்கணக்கினல் நீடிக்கும் இப்பிரச்னை குறி்த்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசு அதிகாரிகள்  ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவிப்பதிலேயே காலம் கடத்துவது இப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.  இப்பிரச்னைக்கு யார் காரணம் என்பது குறித்த முழுமையான அலசல் இதோ:
கிழக்கு நுழைவு வாயில்:
     இந்தியாவின் கிழக்கு நுழைவு வாயில் என அழைக்கப்படும் சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு 6.5 கோடி டன் அளவிற்கு சரக்குகள் கையாளப்படுகின்றன.  துறைமுகத்தில் உள்ள இரண்டு முனையங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் கண்டெய்னர்கள் ஏற்றி இறக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
ஆனால் இதற்கேற்ற வகையில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் துறைமுக நிர்வாகம் மெத்தனமாகச் செயல்பட்டதால் தற்போது கண்டெய்னர் லாரிகள், கனரக லாரிகள் உள்ளிட்டவைகளைக் கையாள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டம் நிறைவேறுவதில் தாமதம்,  துறைமுகம்-மதுரவாயல் மேம்பாலத் திட்டத்திற்கு தடை உள்ளிட்டை பிரச்னைகளால் துறைமுகத்தில் தற்போதைய கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை.
மூடப்பட்ட நுழைவு வாயில்கள், தடை செய்யப்பட்ட சாலைகள்:
     சென்னைத் துறைமுகத்திற்கு தினமும் 5 ஆயிரம் கனரக வாகனங்கள் வந்து செல்ல வேண்டும்.  ஒரு காலத்தில் 14 நுழைவு வாயில்கள் வழியே போக்குவரத்து நடைபெற்ற இத்துறைமுகத்தில் தற்போது ஒரிரு வாயில்களில் மட்டுமே கனரக வாகனப் போக்குவரத்து நடைபெறுகிறது. தினமும்  சுமார் 3 ஆயிரம் கண்டெய்னர் லாரிகளும்  30 அடி கொண்ட ஒரே நுழைவு வாயிலில்தான் சென்று வர வேண்டிய அவலநிலை உள்ளது.   தலைமைச் செயலக பாதுகாப்பு, குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு போன்றவைகளால் ஏற்கனவே நடைபெற்றுவந்த முக்கிய வாயில்கள் அனைத்து மூடப்பட்டன.
      அடுத்து சென்னை மாநகரில் இரவு நேரங்களில் அனுமதிக்கப்பட்டு வந்த கண்டெய்னர் லாரிகள் அனைத்தும் மாநகருக்குள் நுழைய போக்குவரத்து போலீஸார் தடை விதித்தனர். இதனால் அனைத்து லாரிகளும் மாதவரம், மணலி. திருவொற்றியூர் வழியாகத் திருப்பிவிடப்பட்டன. ஏற்கனவே விழிபிதுங்கும் நிலையில் இருந்த தற்போதைய சாலை முற்றிலும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.  ஏற்கனவே நெருக்கடி மிகுந்த சாலையில் மேலும் நெருக்கடியை ஏற்படுத்திய இந்த முடிவு குறித்து கவலைப்படாத போக்குவரத்து துணை, இணை ஆணையர்கள் எல்லாம் குளறுபடியான உத்தரவுகளையே அளித்தனர்.
எதைப் பற்றியும் கவலைப்படாத சுங்கத்துறை:
     கண்டெய்னர் லாரிகள் நெரிசல் பிரச்னையில் முக்கிய பங்கு சுங்கத்துறையைச் சார்ந்தது.  சரக்குப் பெட்டக மையங்கள், தனியார் கிடங்குகளில் இருந்து கண்டெய்னர் லாரிகள் சுங்கத்துறை அதிகாரிகள் சீலிட்ட பிறகு துறைமுக நுழைவு வாயிலில் மீண்டும் சரி பார்க்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு புதிய விதிமுறைகளை சுங்கத்துறை ஆணையரகம் விதித்தது.  இதன்படி வெளியூர், தனியார் கிடங்குகளிலிருந்து வரும் கண்டெய்னர்கள் மாதவரத்தில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கு சரக்குப் பெட்டக மையத்திற்கு வந்து அங்கு சீல் சரிபார்க்கப்பட வேண்டும் எனவும், இதற்கென 24 மணி நேரமும் சுங்கத் துறை அதிகாரிகள் பணியில் இருப்பார்கள் எனக் கூறப்பட்டது.
               ஆனால் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் சென்று திரும்பும் அளவிற்கு இங்கு வசதிகள் கிடையாது.  24 மணி நேரம்மும் சுங்கத்துறை அதிகாரிகள் இருப்பார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் சில மணி நேரங்கள் இருந்தாலே அதிசயம் என்பதுதான் எதார்த்த உண்மை.  இதனால் ஏற்படும் தாமதத்தால் மாதவரம் உள்வட்டச்சாலையின் ஒரு புறம் நூற்றுக்கணக்கான லாரிகள் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கின்றன. எதிர் திசையில் துறைமுகம் நோக்கிச் செல்லும் லாரிகள் வரிசை கட்டி நிற்பதால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இரு வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன.  இது குறித்து தெரிந்தவர்கள் யாரும் இச்சாலையில் செல்லும் வழக்கத்தைத் தவிர்த்தனர். தெரியாதவர்கள் நடுகாட்டில் சிக்கியவர்களைப் போல் பல மணி நேரம் நெரிசலில் சிக்குகின்றனர்.  
முதல் நுழைவுவாயிலே மூல காரணம்: 
        துறைமுகத்தின் நுழைவு வாயிலில் சுங்கம், பாதுகாப்பு, சர்வே உள்ளிட்ட சோதனை நடைமுறைகளைச் செய்யவேண்டும்.  வரிசையில் நிற்கும் லாரிகளை விரைவாக உள்ளே அனுப்ப வேண்டும் எனில் கூடுதல் நுழைவு வாயில்கள், கூடுதல் அதிகாரிகள் வேண்டும்.  பல கட்ட முயற்சிக்குப் பிறகு கூடுதல் நுழைவுவாயில்களை கப்பல்துறைச் செயலாளர் பி.கே.சின்கா 6 மாதங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்படாததால் திறக்கப்பட்ட நுழைவு வாயில்கள் ஓரிரு நாள்களிலேயே மூடப்பட்டன. சுங்கத்துறையில் 40 சதவீத அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதால் கூடுதல் அதிகாரிகளுக்கு வழியில்லை என சுங்கத்துறை கைவிரித்துவிட்டது.  எனவே கண்டெய்னர் லாரிகள் மெதுவாகவே உள்ளே, வெளியே செல்ல முடியும்.  பிறகு காத்திருக்கும் லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக 30 கி.மீ. தூரத்திற்கு வரிசை கட்டி நிற்கின்றன. 
கவலைப்படாத அதிகாரிகள்:  
பல கி.மீ. தூரத்திற்கு தினமும் லாரிகள் வரிசைகட்டி நிற்கின்றன. போக்குவரத்து ஸ்தம்பித்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விரைவாக லாரிகளை உள்ளே அனுப்ப துறைமுக நிர்வாகமும் சரி, சுங்கத்துறையும் சரி தேவையான நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவே இல்லை. அவர்களைப் பொறுத்தவரை கண்டெய்னர் உள்ளே வந்தால்தான் அவர்கள் பிரச்னை. சாலைகளில் நிற்கும் லாரிகளுக்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம் என சுங்கத்துறை, துறைமுக நிர்வாக அதிகாரிகள் கேட்கின்றனர்.
    இத்தனைக்கும் கப்பல்த்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இணை அமைச்சர் பழனிமாணிக்கம் ஆகிய மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான். மூன்று அமைச்சர்களும் ஓரே நாளில் இப்பகுதிக்கு நேரடியாக வந்து ஆய்வு, தமிழக முதலமைச்சர் அளவில் ஆலோசனை செய்து துரித நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வு காணமுடியும். அதுவரை இப்பிரச்னைக்கு முடிவு சாத்தியமில்லை என்பதே எதார்த்த உண்மை.
கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்படுமா?
துறைமுகத்தின் நடவடிக்களை மேலோட்டமாகப் பார்த்தால் இது ஏதோ ஒரு நிறுவனத்தின் பிரச்னையாகத்தான் பார்க்கப்படும். ஆனால் இதன் பாதிப்பு என்பது ஒட்டுமொத்த தொழிற்துறை அனைத்தையும் பாதிக்கும்.  தொடர்ந்து தேக்கநிலை ஏற்பட்டால் பல்வேறு பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்.  கண்டெய்னர் போக்குவரத்து நெருக்கடி பிரச்னையால் துறைமுக பணிகளில் தேக்க நிலை தொடர்கிறது.  
       ஆனால்  தீர்வு காண வேண்டிய அதிகாரிகளோ ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி சாக்குப் போக்குச் சொல்வதில்தான் குறியாக உள்ளனர். மந்திரத்தில் மாங்காய் காய்க்காது என்பதை உணர்ந்து பிரச்னைகளைத் தீர்க்கவும், மேலும் தொடராமலும் இருக்கும் வகையில் அனைத்து தரப்பினர் அடங்கிய உயர்மட்டத்திலான கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை உடனே அமைக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.   இதில் கால தாமதம் ஏற்பட்டால் இன்னும் இன்னும் சில மாதங்களில் சென்னைத் துறைமுகம் தனது முக்கியத்துவத்தை இழக்கும் என்பதே தற்போதைய நிலைமை.

Saturday, September 22, 2012

காவிரி ஆணையத்தின் முடிவை கர்நாடகம் ஏற்க மறுப்பது இறையாண்மைக்கு எதிரானதில்லையா? நாம் தமிழர் கேள்வி


கர்நாடகத்திலுள்ள அணைகளில் இருந்து குறைந்தபட்சம் நாள் ஒன்றிற்கு 9,000 கன அணி நீரை தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடுமாறு பிரதமர் தலைமையிலான காவிரி நதி ஆணையம் அளித்த உத்தரவை நிறைவேற்றப்போவதில்லை என்று கர்நாடக முதல்வர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய நான்கு அணைகளிலும் இன்றைய நிலையில் 76 டி.எம.சி. தண்ணீர் இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளும் கர்நாடக முதல்வர், அடுத்த 25 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு 20 டி.எம்.சி. தண்ணீரைக் கூட திறந்துவிட மறுப்பது அநியாயமாகும். தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கினை மறுப்பதற்கு அவர் கூறும் காரணமும் வினோதமானது. கர்நாடகத்தின் விவசாய, குடிநீர் தேவைகளுக்கு ஒட்டுமொத்தமாக 155 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது, ஆனால் அணைகளில் இருப்போது 76 டி.எம்.சி. தண்ணீர்தான். எனவே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறியுள்ளார். கர்நாடகத்தில் காவிரியின் மீது கட்டப்பட்டுள்ள இந்த 4 அணைகளிலும் ஒட்டுமொத்தக் கொள்ளவு 100 டி.எம்.சி.க்கும் குறைவு என்கிறபோது, எப்படி 155 டி.எம்.சி. தண்ணீர் தேவையைப் பற்றி கர்நாடக முதல்வர் பேசுகிறார் என்று புரியவில்லை.

காவிரி நதி நீர் தகராறு தீர்ப்பாயத்தின்படி, அணைகளில் உள்ள நீரின் அளவைப் பொறுத்தே நதி நீர்ப் பங்கீட்டை செய்துகொள்ள வேண்டும் என்பதே. அதனடிப்படையில்தான், பற்றாக்குறை காலங்களில் அணைகளில் இருக்கும் நீரை பகிர்ந்து கொள்வது (டிஸ்டிரஸ் ஷேரிங்) எப்படி என்று வரையறை செய்யப்பட்டது. இந்த வரையறையைச் செய்தது காவிரி நதி ஆணையத்தின் ஒரு அங்கமாகவுள்ள தொழில்நுட்பப் பிரிவாகும்.

இந்த அடிப்படையில்தான் நாள் ஒன்றிற்கு 2 டி.எம்.சி. தண்ணீரை 24 நாட்களுக்கு திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் காவிரி நதி ஆணையக் கூட்டத்தில் கோரிக்கையை வைத்தார். அதை ஏற்றுக்கொள்ள கர்நாடக முதல்வர் மறுத்த நிலையிலேயே நாள் ஒன்றிற்கு ஒரு டி.எம்.சி. தண்ணீராவது திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டார். ஆனால் அதையும் ஏற்க மறுத்த கர்நாடக முதல்வர், இறுதியாக காவிரி ஆணையத்தின் தலைவரான பிரதமர், குறைந்தபட்சம் நாள் ஒன்றிற்கு 9,000 கன அடி நீரை அடுத்த 25 நாட்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டதையும் ஏற்க மறுத்தார். பிரதமரின் கோரிக்கையை மறுத்ததோடு மட்டுமின்றி, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பும் செய்தார் கர்நாடக முதல்வர். இப்போது 9,000 கன அடி நீரை வழங்குமாறு காவிரி நதி ஆணையம் (பிரதமர்) பிறப்பித்த உத்தரவையும் ஏற்க முடியாது என்று பெங்களூருவில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்குப் பிறகும் அறிவிக்கிறார் என்றால், இது இந்திய நாட்டின் இறையாண்மையை மீறிய நடவடிக்கை இல்லையா? என்று கேட்கிறோம்.

இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையால் 1998ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது காவிரி நதி ஆணையம். காவிரி நதி தீர்ப்பாயம் அளித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவே இந்த ஆணையத்தின் பணி. இந்த அளவிற்கு சட்ட ரீதியான அதிகாரம் படைத்த ஆணையத்தின் உத்தரவை ஏற்க மறுப்பது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். தனது அணைகளில் உள்ள நீரில் 4கில் ஒரு பங்கு நீரைக்கூட தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட முடியாது என்று கர்நாடக மாநில முதல்வர் அறிவிக்கிறார் என்றால், இயற்கையான காவிரி நதியின் மீது சொந்தம் கொண்டாட ஒரு மாநிலத்திற்கு உரிமை உள்ளதா என்று கேட்கிறோம். சட்டத்திற்குப் புறம்பான, இந்த நாட்டின் ஒற்றுமைக்கு உலைவைக்கக்கூடிய ஒரு முடிவை கர்நாடக முதல்வர் அறிவித்திருக்கிறார், மத்திய அரசு இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும். 1991ஆம் ஆண்டு முதல் இன்று வரை காவிரி நதி தீர்ப்பாயம் அளித்த உத்தரவுகளை ஒரு ஆண்டில் கூட முறையாக செயல்படுத்தவில்லை கர்நாடக அரசு. ஆனால், அந்த மாநிலத்தில் மத்தியில் ஆட்சி செய்த, செய்யும் பாரதிய ஜனதாவும், காங்கிரஸூம்தான் மாறி, மாறி ஆட்சி செய்கின்றன. ஆனால் கர்நாடகத்தைப் பொறுத்தவரை அவர்கள் மாநில அரசியலை அடிப்படையாக வைத்தே காவிரியில் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலை தொடர இதற்கு மேலும் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். எத்தனைக்காலம்தான் தமிழக விவசாயி ஏமாளியாக இருப்பான்? குட்டக்குட்ட குனிவது இதற்கு மேலும் தொடராது. ஒன்று, காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கு உடனடியாக கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லையேல், அரசமைப்பு சட்ட ரீதியாக அமைக்கப்பட்ட காவிரி ஆணையத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த மறுக்கும் கர்நாடக அரசை நீக்க வேண்டும். இந்திய மத்திய அரசு இறையாண்மை உள்ளதென்றால், இரண்டில் ஒன்றை நிறைவேற்றிட வேண்டும்.
 
நாம் தமிழர் கட்சிக்காக,

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

Thursday, September 20, 2012

தமிழ் மக்களின் முதுகெலும்பும் முறிகிறது…….!


Source:http://www.puthinamnews.com/?p=34969

முள்ளிவாய்க்காலின் பின்னர் தமிழர்களின் பலமாகவும், சர்வதேசத்தின்முன்னால் தமிழர்களின் பிரதிநிதிகளாகவும் இருப்பவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பே, தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்க வல்லது.
தற்போது கிழக்கு மாகாணத்தில் நடந்து முடிந்த தேர்தலானது தமி்ழ் மக்களிற்கு முக்கியமான ஒரு அரசியற்போராகும், இதுபோலவே அரசிற்கும் கிழக்கு மாகாணத் தேர்தல் மிக முக்கியமான ஒன்றாகும். பெரும் பரபரப்புக்கு மத்தியில் கிழக்கின் தேர்தல் முடிவிற்கு வந்துள்ளது, கிழக்கின் தேர்தல் முடிவுகளின்படி எந்தக்கட்சியும் பெரும்பான்மை வாக்கை பெறாததால் இன்னுமொரு கட்சியின் தயவில்தான் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில் எல்லாக் கட்சிகளும் உள்ளன, இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தனது பங்கிற்கு ஏனய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முடிவெடுத்துக் கொண்டது. இந்த இடத்தில்தான் கூட்டமைப்பின் அரசியல் பாதையை சற்று ஆழமாக பார்க்கவேண்டியுள்ளது
.
ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழ்மக்கள் தமக்கான சலுகைகளோ, உதவிகளோ, நிவாரணங்களோ, புனர்நிர்மான கட்டுமான உதவிகளோ கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதன் மூலம் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தும் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க முன்வரக் காரணம்,
இலங்கைத்தீவில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பெற்றுக்கொள்ள போராடும் ஒரு தேசிய கட்சியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர்கள் பார்க்கிறார்கள். இதனாலேயே ஆளும் கட்சியின் பிரதிநிதிகளிற்கு வாக்களிக்காது கூட்டமைப்பிற்கு வாக்களிக்க முன்வருகிறார்கள் தமிழர்கள்.
இப்போது வாக்குகளை பெற்றுக்கொண்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏதோ சுயேற்சைக்குழுக்கள் செயற்படுவது போல் இன்று செயற்படத் தொடங்கியுள்ளது, கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு முதலில் முஸ்லீம் காங்கிரசுடன் கூட்டணிக்கு தயார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாகவே அறிவித்தது. அத்துடன் முஸ்லீம் காங்கிரஸ்சே முதலமைச்சராக அமர்வதானாலும் அதற்கும் தாம் சம்மதம் என்று பகிரங்கமாக அறிவித்து. இது அவர்களின் விட்டுக்கொடுக்கும் அரசில் பண்பை உணர்த்துகிறது.
ஆனால் இன்றுவரை முஸ்லீம் காங்கிரஸ் தனது கடும்போக்கில் இருந்து கொஞ்சமும் இறங்கிவராது அரசுடன் கூட்டணி வைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை செய்து வருகிறது, இத்தனைக்கும் தேர்தல் காலத்தில் அரசை எதிர்த்து பிரசாரம் செய்த கட்சிகளுள் முஸ்லீம் காங்கிரசும் முக்கியமான ஒன்று. முஸ்லீம் காங்கிரஸ் கூட்டமைப்புடன் கூட்ணிவைக்காது ஆளும் கட்சியுடன் கூட்டணி வைக்குமானால் அது தமிழ் மக்களிற்கு முஸ்லீம் காங்கிரஸ் செய்யும் துரோகமாக கருதவேண்டும். ஆனால் கூட்டமைப்பு அரசுடன் கூட்டணி வைத்துக்கொண்ட பின்னர் யாரும் முஸ்லீம் காங்கிரசை துரோகிகள் என்று சொல்ல முடியாது.
இந்த இழுபறி நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போது எடுத்துள்ள அதிரடி முடிவு கூட்டமைப்பின் கொள்கைக்கு முரணாகவும், அதன் மேல் வைத்துள்ள அபிமானத்தையும் குறையச் செய்துள்ளது. அதாவது கூட்டமைப்பு இப்போது அரசியல் அடிமட்டத்திற்கு விழுந்து மகிந்தவின் கால்களை பிடிக்கும் நிலையில் உள்ளது, என்பதை சிந்திக்கும் யாராலும் ஜீரணிக்கமுடியாது.
அது என்னவெனில் முஸ்லீம் காங்கிரஸ் கூட்டமைப்பை நெருங்கி வராது ஆளும் அரசின் பக்கம் கூட்டணி வைக்க விரும்புவதால். இனியும் பொறுத்திருக்க முடியாது என்று கொதித்தெழுந்துள்ள திரு. சம்பந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆழும் மகிந்த அரசுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புவதாக அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டார். இதைக்கேட்கும்போதே கூட்டமைப்பின் அரசியல் பாதை தெளிவாக தெரிகிறது. சரி இப்போது அரசுடன் கூட்டமைப்பு ஏன் கூட்டணி வைக்கக்கூடாது என்று கருதுகிறோம் என்று பார்க்கலாம்.
இன்றைய நிலையில் இலங்கைத்தீவில் தமிழ் மக்களின் உரிமைக்காக அரசுடன் பேரம் பேசும் வல்லமையும் மக்களின் பலமும் உள்ள ஒரே கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பே ஆகும். ஏனெனில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முள்ளிவாய்க்கால் தோல்வியின் பின்னர் இன்று மூன்று ஆண்டுகள் ஆனாலும் அந்த இடத்தில் இருந்து மீண்டு, மீண்டும் தமிழ் மக்கள் தங்களிற்கான ஆயுத பலத்தில் நின்று கொண்டு பேரம் பேசும் அரசியல் நிலையில் இன்று தமிழ் மக்கள் இல்லை,
இதை வேறுவிதமாக சொல்வதானால் முள்ளிவாய்க்கால் தோல்வியிலிருந்து தமிழ் மக்கள் இப்போதும், இனி எப்போதும் மீளக்கூடிய நிலையில் இல்லை என்று கூறலாம்.ஏனெனில் அவர்கள் ஒரு பிழையாக ஒரு மாயையான ஒரு மனநிலையில் சஞ்சரிக்கிறார்கள்.
ஒவ்வொரு மாவீரர் தினங்களும், மற்றும் வெற்றிச்சமர்களின் நினைவு நாட்களும், வெறும் சம்பிரதாயங்களாகவும் நினைவு தினங்களாகவும் மட்டுமே இன்று மாறியுள்ளது. மாறாக அவர்களுடன் நினைவுடன் தாம் தொடர்ந்து விடுதலைப்பாதையில் பயணிக்க தயாரான மனநிலையில் இன்று இல்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான ஒரு காரணத்தை கூறலாம்,
அது சிறிலங்கா புலனாய்வு நிறுவனம். முள்ளிவாய்க்காலின் பின்னர் காலத்திற்கு காலம் தமிழ் மக்கள் மத்தியில் புலிகள் தொடர்பான புனைகதைகளை திட்டமிட்டே அரச புலனாய்வுத்துறை பரப்பி வருகிறார்கள், தமிழ் மக்களும் அதை உண்மை என்றே நம்பியும் வருகிறார்கள். இதை விட எதிர்காலத்தில் இன்னும் மோசமான ஒரு சம்பவமும் நடக்க உள்ளது.
அது ஏற்கனவே ஒரு தடைவை சிறிலங்கா அரச புலனாய்வு துறையால் வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்க்கப்பட்ட ஒன்றுதான், அது வேறொன்றுமில்லை, தமிழீழ விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம். இன்று தமிழ் மக்களிற்கு புலிகள் எவ்வளவு முக்கியமோ இல்லையோ ஆனால் சிறிலங்கா அரசிற்கு புலிகளை மீண்டும் இயக்கவேண்டிய அரசியற் பின்னணி உள்ளது. இது தொடர்பாக ஆராய்வதானால் அது வேறு ஒரு திசையில் செல்லும் என்பதால், இப்போது விடத்திற்கு வருவோம்.
விடுதலைப்புலிகளின் பலம் இன்று இல்லை என்பதாலும் இப்போது தமிழர்களிற்கான ஆயுத பலம் இல்லாததாலும். தமிழ் மக்கள் விரும்பியோ விரும்பாமலோ அரசியற் பாதையில் சென்றே எமக்கான குறைந்த பட்ச அதிகாரத்தையேனும் பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே ஆயுத பலம் இல்லை என்பதை கருத்திற் கொண்டுதான் ஒவ்வொரு முடிவினையும் எடுக்கவேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தனக்கு இருக்கும் ஆதரவை வைத்துக்கொண்டு அரசுடன் பேரம் பேசும் அரசியல் நிலையில் இருந்தால்தான் தமிழ் மக்களிற்கான ஒரு குறைந்தபட்ச அரசியல் அதிகாரத்தையேனும் பெற்றுக்கொள்ளலாம். மாறாக இணக்கப்பாட்டு அரசியல் என்பதை கூட்டமைப்பு ஆதரிக்குமானால். கூட்டமைப்பிற்கும், E.P.D.P டக்ளஸ் தேவானந்தாவிற்கும் என்ன வித்தியாசம்?.
டக்ளஸ்சும் அதையேதான் செய்கிறார். அரசுடன் ஒட்டியிருந்துகொண்டு, தானும் தனது குழுக்களும் சுகபோகமாக வாழ்ந்துகொண்டு அரசின் அமைச்சுப் பதவிகளை வைத்துக்கொண்டு மக்களிற்கு சிறு உதவிகள் மற்றும் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்துக்கொண்டு. மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சி என்று கூறிக்கொண்டு, உண்மையிலேயே அந்த கொள்கையை பிரதிபலிக்காது கொள்கையில்லாத ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு சலுகை அரசியல் செய்து வருகிறார்.
இதையா கூட்டமைப்பும் விரும்புகிறது? இதை செய்வதற்கு கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டிய தேவை இல்லையே. உண்மையில் கிழக்கு மாகாண மக்கள் போரினால் பெரியளவில் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆளும் கட்சியினரிற்கு வாக்களித்திருந்தால் அவர்களிற்கு ஆளும் கட்சியும் தமக்கு ஆதரவாக இருக்கும் மக்களிற்கு உதவிகள் புனர்நிர்மாண உதவிகள் மற்றும் வேலைவாய்ப்புக்களை வழங்கியிருப்பர். பாதிக்கப்பட் மக்களும் மீண்டும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவியாக இருந்திருக்கும், இதையெல்லாம் அம்மக்கள் செய்திருந்தால் அம்மக்களையும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்திய ஆழும் கட்சி பிரதிநிதிகளையும் துரோகிகள் என்று அழைத்திருப்பர். உண்மையிலேயே தேவை இருந்தும் அம்மக்கள் அரசியல் தீர்வை எதிர்பார்த்தே கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்கள். சலுகைகளை எதிர்பார்த்து அல்ல.
அரசுடன் ஒட்டிக்கொண்டு ஒருபோதும் எந்த உரிமைகளையும் பெறமுடியாது. பெரும்பான்மை பலத்தில் இருந்துகொண்டு விட்டுக்கொடுப்புகள் செய்யாது நேர்மையான அரசியல் பாதையில் தொடர்ந்து பயணிப்பதே ஒரு வெற்றிப்பாதையாக இருக்கும், ஏனெனில் இன்று சர்வதேசம் தமிழ் மக்களின் பிரச்சனையை கூர்ந்து கவனித்துக்கொண்டு இருக்கிறது.
ஆனால் கூட்டமைப்பு பிழையான வழிநடத்தலில் செல்கிறது… இந்த முடிவுகளின் பின்னணியில் ஒரு வெளிநாட்டு புலனாய்வு விறுவனம் உள்ளது இதன் வழிநடத்தலில்தான் இன்று கூட்டமைப்பு செல்கிறது. இது சுயநல உலகம் கூட்டமைப்பு இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
நீங்கள் இருந்துபாருங்கள் இப்போதைய நிலையில், கூட்டமைப்பின் அழைப்பை மகிந்த அரசு ஏற்றுக்கொள்ளும். இது மகிந்த அரசிற்கு கிடைத்த மிகப்பெரிய அரசியல் வெற்றி , ஏனெனில் கூட்டமைப்புடன் ஒரு இணக்கப்பாட்டுடனான அரசியல் நிலைக்கு அரசு வந்துள்ளது என்பதை வெளியுலகத்திற்கு சிறிலங்கா அரசு காட்டிக்கொள்ளவேண்டிய தேவை உள்ளது. இதன் மூலம் சர்வதேச நெருக்கடிகளில் இருந்து சிறிலங்கா மிகவும் சுலபமாக வெளிவந்துகொள்ளலாம்.
கூட்டமைப்புடன் அரசு கூட்டணி வைத்துக்கொள்வதாயின் சில நிபந்தனை அடிப்படையில்தான் சம்மதிப்பதாக அரசு கூறும், அந்த நிபந்தனைகளில் முக்கியமாக இருக்கப்போவது, அரசிற்கெதிரான பிரசாரங்களை கூட்டமைப்பு முன்வைக்ககூடாது அத்துடன் போர்க்குற்றம் பற்றி வாய்திறக்கக்கூடாது என்ற நிபந்தனை இவற்றை விட தமிழர்களிடமிருந்து வரும் தலையிடியான விடயங்கள் பலவற்றையும் நிபந்தனையாக முன்வைப்பார்கள். சம்பந்தனும், இது வெளியே தெரியவா போகிறது என்று, இவற்றிற்கு சம்மதிக்க வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்படுவார்.
இவர்கள் இதற்கு சம்மதிக்கா விட்டாலும் அரசுடனான கூட்டணிக்கு அரசு ஒரு இணக்கப்பாட்டிற்கு வரும். அரசுடன் ஒட்டிக்கொண்டு கூட்டணி வைப்பதால் கூட்டமைப்பை விட சிறிலங்காவிற்கே அதிக நன்மை உள்ளது.
தூர நோக்குடன் சிந்திக்கும் அரசாக இருந்தால் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று கூட்டமைப்புடன் சேர்ந்து கிழக்கில் அரசு ஆட்சியமைக்கும்”. இனி தமிழ் மக்களின் நிலைதான் என்ன?
கிழக்கின் தொடர்ச்சியாக வடக்கையும் சிங்கள தேசம் ஆயுத முனையில் தோற்கடித்து முள்ளிவாய்க்காலில் தமிழன் கட்டியிருந்த கோவணத்தையும் இழந்தது போன்று, இனியும் கிழக்கின் தொடர்ச்சியாக கூட்டமைப்புடன் இணைந்து வடக்கிலும் கூட்டணி அரசை நிறுவ சிங்கள ஆட்சிபீடம் முடிவெடுத்துக் கொள்ளும். வடக்கில் கூட்டமைப்பிற்குத்தான் அதிக ஆதரவு என்று எல்லோரும் நினைக்கலாம். ஆனால் உண்மை நிலைமை வேறுமாதிரி உள்ளது. அடுத்த முறை வடக்கின் தேர்தல் முடிவு அரசிற்கு கணிசமான ஆதரவு நிலையே இருக்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளது,
ஒன்று இன்று இலங்கைத்தீவில் தமிழ் தேசிய ஆதரவாளர்கள் வெகுவாக குறைந்து வருகிறார்கள். அதிகரித்த வெளிநாட்டு மோகத்தாலும் மற்றும் விடுதலைப்புலி ஆதரவாளர்களிற்கான அச்சுறுத்தல்கள் காரணமாகவும் வேகமாக இலங்கையில் இருந்து வெளிநாடுகளிற்கு செல்லவே எல்லோரும் விரும்புகிறார்கள், அதுவும் முடியாத மக்கள் படகுமூலம் அவுஸ்திரேலியாவிற்கேயாவது செல்கிறார்கள். இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்கு வேகமாக குறைந்துவருகிறது.
இப்போது அங்கு அச்சமின்றி வாழக்கூடியவர்கள் யார்? ஒன்று அரச ஆதரவு மக்கள். மற்றையவர்கள் அரச புலனாய்வு மற்றும் அரச ஆதரவு கட்டமைப்புக்குள் உள்ள மக்கள். இவர்களை விட விடுதலையான போராளிகள் கூட கூட்டமைப்பிற்கு வாக்களிக்க முடியாத சூழல் ஏற்படும். இதனால் விரும்பியோ விரும்பாமலோ முன்னாள் போராளிகள் அரசின் பிரதிநிதிகளிற்கே வாக்களிப்பர்.
இன்னும் பலர் எதற்கு வீண் வம்பு என்றும் கூட்டமைப்பு இறுதியில் அரசுடன் ஒட்டிக்கொண்டால் தமது நிலைமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்று அஞ்சியும் அரசிற்கே வாக்களிக்க முன்வருவார்கள், இல்லையெனில் யாருக்கும் வாக்களிக்கமாட்டார்கள்.
இதைவிட வாக்கு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் மிக பெரிய மோசடி நடக்கும், இதை கிழக்கின் தேர்தலில் அரசு வெற்றிகரமாக நடாத்தியுள்ளது,
எனவே வடக்கிலும் இதேபோன்று மோசடி செய்து அரச பிரதிநிதிகளை வெற்றிபெறச் செய்யலாம். பெரும்பான்மை பலம் பெறாவிட்டாலும் இன்றய கிழக்கு மாகாண தேர்தல் முடிவு போன்று வடக்கிலும் யாருக்கும் பெரும்பான்மையில்லாத ஒரு நிலையே நிலவும். அதன் பின்னர் கூட்டமைப்பும் இன்றைய கிழக்கின் நிலையைத்தான் எடுக்கும். இதன் பின்னணியில் தான் அண்மையில் இலங்கை ஜனாதிபதி வடக்கின் தேர்தலும் விரைவில் இடம்பெறும் என்று கூறினார்.
இனி தமிழரின் அரசியல் தீர்வைபற்றி யாரும் வாய்திறக்க முடியாத ஒரு அரசியல் வெற்றிடத்தில் தமிழர்கள் நிற்கப் போகிறார்கள் அதற்கான ஒரு பாதையைத்தான் கூட்டமைப்பு திறந்து வைத்துள்ளது.
ஒரு அரசுடன் இணைந்து ஆட்சியமைத்த பின்னர் யாரும் வாய்திறந்து பேசமுடியாது. அப்படி பேசினாலும் அதை சர்வதேசம் கருத்தில் எடுக்காது.
இனி மொத்தத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசில் பலமும் சரிகிறது, தமிழ்மக்களின் முதுகெலும்பும் முறிகிறது.
த. நம்பி.
t.nampi@gmail.com

கிழக்கு மாகாண மக்கள் வழங்கிய ஆணையும், ஏமாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் சுயநல தலைமைகளும்!


Source:http://www.tamilwin.com/show-RUmqyJSdOblx5.html
Picture courtesy:http://www.tamilguardian.com/tg157/http://www.slnewsonline.net and newsradio.me


கடந்த மாகாணசபை தேர்தல் களத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கொடுத்த வாக்குறுதிகளும் அவரது கட்சியின் ஏனைய வேட்பாளர்களும் அரசாங்கத்தை விமர்சித்து தனித்து போட்டியிட்டதனால்தான் இவ்வளவு ஆசனங்களையேனும் பெறமுடிந்தது.

மாறாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து அதாவது வெற்றிலை சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கடந்த தேர்தலில் களம் இறங்கி இருந்தால் அவர்களால் ஒரு ஆசனத்தை கூட பெற்றிருக்க முடியாது போயிருக்கும்.
மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் குறிப்பாக கிழக்கில் வாழ்கின்ற தமிழ்,முஸ்லிம் மக்களின் உரிமைகளையும், அவர்களுடைய தனித்துவத்தையும், பாதுகாப்பையும், தன்மானத்தையும், சுய கௌரவத்தையும், தன்னகத்தே கொண்டு உருவாக்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற கட்சியை தனது சுயநலத்துக்காகவும், சுய லாபத்திற்காகவும் செயல்படுகின்ற தற்கால ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுடைய எதிர்கால சிந்தனைகளையெல்லாம் தூக்கி வீசி எறிந்து விட்டு தானும் கட்சியில் உள்ள சில பதவி ஆசை பிடித்தவர்களும் இதனுடைய விளைவை வெகு விரைவில் கிழக்கில் அனுபவிப்பார்கள் என்பதை மட்டும் பல இணையதள செய்திகள் மூலமாகவும், எனது ஆய்வின் மூலமாகவும் புரிந்து கொள்ள முடிகின்றது.
மு.கா.வின் தேர்தல் பிரசார மேடைகளில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் பேசிய பேச்சுக்கள் அரசுடனான இணைவை ஒரு முறை யோசிக்க வைக்கிறது.
(இணையதளங்களில் கிடைத்தவை )
அவரின் உரைகளின் பகுதிகள்: -
வாழைச்சேனை பிரசார கூட்டம்
ஆட்சி அதிகாரங்களை வைத்துக்கொண்டு அரசாங்கம் ௭ங்களை, நாங்கள் இணைந்த காலத்திலிருந்தே மாற்றான் தாய் மனப்பான்மையோடுதான் நடத்தி வருகின்றது.
நாடு, நகர அபிவிருத்திச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது மாகாண சபை உறுப்பினர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடல் இடம்பெற்றது. அப்போது ௭மது உறுப்பினர்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டனர்.
ஆளுநர்களாகவும், அரச அதிபர்களாகவும் சிவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கத்தக்கதாக வடக்கு கிழக்கில் மட்டும் இராணுவ படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு அபரிமிதமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது ஏன்?
காத்தான்குடி தேர்தல் பிரசார கூட்டம்,
முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெற்றுக்கொள்வதற்காகவே நாம் தனித்து போட்டியிடும் தீர்மானத்தை ௭டுத்தோம். கிழக்கில் ௭ங்களுக்கு அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொத்துவில் – அருகம்பே வீதியில்,
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் பதவியில் நான் இருந்தும் ௭மது கட்சியை மாற்றான் தாய் மகனாகவே அரசாங்கம் கவனித்து வந்தது. மந்திரி பதவி ஒரு பொருட்டல்ல. அப்பதவி ௭னக்கு கடிவாளமுமல்ல.
முஸ்லிம் காங்கிரஸின் வெற்றியை தடை செய்து கிழக்கில் சிறுபான்மையினராக வாழும் சிங்கள சமூகத்தை வெளியுலகிற்கு சக்தியுள்ளதாக காட்டுவதே அரசாங்கத்தின் நோக்கம்.
அரசை விமர்சிக்கிறோம். ௭ல்லையுடன் பேசுகிறோம். அரசு அதனை ஜீரணிக்க வேண்டும். அடாவடித்தனம் அச்சுறுத்தலால் மு.கா.வை அடக்கலாம் ௭ன்பது பகற்கனவு.
சம்மாந்துறை பிரதான வீதி பிரசாரக் கூட்டம்
முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தினால் அரசு தடுமாறிப் போயுள்ளது. அதன் வெளிப்பாடே ௭மது கட்சியின் வெற்றியை தடுப்பதற்காக பல்வேறு கோணங்களில் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மு.கா. தனித்துப் போட்டியிடுவது அரசை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
ஏறாவூர் காட்டுப்பள்ளி குல்லியத்துதாரில் உலூம் அரபுக் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டம்
மாகாண சபை தேர்தல் அடாவடித்தனங்களும் அட்டகாசங்களும் நிறைந்ததாக இடம்பெறுமானால் அரசின் மீது தற்போது திரும்பியுள்ள சர்வதேசத்தின் பார்வை மேலும் ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும்.
பாலமுனை தேர்தல் பிரசார கூட்டம்
ஒரு பயங்கரவாதத்தை நிறைவு செய்துள்ள அரசு அடிக்கடி தேர்தல் நடத்துகின்ற ஒரு வித்தியாசமான ஜனநாயக பயங்கரவாதத்தை ௭ம் மத்தியில் அரங்கேற்றி வருகிறது.
நிந்தவூர் பிரசாரக் கூட்டத்தில்
13ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு அமைய மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அதிகாரத்தை அரசு மிகவும் மோசமாக கபளீரகம் செய்துள்ளது. நாடாளுமன்றத்தை கலைப்பது போன்று மாகாண சபையை ஜனாதிபதிக்கு கலைக்க முடியாது.
13ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை அரசு நினைத்தபடி ௭தனையும் செய்வதற்கு அனுமதிக்கக்கூடாதென்ற கோட்பாட்டினை அரசு மீறியுள்ளது.
13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக உத்தரவாதம் வழங்கும் இவ்வரசு, கொடுத்த அதிகாரத்தினை மிகவும் மோசமாக பறிக்கும் முகமாக செயற்பட்டுள்ளது.
மு.கா. யாரிடமும் அடைமானம் வைக்கப்படுவதற்கோ சரணாகதி அரசியலை செய்வதற்காகவோ உருவாக்கப்படவில்லை.
மருதமுனை கடற்கரை வெளியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்
முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை பௌத்த சமூகத்தின் விரோதியாகக் காட்டுவதற்கு திட்டமிட்ட செயற்பாடுகள் இவ் அரசாங்கத்தின் அனுக்கிரகத்தோடு நடக்கும் போது அதனையிட்டு நாம் கவலையடைகிறோம்.

அக்கரைப்பற்று பிரசார மேடையில்

முஸ்லிம்களின் உணர்வுகளை மட்டுமே மூலதனமாகக் கொண்டு போட்டியிடும் நாம் இனிமேலும் ௭டுப்பார் கைப்பிள்ளையாக இருக்க முடியாது. மக்களின் உயிர் நாடியை நாங்கள் தொட்டு விட்டோம் ௭ன்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது.

கிண்ணியா விஷன் கேட்போர் கூடப் பிரசாரக் கூட்டத்தில்
மு.கா.தனித்துப் போட்டியிடுவது அரசாங்கத்தினருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றது. ஏன் தனித்து போட்டியிட விட்டோம் ௭ன கைசேதப்படுகிறார்கள்.
பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்,
அரசு ஒரு பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்து தற்போது தேர்தல் ௭னும் பயங்கரவாதத்தை அரங்கேற்றிக் கொண்டு வருகின்றது. இத்தேர்தல் நாட்டு மக்கள் விரும்பும் தேர்தலல்ல. இவ்வாறு முன்கூட்டி நடத்துவதனூடாக நாட்டு மக்கள் தன்னோடு இருப்பதாக அரசு சர்வதேசத்துக்கு காட்ட முனைகிறது. அந்த வியூகம் தோல்வியடையப் போகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் ௭ன்ற இயக்கத்தை இந்த அரசாங்கம் கணக்கில் ௭டுக்காமல் கடந்த ஒன்றரை வருட காலத்தில் நான் பட்ட அவஸ்தைகளுக்கு இத்தேர்தலின் மூலம் முடிவு கட்டலாம். ௭னவே சமூகத்தின் இருப்பையும் பலத்தையும் சர்வதேசத்துக்கு காட்டுவோம்.

இவ்வாறு தேர்தல் பிரதேசங்களில் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தற்ப்பொழுது அந்த அரசாங்கத்தோடு இணைவது எந்த வகையில் நியாயம் என்று கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் அங்கலாய்கின்ற ஒரு அவல நிலையை அவதானிக்க முடிகின்றது.
எதிர்வரும் காலங்களில் இந்த கிழக்கு மாகாண இளையசமுதாயத்தையும்,போராளிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு வியூகம் அமைத்து வழிநடாத்தபோகிறது என்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் தனக்கு தானே கேள்விகளை அமைத்து அதற்க்கு விடைகளை தேடுகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
MOHAMED.RAMZIN

Wednesday, September 12, 2012

USA: Guantánamo death highlights urgent need to end indefinite detention

Source:http://www.amnesty.org/en/news/usa-guant-namo-death-highlights-urgent-need-end-indefinite-detention-2012-09-12

At a Glance

  • January 2002 – First detainees transferred to US Naval Base at Guantánamo Bay in Cuba
  • June 2006 – Three detainees, two Saudi Arabian nationals, Mane’i bin Shaman al-‘Otaybi and Yasser Talal al-Zahrani,and one Yemeni, Salah Ahmed al-Salami, die at Guantánamo, reportedly by suicide
  • May 2007 – Saudi Arabian detainee Abdul Rahman Ma’ath Thafir al-Amri dies, reportedly by suicide
  • December 2007 – Afghan detainee Abdul Razzak Hekmati dies, reportedly of cancer
  • June 2009 – Yemeni detainee Mohammed Ahmed Abdullah Saleh al-Hanashi dies, reportedly by suicide
  • February 2011 – Afghan detainee Awal Gul dies, reportedly of natural causes
  • May 2011 – Afghan detainee Inayatollah dies, reportedly by suicide
  • September 2012 – Yemeni detainee Adnan Farhan Abdul Latif dies

The death of a Yemeni man in his 11th year of detention without charge or trial at the Guantánamo Bay naval base highlights the urgent need for the US authorities to resolve outstanding detainee cases and close the detention centre once and for all, Amnesty International said. 

On Monday US military authorities announced that a detainee had died at Guantánamo on the afternoon of 8 September, but withheld the man’s identity and nationality pending notification of his family. It has since been confirmed that the detainee was Adnan Farhan Abdul Latif, a Yemeni national who had been held in the base since January 2002. He was the ninth Guantánamo inmate known to have died in custody in the decade since the US military began detention operations there.

Amnesty International calls on the US authorities to urgently resolve the cases of the 167 men still held at Guantánamo, in ways fully consistent with international human rights principles.

“Once and for all, the US military must bring the human rights vacuum at Guantánamo to an end – the detainees must be brought to fair trial in independent courts or released and trials by military commission should be abandoned,” said Rob Freer, Amnesty International’s USA Researcher.

“The US authorities must allow a fully independent, civilian-led investigation into Adnan Latif’s death, and provide his family with full information about the findings and any other steps taken. The evidence from the autopsy and the investigation should be preserved.”

A Naval Criminal Investigation Service (NCIS) investigation has been initiated to determine the cause and circumstances of the death. According to the US military authorities, six of the previous eight deaths among the Guantánamo detainees had been the result of suicide while two died of natural causes.


Yemeni national Adnan Latif was the ninth detainee to die in US custody at the Guantánamo Bay naval base.
© US DoD



Latif had been held without charge or trial for nearly 11 years, after Pakistani police arrested him near the border with Afghanistan in December 2001. 

Later that month he was handed over to US authorities, who transferred him to Guantánamo on 17 January 2002. He was held in the naval base from then on. 

During the decade plus that Latif spent in US custody there were ongoing concerns about his mental and physical health and, according to his lawyer, he spent most of the time in solitary confinement.

He had previously made a number of suicide attempts, and including by slitting one of his wrists during a meeting with a lawyer in 2009. 

He had told lawyers that his circumstances “made death more desirable than living”, and complained of chronic back pain, and other ailments – the US military never complied with his request for a hearing aid to help with deafness in his left ear following a 1994 car accident. 

In July 2010, a US federal judge ruled that Adnan Latif’s detention was unlawful, even under the broad authority claimed by the government, and that he should be released. The Obama administration appealed and in October 2011, the Court of Appeals overturned the ruling. In a meeting with his lawyer 11 days later, Adnan Latif said “I am a prisoner of death”. 

In May 2012, he went on hunger strike to protest his ongoing detention. US military authorities said he ended the hunger strike on 1 June 2012. 

Amnesty International reiterates that the families of those who have died at Guantánamo should have access to remedy, including compensation, for any human rights violations to which their relatives were subjected during their years in US custody, including arbitrary detention and torture or other cruel, inhuman or degrading treatment or punishment.



சயாம் மரண ரயில் – மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு!


Source: http://rste.org
எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் இந்த தமிழர்களை ? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை?ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது ? இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்கு கூட மனம் வரவில்லை ? முன்னுரை மற்றும் ஆசிரியரின் உரையைப் படிக்கும் போதே தோன்றிய கேள்விகள் தான் இவை.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பான், அப்போதைய நிலைமையை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தது. அப்போது தான் நேதாஜி காங்கிரஸை விட்டு விலகி இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளின் உதவியை நாடினார். அவரது இந்திய தேசிய இராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது, அப்போது ஜப்பானுடன் உறவு வைத்துக் கொண்டார் நேதாஜி. இந்தக் காரணத்தை முன்னிட்டு இந்தியாவைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியது ஜப்பான்.இந்தியாவை கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை. அவற்றை ஜப்பானிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலமாக கொண்டு வருவது சிரமம் என்பதால் தரைவழி பாதையை தேர்ந்தெடுத்து, சயாம் (தாய்லாந்து) முதல் பர்மா வரை ஒரு ரயில் பாதை ஒன்றை இட முடிவு செய்தது. அதன் ஐந்தாவது படை அணி மேற்பார்வையிட, 16 மாதங்களுக்குள் அந்த இரயில் பாதையை நிர்மாணித்து முடிக்க வேண்டுமென கட்டளையிட்டது.

அதற்கு ஏராளமான ஆள்பலம் தேவைப்பட்டது. தொழில் நுட்ப வேலைகளுக்கு, தங்களிடம் போர்க்கைதிகளாய் இருந்த ஆங்கிலேய மற்றும் ஆஸ்திரேலிய படைவீரர்களை பயன்படுத்திக் கொண்டனர். சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற வேலைகளுக்கு அடிமட்டத் தொழிலாளிகள் நிறைய பேர் தேவைப்பட்டனர். இதற்காக பெருமளவில் ஆசியதொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர். சயாமியர், மலாய் இனத்தவர்கள் தவிர, ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழர்களும் அவர்களிடம் சிக்கினர் என மதிப்பிடப்படுகிறது. ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த, தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த, தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக்கொண்டிருந்த, ஏன் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களைக்கூட விடவில்லை ஜப்பானின் கங்காணியர்கள். ஏமாற்றி, வலியுறுத்தி என எப்படி பணியவைக்க வேண்டுமோ அப்படி.
போரினால் கடும் பஞ்சம் வேறு. உணவுக்காக தவித்த, உயிருக்கு பயந்த, குடும்பத்தைக் காப்பாற்ற, தன் பிள்ளைகளை அழைத்துச்செல்லாமல் தடுக்க என ஒவ்வொருவருக்கும் அடிபணிந்து போக ஒவ்வொரு காரணம். ஒரு இலட்சம் தமிழர்களில் போர் முடிந்தவுடன் திரும்பியவர்கள் பத்தாயிரத்தை கூட தாண்ட மாட்டார்கள் என குத்துமதிப்பான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் பணியாற்றிய ஆஸ்திரேலிய படைவீரர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை நூல்களாகக் கொண்டு வந்துள்ளனர். ஆங்கிலேயர்களோ “The Bridge on the River Kwai” என்ற திரைப்படத்தின் மூலம் தங்கள் அனுபவத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு சொல்லி விட்டனர். அவர்களின் வலிகள் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டன. நம் பாடு தான் திண்டாட்டம். வெகு சில நூல்களே அதைப் பதிவு செய்திருந்தன. எப்போதோ நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்ய எண்ணி 1993’ஆம் ஆண்டு சண்முகம் எழுதியது தான் ”சயாம் மரண ரயில் – சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்”. இதை தமிழோசை பதிப்பகம் 2007 ஆம் ஆண்டு மறுவெளியீடு செய்திருக்கிறது. இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு தான் இதைப் பதிவு செய்ய வேண்டுமென ஒர் உந்துதல் ஏற்பட்டது. உண்மையைச் சொன்னால் இதற்கு முன், இதில் குறிபிடப்பட்டுள்ள ஒரு விவரமும் நான் கேள்விப்பட்டதுகூட கிடையாது.
ஜப்பானிடம் சிக்கிய இந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை, யூதர்களுக்கு நாஜி இழைத்த கொடுமைகளுக்கு இணையானது என இந்நூலின் பதிப்புரையில் சொல்லப்பட்டிருக்கிறது, படிக்க படிக்க அது எவ்வளவு உண்மை என உணரமுடிகிறது. அந்த களத்தில் பஞ்சத்தினால் தன் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமலும், தன் தந்தையை கண்டுபிடித்துவிடலாம் எனற நோக்கத்திலும் தானே சென்று இணையும் மாயா என்ற ஒரு இளைஞன் சுற்றியே கதையை சுழல விட்டு, தான் சொல்ல வந்த உண்மைகளை கதையெங்கும் தெளித்திருக்கிறார் ஆசிரியர், அதனூடே ஒரு மெல்லிய காதல் கதையையும் சேர்த்து ஒரு சுவாரஸ்யம் சேர்க்க முனைந்திருக்கிறார் ( நமக்கு தான் எல்லாவற்றிலும் தேவைப்படுமே!!)..

மரவள்ளிகிழங்கும், கருவாடும், சூப்பும் ஆகியவையே பெரும்பாலும் அவர்களின் உணவு. உடம்பு முடியாவிட்டாலோ, விஷப்பூச்சிகளோ பாம்போ கடித்துவிட்டாலோ, அவர்களுக்காக யாரும் நிற்பதில்லை. ஆங்காங்கே விழுந்து அப்படியே இறக்க வேண்டியது தான், முகாம்களில் சீக்கானால், மருத்துவமனை அழைத்து செல்கிறோம் என்ற பெயரில், ஒதுக்குபுறமான ஒரு கொட்டகையில் போய் விட்டுவிடுவார்கள். கும்பல் கும்பலாய் வயிற்றுபோக்கும் காய்ச்சலுமாய் இறப்பை நோக்கி செல்ல வேண்டியது தான். அழுகி நாறி இருந்தாலும், தங்களுக்கு வசதிப்பட்ட என்றாவது ஒரு நாளில் மொத்தமாய் குப்பை அள்ளுவது போல தள்ளுவண்டியில் ஏற்றி வந்து ஒரே பெரிய குழியாய் வெட்டி மொத்தமாய் போட்டு புதைத்துவிடுவார்களாம். எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால் அந்த கொட்டகையோடு கொளுத்திவிடவும் செய்வார்கள் போல. குற்றுயிரும்குலையுயிருமாய் கிடப்பவர்களுக்கும் மொத்தமாய் மோட்சம். மறுபடியும் ஒர் கொட்டகை முளைக்கும். இதில் எல்லாம் தவறி பிழைத்தவர்கள் அவ்வப்போது போர்விமானங்கள் போட்ட குண்டுகளில் மடிந்தார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களுக்கு மரணம் காத்திருந்தது.
ஆங்காங்கே ஒவ்வொரு பாத்திரத்தின் உணர்வுகள், குடும்பத்தை பற்றிய கவலைகள், தாங்களும் உயிரோடு அங்கிருந்து பிழைப்போமா என கேள்விகள்,, மாயாவின் காதல் கதை, அவனுடன், உடன் பிறந்தவனைபோல உறவாடும் வேலுவின் நட்பு, முடிவை ஒட்டி அவன் மரணம் என உணர்வுப்பூர்வமாய் பயணிக்கிறது கதை. இரண்டு பெரிய குன்றுகளை வெட்டி சாய்த்து, இரும்புப் பாதை அமைக்க உதவிய நம் மக்கள், ஆற்றுப் பாலத்திற்கும் மலைக்கும் நடுவில், தூண்கள் கட்ட முடியாமல், ராட்சத சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட தொங்கும் பாலத்திலும் தண்டவாளத்தில் உயிரைப் பிடித்துக் கொண்டு பயணிப்பதைப் படிக்கும் போது, லேசாய் பயம் பற்றிக் கொள்கிறது. அங்கேயும் சந்தடி சாக்கில்
சின்ன சின்ன பலசரக்குகளை வாங்கி முகாம்களின் உள்ளேயே வியாபாரம் பண்ணிய நமது மக்களின் திறமையை நினைத்து பெருமைப்படுவதா வேதனைப்படுவதா எனப் புரியவில்லை.
இத்தனை வேதனைகளிலிருந்தும் மீண்டு வீடு திரும்பியவர்களில் சிலர், தங்கள் குடும்பம் சிதைந்ததைக் கண்டு, மறுபடியும் சயாமுக்கே சென்றிருக்கின்றனர் என்பதும் மிகுந்த வேதனைக்குரியது. சான்றுகளுக்கும் மேல்விவரங்களுக்கும் கூகிள் செய்ததில், சமீபமாக இன்னொரு புத்தகமும், அதன் வரலாறை அப்படியே சொல்ல வந்திருப்பது தெரிய வந்தது. அதற்கான தகவல்களும் சுட்டிகளும் முடிவில்.
இந்த பதிவின் மூலமாக உலகத்தமிழர்கள் அத்தனை பேரின் சார்பாகவும், இந்த களத்தில் உயிர்துறந்த அப்பாவித் தமிழர்களுக்கும் பிற நாட்டவர்க்கும் அஞ்சலி செலுத்த விரும்புகிறேன். மேலும் புலம் பெயர்ந்து தங்கள் முகம் தொலைத்து முகவரி இழந்து தவிக்கும் அத்தனை தமிழருக்கும் இப்பதிவினை அர்ப்பணிக்கிறேன்.
சயாம் மரண ரயில் – சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்….
இப்புத்தகத்தின் விவரம் :

ஆசிரியர் : சண்முகம்
தமிழோசை பதிப்பகம்,
21/8, கிருஷ்ணா நகர், மணியகாரம்பாளையம் சாலை, கணபதி, கோயமுத்தூர்-641 012.
தொலை பேசி – 9486586388, விலை ரூ 150.

Tuesday, September 11, 2012

பத்திரிகையாளன் பாரதி


செங்கோட்டை ஸ்ரீராம்
Source:www.dinamani.com

18,19 ஆம் நூற்றாண்டுகள், உலகின் பெரும்பாலான பகுதிகளில் புரட்சிக்கனல் வெடித்து சுதந்திர தாகம் மக்களிடையே நிலைகொண்ட நூற்றாண்டுகள். அடக்குமுறையை எதிர்த்து எளியோர் போராட உத்வேகத்தை அளித்தவை, அந்நாடுகளின் புரட்சிக் கவிஞர்கள் மக்களிடையே பரப்பிய எழுச்சியூட்டும் பாடல்களே!



1792 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் போரில் வீரர்கள் சோர்வுற்றனர். ரூழே தெலில் என்ற ர் சாதாரண வீரன் திடீரென்று ஒரு பாட்டைப் பாடினான். அது காட்டுத் தீ போல் பரவி மக்களை ஆவேசப் படுத்தியது. பிரெஞ்சுப் புரட்சிக்குக் காரணமானது அப்பாட்டு. பின்னாளில் ஹிட்லர் பிரான்சைப் பிடித்ததும், அப்பாட்டுக்குத் தடை விதித்தார். ஆனால் இப்பாட்டைப் பாடியே சக்தி பெற்று மறுபடியும் குடியரசானது பிரான்சு. கால் என்ற தலைமை வீரன் வெற்றி முழக்கத்தோடு பாரீஸில் நுழைந்தபோது, ஆயிரக்கணக்கான குரல்கள் இஆதே பாட்டைப் பாடி ஆனந்தக் கண்ணீருடன் தங்கள் தலைவனை வரவேற்றன.
ஆம் புரட்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக அமைவதும், இதயத்தைத் தட்டியெழுப்பும் இதுபோன்ற பாடல்கள்தான்! இதேபோல் அமைந்தவைதான் நம் பாரதியின் பாடல்களும்!
பிரெஞ்சுத் தொடர்பு இருந்ததாலோ என்னவோ, 1908 ஆல் புதுவையில் வாழ்வைத் தொடங்கிய பாரதியிடமிருந்தும் இத்தகைய புரட்சிக்கனல் தெறிக்கும் கவிப் பிழப்புகள் பாடல்களாய் வெளிவந்தன.
திருநெல்வேலி மாவட்டத்தின் எட்டயபுரத்தில் பிறந்த கவி பாரதிக்கு, நெல்லை மண் வாசத்தோடு மொழியைக் கையாளும் திறமை மிக்கிருந்தது. அதனால்தான் அந்த நாளில் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தமாக இருந்த பள்ளுப் பாடல்களையும் பாரதியார் பயன்படுத்திக் கொண்டார். சுதந்திரப் பள்ளு, பள்ளர் களியாட்டத்தை வர்ணிப்பது போல், அரசியலிலும் சமுதாயத்திலும் ஒருங்கே தோன்ற வேண்டிய ஆனந்த சுதந்திரத்தை ஒருதீர்க்க தரிசனமாக அறிவிக்கின்றன அப்பாடல்கள்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக்குமுறைப் பேய், பாரதியையும் பயமுறுத்தி சிறையில் தள்ளத் துடித்த அக்காலத்தில், அவருடைய சுதேச கீதங்களை மக்கள் மட்டுமா பாடினர்... அவரின் சுதேசக் கவிதைகளில் மனம் பறிகொடுத்த நீதிபதிகளும் போலீஸ் உளவாளிகளும் கூட உண்டு. அரசாங்க நிர்வாக அதிகாரி ஒருவர், பாரதிக்குத் தொல்லை ஏற்படும் என்று கருதி அவரை தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்குப் போய்விடுமாறு வற்புறுத்திய சம்பவமும் உண்டு!
பாரதியின் மொழிப்பற்று, பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் பெயர்க்கப்பட வேண்டும் என்று பிற மொழிக்கவிதைகளைத் தமிழாக்கிக் கண்டது... அதுபோல், அவருடைய நாட்டுப்பற்று என்பது, பிற நாடுகளையும் அவற்றின் அனுபவங்களையும் தமதாக்கிக் காண்பதாகவே இருந்தது.
தமிழணங்கே பாரதத்தாயாக விளங்குவதாகக் கண்ட கவிஞர், அவள் கடைக்கண் நோக்கே ருஷிய மாக்களை மக்களாக வாழ வகை செய்தது என்கிறார். அறத்தால் வீழ்ந்துவிட்ட பெல்ஜியத்தை வாழ்த்துகிறார். மாஜினியைப் போற்றுகிறார். அவருடைய நாட்டுப்பற்றே சுதந்திர ஆட்சியை விரும்பும் பாஞ்சாலி சபதமாக உருப்பெற்றது. உலகளாவிய நோக்கு அவருக்கு இருந்தது.
அதற்குக் காரணம் - அவர்தம் ஆரத்தத்தில் ஊறியிருந்த நாட்டின் கொள்கையான வசுதைவ குடும்பம் மற்றும் சர்வம் விஷ்ணுமயம் ஜகத் என்ற கொள்கைகளே! உலகம் - வாசுதேவனின் குடும்பம்; அனைத்துலகும் இறைவனின் அம்சம் என்ற கொள்கைகளைப் பாடிப் பரவினார். அதன் பரிணாமமே, தனியொருவனுக்கு உணவில்லை எனில் இச் சகத்தினை அழித்திடுவோம் என்ற, உலகையே ஒரு பெரும் குடும்பமாகக் கருதும் மனப்பாங்கை வெளிப்படுத்தியது.
எல்லா உயிர்களிலும் கண்ணனே இருக்கிறான் என்ற உண்மையை வாழ்க்கையில் கடைபிடிப்பதனாலேயே பாரத நாடு எல்லையில்லாப் பெருமையை அடையும். இவ்வுண்மையை உலகோர்க்கு உணர்த்துவதே இந்நாட்டின் நோக்கமாகும். இதற்கு அர்த்தம், நாட்டின் நிலப்பரப்பைப் பெருக்கும் விருப்பம் இல்லை; ஆனால் ஆன்ம பலத்தைப் பெருக்கிக் கொள்ளும் விருப்பம் உண்டு - இக்கருத்தையே பாரத சமுதாயத்தை வாழ்த்தும் பாடல் வெளிப்படுத்துகிறது.
நாட்டில் புரட்சிச் சூரியன் உதித்துக் கிளம்பினால், எல்லோர் கவனமும் அதன்பால் சென்று, நாடு விரைவில் விடுதலை அடையும் என்பது பாரதியின் எண்ணம். அதனை வெளிப்படுத்தும் பாரதியின் வசனங்கள் இவை:-
''சூரியன் உதித்தவுடனே சேதனப் பிரகிருதி மட்டுமேயன்றி அசேதனப் பிரகிருதியும் புதிய ஜீவனையும் உற்சாகத்தையும் பெற்றுத் திகழ்கின்றது. இவற்றினை யொப்பவே நாட்டில், ஒரு புதிய ஆதர்சம் - ர் கிளர்ச்சி - ர் தர்மம் - ர் மார்க்கம் - தோன்றுமேயானால், மேன்மக்களின் நெஞ்சமனைத்தும், ஆரவியை நோக்கித் திரும்பும் சூரியகாந்த மலர் போல், அவ்வாதர்சத்தை நோக்கித் திரும்புகின்றன
- இப்படி ஒரு புதிய மார்க்கம் தோன்ற பாரதி ஆசை கொள்கிறார்.
இந்தப் புதிய மார்க்கம் தோன்றினால் மட்டும் போதாது, அதற்குத் தம் உயிரையும் தந்து உழைக்க ஒரு கூட்டம் தயாராக வேண்டும் என்பதும் அவர் எண்ணம். அதனால்தான், பராசக்தியிடம் அவருடைய வேண்டுகோள் இப்படியிருக்கிறது....
''சிவசக்தி.... எனைச்
சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்...
வல்லமை தாராயோ, இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
- என்று பிரார்த்தனை செய்யும் போது, நாட்டுக்காகவே தாம் வலிமை பெற வேண்டும் என்கின்ற மனப்பாங்கை வெளிப்படுத்துகிறார்.
பாரதி பயன்படுத்திய மொழி எளிய மொழி! பாமரரையும் சுண்டியிழுத்த மொழி! பகவான் ராமகிருஷ்ணர் எப்படி உபநிஷத உபதேசங்களை எளிய கதை வடிவில் பாமரர்க்கு சேர்ப்பித்தாரோ அப்படியே பாரதி பாடல் வடிவில் சேர்ப்பித்தார்.
ஊருக்கு உழைத்திடல் யோகம்,
உயிர் ங்கிடுமாறு வருந்துதல் யாகம்...
- என்கின்ற பாரதி வாக்கு, எளிய உபநிடத உபதேசமல்லவா?!
இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு தேசத்தையே தெய்வமாக வழிபடவேண்டும் என்று விவேகானந்தர் சொன்னது பாரதியின் மனத்தில் ஆழப் பதிந்து விட்டது என்று சொல்லலாம்! அதனால்தான், ''நாடெங்கிலும் இறைவழிபாட்டுப் புண்ணியத் தலங்களான விஷ்ணுத் தலங்கள், சிவத்தலங்கள், சக்தி பீடங்கள், ஜைன பவுத்தத் தலங்கள், நீராடல் தலங்கள் என, நிறைய இருக்கின்றன. ஆனால் சுதந்திரக் கிளர்ச்சி தலைதூக்கிய பின் இந்தப் புண்ணியத் தலங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்றார் பாரதியார்.
தேச பக்தர்கள் பலர் சிறை சென்று சிறைச் சாலையை தவச் சாலையாக மாற்றி, சுதந்திர யாகம் நடத்தும் வேள்விச்சாலைகளாய் மாற்றியிருந்தார்கள். ''அவர்கள் தங்கிய இடங்களும்கூட புண்ணியத் தலங்கள்தான் என்றார் பாரதியார்.
''பாரத நாட்டில் ஸ்வதந்திரக் கிளர்ச்சி ஆரம்பித்துக் கொஞ்சம் நாள்தான் ஆயிற்று எனினும், அநேக புண்ணிய ஸ்தலங்கள் உண்டாய்விட்டன. இந்தப் புண்ணிய ஸ்தலங்களின் விசேஷம் என்னவென்றால் இவைகள் பாரத நாட்டிலுள்ள எல்லா மதத்தினருக்கும் பொதுவானவைகள். பாரத நாட்டில் மாத்திரமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்த தேசபக்தர்களின் ஆசிரமங்கள் தோன்றியிருக்கின்றன. ஆமதாபாத்திலிருக்கும் ஸாபர்மதி சிறைச்சாலையை நோக்கும்போது எந்த பாரதனுக்குத்தான் ''இது பாரத பரமபக்தரான மஹரிஷி ஸ்ரீமான் பாலகங்காதர திலகரின் பொன்னடிகளால் புனிதமாக்கப்பட்ட திவ்ய க்ஷேத்திரம் என்று தோன்றாது? மகாராஷ்டிர பாஷையில் பேர் பெற்ற ''கால் பத்திராதிபரான ஸ்ரீமான் சிவராம மகாதேவ பராஞ்ஜபே 101 நாள் வாசம் செய்த ஸித்தாச்ரமமும் இந்த ஸாபர்மதி சிறையே என்று ஞாபகப்படுத்திக் கொள்ளாதவர்கள் யார்? அல்லது அலிப்பூர் சிறைச்சாலையைப் பார்க்கும்போதே பாரத தேசபக்த சிரோமணியான ஸ்ரீமான் அரவிந்த கோஷுக்கு பகவான் தனது திவ்விய ஸ்வரூபத்தைக் காட்டிக்காத்து ஆட்கொண்ட மகாபரிசுத்தமான புண்ணிய ஸ்தலமென்று எவன்தான் எண்ணாமலிருப்பான்.? கோயம்புத்தூர் சிறைச்சாலையைப் பார்க்கப் போகிறவர்களில் யார்தான் நமது தக்ஷிண தேசாபிமானச் சிங்கமான ஸ்ரீயுத சிதம்பரம்பிள்ளையைப் பற்றிச் சிந்தியாமலிருக்க முடியுமா? ...
''தென்னாப்பிரிக்காவில் திரான்ஸ்வால் நாட்டிலுள்ள ஜொஹானஸ்பர்க் நகரத்திற்குப் போகிறவர்களில் எந்த மனுஷ்யனுக்குத்தான் ஆத்ம சக்தி ஸம்பூரணமாய் நிறைந்த பாரத புத்திரர்களான ஸ்ரீமான் மோ.க.காந்தி, ஜனாப் டாவுத் மஹமத் ஜனாப் அங்கிலயா, ஸ்ரீ ரஸ்தோம்ஜீ முதலானவர்களின் நெற்றி வியர்வை நிலத்தில் விழுந்து புனிதமாக்கப்பட்ட வீதி இதுதான். அவர் தமது வாஸத்தால் பரிசுத்தம் செய்யப்பட்ட திவ்ய ஸ்தலமான சிறைச்சாலை இதுவே. நமது பாரத ஸஹோதரிகள் பலவிதத்திலும் இடுக்கண் படுத்தப்பட்ட இடம் இதுவே என்று மனசில் ஸ்மரணை வராதா?
இப்படி, தேசபக்தர்கள் வாழ்ந்த நினைவலைகள் உள்ளத்துள் இருந்து கொண்டிருந்தால், அவர்களின் தியாக உணர்வு நமக்குள்ளும் ஊற்றெடுத்து சுதந்திரத்திற்கான வேகம் அதிகரிக்கும் என்பது பாரதியின் எண்ணமாக இருந்தது.
இவ்வாறு தேசபக்தியையே தெய்வபக்தியாகக் கொள்ளவேண்டும் என்ற பாரதியின் கருத்து வேகத்தைத் தடை செய்தது, நாட்டில் இருந்த சாதி, இஆன, மொழி ரீதியான பிரிவுகள். எனவே மக்களிடையே இருந்த பிரிவினை எண்ணத்தை அழித்து ஒற்றுமை எண்ணத்தை வளர்க்க வேண்டிய பொறுப்பை உணர்ந்தார். பாரத நாடு ஒரே நாடு என்பதைத் தம் பாடல்களால் வலியுறுத்தி வந்தார்.
ஓர் தாயின் வயிற்றிற் பிறந்தோர் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ? என்றும், ''முப்பது கோடியும் வாழ்வோம் என்றும் முழங்கினார்.
''நீ பாரதவாஸி என்று கர்வம் கொண்டிரு. கர்வத்தோடு 'நான் பாரதவாஸி, ஒவ்வொரு பாரதவாஸியும் என் ஸஹோதரர்ஒ என்று சொல்லு. 'மூட பாரதவாஸி, தரித்திர பாரதவாஸி, சண்டாள பாரதவாஸி, யாவரும் என் சகோதரர்கள்....஑ நீ கந்தையை உடுத்துக் கொண்டிருந்தாலும் உன் குரல் எட்டுமளவும், 'ஹிந்துஸ்தானவாஸிகள் என் பிராணன்; இந்தியாவில் இருக்கும் தெய்வங்கள் என்னுடைய தெய்வங்கள்ஒ என்று சொல். சகோதரா, சொல்: 'இந்தியாதான் என் இளமையின் மெத்தை, என் யௌவனத்தின் நந்தவனம், என் கிழக்காலத்தின் காசிஒ என்று இரவும் பகலும் தியானம் செய் என்று கூறினார்.
இப்படி, பிரிவினை தகர்த்து ஆந்தியர்களின் ஒருமைப்பாடை வலியுறுத்தி ரணியில் சேர்த்து ஆங்கிலேய அடக்குமுறையை அகற்ற எண்ணினார் பாரதி.
சுதந்திரப் போரில் சந்நியாசிகளும் ஈடுபடவேண்டும் என்பதிலும் அப்படி ஈடுபடுவதில் ஒரு தவறும் இல்லை என்றும் பாரதி வாதம் செய்தார். அதற்காக அவர் பல கட்டுரைகளை எழுதினார். குறிப்பாக சந்நியாச தீட்சை பெற்ற சுப்பிரமணிய சிவாவுக்கு பாரதி தந்த ஆதரவு மகத்தானது. சுப்பிரமணிய சிவா பேரில் சில குற்றச்சாட்டுகளைக் கூறி போலீஸார் அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தியபோது பாரதி இப்படி எழுதினார்...
"திருநெல்வேலியில் ராஜநிந்தனைக் கேஸில் விசாரணை செய்யப்பட்டு வரும் ஸ்ரீசுப்பிரமணிய சிவனுக்கு இப்போது வயது 26 க்கு மேல் ஆகவில்லை. இவர் சுமார் 6 வருஷங்களுக்கு முன் அதிபாலியத்திலேயே சிவகாசி சப் டிவிஷன் ஆபீஸிலே முச்சி என்ற தணிந்த உத்தியோகம் பார்த்து வந்தாராம். ஆனால் சரீர சௌக்கியம் போதாதென்று இவரை அந்த வேலையினின்றும் விலக்கி விட்டார்களாம். இந்த விஷயத்தை திருநெல்வேலிப் போலீஸ் உத்தியோகஸ்தர்கள் பலர் சாக்ஷி கூறும் சமயத்தில் மிக இகழ்ச்சியோடு சொல்லுகிறார்கள்....
"இன்னுமொரு போலீஸ்காரர் ஸ்ரீ சிவன் தூத்துக்குடியிலே ஸ்ரீசிதம்பரம் பிள்ளையோடு ஒரே வீட்டில் வாசம் கொண்டிருந்தார் என்றும், இது வர்ணாசிரம தர்மத்துக்கு விரோதமென்றும், ஆதன் பொருட்டு ஸ்ரீ சிவன் ஜாதியினின்றும் பகிஷ்காரம் செய்யப்படுவதற்குத் தகுதியுடையவராவார் என்றும் சொல்லியிருக்கிறார்கள். ர் போலீஸ்காரருக்கு மனுதர்ம சாஸ்திரத்தில் இவ்வளவு தூரம் ஆழமான ஞானமிருப்பது பற்றி சந்தோஷமடைகிறோம். அதிவர்ணாசிரமியாக ஸந்யாச நிலை பெற்றவர்களுக்கு வர்ணாசிரம பேதம் கிடையாதென்று இந்தப் போலீஸ்காரருக்குத் தெரியாது போலும்! போலீஸ் மனு நீதியில் மேற்படி விஷயம் சொல்லப்படவில்லையென்று தோன்றுகிறது.....
"மேற்படி சம்பந்தத்தையொட்டி, நமது சுதந்திர முயற்சியிலே கணக்கற்ற சந்நியாசிகள் சேர்ந்திருப்பதைக் குறித்து ரிரண்டு வார்த்தைகள் சொல்ல விரும்புகிறோம். பிரமஞானியாகிய ஸ்ரீகிருஷ்ண பகவான் மஹாபாரதப் போரிலே சேர்ந்தது போலவும், ஸர்வ பந்தங்களையும் துறந்த ராமதாஸ்முனிவர் மஹாராஜா சிவாஜிக்கு ராஜதந்திரங்கள் சொல்லி வெற்றி கொடுத்தது போலவும், தற்காலத்தில் அநேக துறவிகள் நமது சுதேசீய முயற்சியிலே சேர்ந்திருக்கிறார்கள். காலஞ்சென்ற விவேகானந்த பரமஹம்ஸ மூர்த்தியே இந்த சுயாதீனக் கிளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும்....
"ஞானி தமது சொந்த நலத்தைக் கருதி உழைக்கக் கூடாதே யொழிய, உலக கர்மங்களை முற்றிலும் விட்டுவிட வேண்டும் என்பது சாஸ்திரக் கருத்தன்று. தன் மட்டில் யாதொரு பலனையும் கருதாமலும், ஈசனுக்கும் ஈசுவர வடிவமாகிய மனித சமூகத்திற்கும் தனது செய்கைகளின் பலன்களை ஸமர்ப்பணம் செய்துவிட்டு தான் எப்போதும் உழைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதே பெரியோர்களின் சித்தாந்தம். அப்படியில்லாவிட்டால் பிரமஞானிகளாகிய முனிவர்கள் ஏன் சாஸ்திரங்கள் எழுதிவைக்க வேண்டும்? மூச்சைப் பிடித்துக் கொண்டு சும்மா இராமல் உலக நன்மையின் பொருட்டு ஞான வழிகள் கற்பித்த ரிஷிகளை நாம் லௌகீகர்கள் என்று கூறத்தகுமா? அது போலவேதான் இக்காலத்திலும் உண்மையான ஸன்னியாசிகளாக இருப்போரும் தம்மை மறந்து தேச க்ஷேமத்தையும் சுயாதீன நிலைமையையும் அடையும் பொருட்டாக முயற்சிகள் செய்துவருகிறார்கள்..."
- இப்படி சுப்பிரமணிய சிவா என்ற தீவிர சிந்தனை கொண்டவருக்காகப் பரிந்து பேசிய பாரதி, தம் இன்னொரு நண்பரான வாஞ்சியின் செயலை விமர்சித்து கட்டுரை தீட்டியிருந்தார். விடுதலை வேட்கையில் தீவிரத்தன்மை இருக்க வேண்டும். வீதியில் இறங்கிப் போராட வேண்டும்; ஆனால் தனி மனிதக் கொலை மூலம் அதைச் செய்யக்கூடாது என்பது பாரதியின் வாதம். கொடூரமதி கொண்டவராக அப்போதைய திருநெல்வேலி கலெக்டர் ஆஷ், சுதேசிச் சிந்தனையாளர்களால் கருதப்பட்டபோது, ஆஷை எதிர்க்கும் அதே நேரத்தில், ஆஷ் கொல்லப்பட்ட முறையை விமர்சித்து பாரதி வரைந்த கட்டுரை, அவருடைய குணத்தை எடுத்துக் காட்டியது....
..................
" இந்தியாவில் ஒரு புரட்சிக்காரனால் முதன்முதலில் எறியப்பட்ட வெடிகுண்டு வெறும் பிசகினால் மிஸஸ் கென்னடி என்ற வெள்ளை மாதின் பேரில் வீசப்பட்டபோது ஆங்கிலோ இந்திய வர்க்கமே கோப வெறி கொண்டதாகிவிட்டது. ஐயோ. பாவம்! என்ன காரியம் செய்தனர்! நவ இந்தியாவில் உதயமாகியுள்ள ரஜபுத்திர வீரத்திற்கு என்ன இழுக்கு? என்ன தவறு, என்ன தவறு! ஒரு பெண் மீது வெடிகுண்டு வீசி இந்தியாவுக்கு விடுதலை பெறுவதாம்! இவ்வளவுக்கும், பெண் என்றால், எந்த ஜாதியாரானாலும் வர்ணத்தாரானாலும் தேசத்தாரானாலும் சரி, உலக மாதாவான ஆதி சக்தியின், தெய்வீகப் பெண்மையின் நேரடியான அம்சமே அவள் என்பதல்லவா இந்தியர் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்துபோன தத்துவம்! உந்நதமான வாழ்க்கையிலே ஊறித்திளைத்த இந்திய நாடும் உடனே, "கவனியுங்கள்! ஆரம்பமே அபசகுனமாயிருக்கிறது! எனது நாட்டில் இவ்வியக்கம் வேரூன்றாது!" என்று எச்சரித்தது.
"இந்த சௌகரியமான நிலைமையில்தான் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் (இதை "எதிர்பாராத விபத்து" என்றுதான் சொல்லட்டுமா? ஏனென்றால் இம்மாதிரியான மற்றொரு சம்பவம் நமது ராஜதானியில் நடந்ததேயில்லை) இந்தியாவின் தென்கோடி ஜில்லாவில் மணியாச்சி ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரையை வாஞ்சி அய்யர் என்ற இளைஞர் சுட்டுக் கொன்றுவிட்டார். இது மகத்தானதோர் சோக சம்பவம். இதனால் ஏற்பட்ட அரசியல் பலாபலன்கள் ஒருபுறமிருக்க, நம்முடைய சமூகத்தில் காணக் கிடக்கும் பரிதவிக்கத்தக்க குணங்களை இச்சம்பவம் காட்டிவிட்டது.
கலெக்டர் ஆஷுடன் அவரது மனைவியைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. அவர் அடுத்த ஜில்லாவிலுள்ள புகழ் பெற்ற ஆரோக்கிய ஸ்தலமான கோடைக்கானலுக்கு உல்லாசமாகக் காலம் கழிக்கவோ தேக சுகம் பெறவோ போய்க்கொண்டிருக்கிறார்.
"ஹிந்து மதத்துக்கு மீண்டும் ர் இழுக்கு! - கொலையுண்ட மனிதர் தமது மனைவியுடன் இருக்கிறார்; அவர்கள் யுவர்கள்; தெரிந்தவரையில் ஒருவரையொருவர் பரஸ்பரம் காதலிக்கும் தம்பதிகள்; ஜோடியாக இருவரும் குதூகலத்துடன் உல்லாச யாத்திரை போகிறார்கள். இதுபோன்றதோர் நிலைமை, பக்தி சிரத்தையுள்ள எந்த ஹிந்துவின் உள்ளத்திலும் புனிதமான எண்ணங்களையே தூண்டிவிடும். நலத்தை நல்கும் முழுமுதற் கடவுளாகிய சிவபிரான் அர்த்தநாரீசுவரர் என்று (தான் பாதியும் மங்கை பாதியுமாக இருப்பதாய்) ஹிந்து புராணங்கள் வர்ணிக்கின்றன. சிவனே கடவுள்; மங்கை சிவகாமி ஜீவிதமான சக்தி. புராணங்கள் இவளையே பராசக்தி, ஆதிசக்தி என்று கூறுகின்றன. ஒரு புருஷனும் பெண்ணும் தனியாக இருக்கும் நிலை ஒவ்வொரு ஹிந்துவும் தெய்வாம்சமெனக் கொண்டாடும் நிலைமையாகும். ஏனெனில், இதுவே அமரர் வாழ்வை இவ்வுலகில் கண்ணெதிரே காட்டுகிறது. ஹிந்து மதம் சொல்வது முற்றும் சரியே. ர் ஆணும் பெண்ணும் மனப்பூர்வமாக ஒருவரையொருவர் நேசித்தால், அவர்கள் இருவரும் தனியாக இருக்கும்போது, அவ்விருவரும் போற்றிப் பின்பற்றத்தக்க தூய சிந்தையுள்ளவர்களாக இருப்பதைக் காண்போம். அவர்கள் இருக்கும் இடம் முழுவதும் அன்பு மயமாக இருப்பதைக் காண்போம்.
"இனி கதையில் பரிதாபகரமான பாகத்தை விடுத்து, சோகமான பாகத்தைக் கவனிப்போம். தன்னைக் கைது செய்ய வந்தவர்களையெல்லாம் வெற்றிகரமாக பயமுறுத்திவிட்டு, கலெக்டரைக் கொன்ற சில நிமிஷங்களில் வாஞ்சி அய்யர் தம்மைத்தாமே சுட்டு மாய்த்துக் கொண்டார். இதற்குப் பின் இம்மாதிரி இன்னொரு சம்பவம் நடைபெறவில்லை என்ற விஷயம் சென்னை ராஜதானிக்கே பெருமை அளிக்கிறது. சென்னை ராஜதானியில் பயங்கர இயக்கம் பிறக்கும் போதே உயிரற்ற பிண்டமாய்ப் பிறந்தது.
"ஆனால் வாஞ்சி அய்யரின் தற்கொலை இந்த ராஜதானியில் பொது வாழ்வில் துரதிர்ஷ்டமான வழியில் பலன் தர ஆரம்பித்தது. இந்த சம்பவத்திற்கு வஞ்சம் தீர்க்கும் முறையில் அதிகாரிகள் கீழை நாடுகளின் சம்பிரதாயத்தை ஒட்டினாற்போல ஒரு பெரிய யாகமே நடத்திவிடத் தீர்மானித்தார்கள்; போலீஸார் - இந்திய போலீஸார் - இந்த யாகத்தை மேலும் பிரமாதமானதாக்கி விட்டார்கள். இதற்கு செலவான பணம், வலை வீசப்பட்ட பிரதேசம் முதலிய இன்னும் இவைபோன்ற விவரங்களைக் கவனிக்கையில், ஹிந்து யாகங்களின் சரித்திரத்திலேயே இது ஒரு பிரதம யாகமாகிவிட்டது எனலாம்!
................... பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்ற எண்ணமும் பாரதியின் உள்ளத்தில் தோன்றியிருக்கிறது என்பது அவருடைய இந்தக் கட்டுரையில் காணக் கிடைக்கிறது.
---------
வாஞ்சியின் செயலில் சுப்பிரமணிய சிவா மற்றும் வ.உ.சி போன்றோர் மகிழ்ந்திருக்க, தம் சுதேசிய இயக்க நண்பர்களான இவர்களே வியக்கும் வண்ணம் தம் மனத்தில் பட்ட கருத்தை தைரியமாக எழுதும் வன்மை பாரதிக்கு வாய்த்திருந்தது. அத்தகைய சிறந்த பத்திரிகையாளராக பாரதி எடுத்த அவதாரம், வேறு யாரும் எடுத்திராதது. அவருடைய அந்த சாதனைகள்தான் என்னென்ன.?
* ஒரு கவிஞனாகப் பெரும்பாலானவர்களால் இனம்காணப்பட்ட சுப்பிரமணிய பாரதிக்கு, புரட்சிகள் பல செய்த பத்திரிகையாளன் என்ற மற்றொரு முகமும் உண்டு. பாரதி தனது பத்திரிகைப் பணியை 1904 நவம்பரில் சுதேசமித்திரனில் துணையாசிரியராகத் துவக்கினார். அதன்பிறகே தமிழ்ப்பத்திரிகையுலகுக்கு ஒரு உத்வேகம் கிடைத்தது.
* தமிழ்ப் பத்திரிகை உலகில் முதன் முதலில் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர் பாரதி. "இந்தியா' (1905) பத்திரிகைக்கே அந்தப் பெருமை சேரும்.
* பத்திரிகை சந்தாவில் புதுமையை அறிமுகப்படுத்தினார். வாசகர்களின் வருமானத்துக்கு ஏற்றவாறு சந்தா விகிதம் நிர்ணயித்த பாரதியை இன்றும்கூட யாரும் எட்ட முடியாது.
* பத்திரிகையுடன் இலவச இணைப்பாக சிறுபுத்தகம் வழங்குவதை அறிமுகப்படுத்தினார்.
* ஒரே நேரத்தில் பல பத்திரிகைகளில் பணிபுரிந்தவர். சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா, பாலபாரதா அல்லது யங் இந்தியா, விஜயா, சூர்யோதயம், கர்மயோகி, தர்மம் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றினார்.
* பத்திரிகைகளில் நேரடியாகப் பணிபுரிந்தது மட்டுமன்றி சுதந்திர இதழாளராகவும் பல பத்திரிகைளுக்கு தம் படைப்புகளை அனுப்பியிருக்கிறார். விவேகபானு, சர்வஜன மித்திரன், ஞானபானு, காமன்வீல், நியூ இண்டியா ஆகிய பத்திரிகைகளிலும் பாரதியின் எழுத்துகள் அணி செய்துள்ளன. புனை பெயர்களை (காளிதாஸன், ஷெல்ன்தாஸ், சாவித்திரி, நித்யதீரர், உத்தம தேசாபிமானி) அதிகம் பயன்படுத்தியவரும் பாரதியே.
* செய்திப் பத்திரிகையில் வாசகரின் ஆர்வத்தைக் கூட்ட கதை, கவிதைகளை வெளியிட்டார். வாசகர்களை விவாதத்திலும் பங்கேற்கச் செய்தார்.
* முதன் முதலில் தமிழ்ப் பத்திரிகையில் தமிழ் ஆண்டு, மாதம் குறித்தவர் ("இந்தியா', "விஜயா') பாரதியே. "விஜயா' இதழில் தமிழ் எண்களையும் பயன்படுத்தி புரட்சி செய்தார்.
* "பழைய பத்திரிகைகளில் வெளிவந்த விஷயங்களை எடுத்துக் கோர்த்தால் நல்ல வசனநூல் கட்டலாம்'' என்று பத்திரிகை உலகுக்கு வழிகாட்டியவர் பாரதி. "எங்கள் காங்கிரஸ் யாத்திரை' போன்ற சிறு நூல்களை தனது பத்திரிகை அலுவலகத்திலிருந்து வெளியிட்டார்.
* செய்தி அனுப்புவோருக்கு பணம் தரும் முறையை நூறு ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தினார்.
* சித்திரங்களை மட்டுமே கொண்ட ""சித்ராவளி'' என்ற பத்திரிகையை நடத்தத் திட்டமிட்டார். ஆனால் அது இயலாமல் போனது.
* லண்டன் "டைம்ஸ்' முதல் கொல்கத்தாவின் "அமிர்தபஜார் பத்ரிகா' வரை 50 -க்கும் மேற்பட்ட பிறமொழிப் பத்திரிகைகள் பற்றியும், பிறமொழிப் பத்திரிகை ஆசிரியர்கள் பற்றியும் தனது பத்திரிகையில் செய்தி வெளியிட்டார்.
* மகாத்மா காந்தி இந்தியாவில் அறியப்படுவதற்கு முன்னரே 1909 ல் ""காந்திபசு'' என்ற கருத்துப் படத்தை "இந்தியா'வில் வெளியிட்டார்.
* தமிழுக்கு பொதுவுடைமை என்ற புதிய சொல்லை வழங்கியதோடு, வன்முறை மூலம் உருவாக்கப்படும் ரஷ்யாவின் சோஷலிஸ சமுதாயம் நிலைக்காது என்று 1920 லேயே தீர்க்க தரிசனமாக எழுதினார்.
* நாட்டின் முந்நாள்பெருமையும் இந்நாள் சிறுமையும் எதிர்கால வறுமையும் கருதாத கல்வியால் பலனில்லை என்று கூறி சுதேசிக் கல்வியை வலியுறுத்தினார்.
* மகளிரின் விடுதலைக்காக பத்திரிகையில் குரல்கொடுத்து பாலின சமத்துவத்துக்கு தமிழ்நாட்டில் வித்திட்டார்.
* தமிழின் பழம்பெருமையை பேசியபடியே ஆங்கில மோகத்தில் வீழ்வதால் அன்னைத் தமிழ் அவலத்தில் தாழும் நிலையை எடுத்துக்கூறி அன்றே எச்சரித்தவர் பாரதி. அதேசமயம் கிணற்றுத் தவளையாக இல்லாமல் ஆங்கிலம், இந்தி, சம்ஸ்க்ருத மொழிகளையும் அறிந்து அதனை தனது இதழியல் பணிக்கு பயன்படுத்தியவர் பாரதி.
""உள்ளத்தில் உண்மையொளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்'' என்ற தனது அமுதமொழிக்கு தானே உதாரணமாக பாரதி வாழ்ந்ததை இந்த தீர்க்கதரிசனங்கள் காட்டுகின்றன.
ஒரு பத்திரிகையாளராக மட்டும் வெளித்தெரியவில்லை பாரதி. அவர் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார். அவருடைய பேச்சில் அனல் பறக்கும். அதில் நேர்மையும் இருக்கும். பல சுதேச எழுச்சிக் கூட்டங்களைத் தனியாளக நின்று ஏற்பாடு செய்தவர் பாரதி.
விபின் சந்திரபாலரின் விடுதலையைக் கொண்டாட 1908 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பாரதியார் உணர்ச்சி மிக்க ஒரு உரையை ஆற்றினார்.
"சுதந்திர தாகம் என்று தணியும்? அறியாமையின் தளைகள் என்று அகற்றப்படும்? மகாபாரதப் போரை உருவாக்கிய கடவுளே; பிளேக்கும் பஞ்சமும்தான் உன் பக்தர்களுக்குக் கிடைத்த பரிசா?" என்று நெஞ்சு பொருமினார்.
நீதி வேறு, சட்டம் வேறு, என்பதை நினைவுபடுத்தி, "அன்னியர் இயற்றியுள்ள சட்டங்களுக்குக் கீழ்ப்படியச் சித்தமாயிருக்கிறோம். ஆனால் எல்லாச் சட்டங்களுக்கும் அல்ல! நமது பிறப்புரிமைக்கு முரணாக அன்னியர் சட்டம் இயற்றும்போது, அவற்றுக்குப் பணிய மாட்டோ ம்" என்று முழக்கம் செய்தார். பாரதி பேசிய பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு பரிசீலனை செய்து, இறுதியில் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்று முடிவு செய்தது.
ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் ஒருமுறை மாவீரன் செண்பகராமனுடன் பேசிக்கொண்டிருந்தபோது "இந்தியர்களுக்கு சுதந்திரம் அடைவதற்கான தகுதி இல்லை" என்றாராம். ஆனால் செண்பகராமன் இந்தியர்களுக்கான தகுதிகளை எடுத்துச் சொல்லி வாதம் புரிந்து, ஹிட்லரைப் பணியவைத்தார். அதனால் ஹிட்லர் தம் கைப்பட தன் வார்த்தையிலுள்ள தோல்வியை ஒத்துக் கொண்டாராம்.
அதே சிந்தனை பாரதியிடமும் இருந்தது. சுதந்திரம் பெற்றுவிட்டால் மட்டும் போதுமா? பெற்ற சுதந்திரத்தைக் கட்டிக் காத்து நாட்டு முன்னேற்றத்திற்கு வழி செய்யவேண்டாமா? அதனால்தானே ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்பட்டன.
இங்கும் அப்படித்தான்! இந்தியர்களால் சுதந்திர இந்தியாவை கொஞ்ச நாட்களுக்குக் கூடக்காப்பாற்ற முடியாது என்று இறுமாப்போடு சொன்ன ஆங்கில ஆதிக்கவாதிகளுக்கு பாரதி பதிலடி கொடுத்தார் தன் பாடல்களால்!
இந்திய சுதந்திரத்திற்கு முன்னே தம் நாடு எப்படி இருக்கவேண்டும் என்ற பாரதியின் இந்த ஐந்தாண்டுத் திட்டங்கள் உண்மையில் பிரமிப்பூட்டுபவை. கூரிய நோக்கு கொண்டவை. அவர் கவிதைகள் ஆசைக்கனவுகளின் ஆனந்தக் கூத்தாக நின்றுவிடவில்லை. தேசம் உயரத் தெளிவுடனும் துணிவுடனும் திட்டங்கள் தீட்டித் தருகின்றன. .
இரும்பைக் காய்ச்சி உருக்கவும் கரும்பைச் சாறு பிழிந்திடவும் இயந்திரங்கள் செய்யவேண்டும். விண்ணிலிருந்து நம்மை வானோர் காப்போராயினும், நம்மை நாமே காத்துக்கொள்ள ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம், ஆலைகள் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம், கடலில் முத்தெடுப்போம், கப்பல்கள் செய்வோம், அன்றாட வாழ்வுக்கு இன்றியமையாத சின்னஞ்சிறு பொருட்கள் நிறையச் செய்வோம்...
சந்திர மண்டலத்து இயல் கண்டு தெளியும் நேரத்திலேயே, சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம் என்கிறார் பாரதி. இவ்வாறு நாடு ஆற்றவேண்டிய ஐந்தாண்டுத் திட்டங்களின் சாரத்தை விடுதலைக்கு முன்னே கொடுத்த சிந்தனையாளர் பாரதி. அதன் மூலம் இந்தியர்களாகிய எங்களிடமே ஆட்சி பொறுப்பைக் கொடுத்தாலும் எங்களாலும் திட்டங்கள் தீட்டி நாட்டை முன்னேற்ற முடியும் என்று ஆங்கில ஆதிக்கவாதிகளின் மூக்குடைத்தார் பாரதி.
நாட்டு விடுதலைக்கு நாட்டின் மீதும் மக்களின் மீதும் அன்பும் பக்தியும் இருக்க வேண்டுமல்லவா? அதனால் நாட்டு மக்களிடையே, குறிப்பாக இளம் உள்ளங்களிடையே தேசபக்தியை வளர்க்க வேண்டிய பணியை ஏற்றுச் செய்தார் பாரதி. தேசபக்தியை ஊட்டுகின்ற கட்டுரைகள் நிறைய எழுதிக் குவித்தார்.
இந்தியா 1909 ஏப்ரல் 10 தலையங்கத்தில் பாரதி இப்படி எழுதினார்...
துருவன் பிரஹ்லாதன் முதலியோர் விஷ்ணுவிடத்தில் செலுத்திய பக்தியை நாம் ஸ்வதேசத்தினிடத்திலே செலுத்த வேண்டுமென்று நமது பத்திரிகையில் பலமுறை எழுதியிருக்கிறோம். பக்திப் பெருமை தெரியாத ஐரோப்பாவில் கூட ஐர்லாந்து தேசத்தார் நமது தேசத்தில் சுதேசீயத்தின் விருத்தியைப் பார்த்துவிட்டுத் தாமும் சுதேசீயத்தை ர் பெருந் தர்மம் (மதம்) ஆக்கி நடத்தவேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள்.
ஸ்வாமி விவேகானந்தர், "எனது பாரத புத்திரர்களே, இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு நீங்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் யாரெனில், பாரத தேசத்தின் முப்பது கோடி ஜனங்களே. இவர்கள் எல்லாம் மஹா சக்தியின் ஆவிர்ப் பாவங்கள். இவர்களை நீங்கள் ஆராதனை செய்ய வேண்டும்; இவர்களுக்கே தொண்டு செய்ய வேண்டும்; இதைக்காட்டிலும் சிறந்த மதம் வேறு கிடையாது" என்றருளிச் செய்திருக்கிறார்.
பாரத நாடு முழுமையும் இம்மதத்தை முற்றிலும் அங்கீகாரம் செய்து கொண்டிருக்கத் தமிழர்கள் மட்டிலும் கொஞ்சம் பின்னடைந்திருக்கிறார்கள். இங்ஙனம் பின்பட்டிருப்பது பிழை. தமிழர்களே இப்பிழையை நீங்கள் சீக்கிரம் நிவிருத்தி செய்து கொள்ளாத விஷயத்தில் ஸர்வ நாசமடைந்து போவீர்கள். அறிவுடன் வாழுங்கள்.
- இப்படி தமிழ் இனம் ஆன்மிகம் கலந்த தேசபக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்ற அறிவுரையை பாரதி அப்போதே சொல்ல வேண்டிய தேவை இருந்திருக்கிறது என்பதே இதிலிருந்து புலனாகிறது.
The Political Evolution in the Madras Presidency என்ற நூலில் எளிய ஆங்கிலத்தில் பாரதி தம் கருத்துக்களைப் பதிவுசெய்திருக்கிறார். இந்நூலில் சென்னையில் தேசீய இயக்கம் ஆரம்பித்த காலம் தொடங்கி தேசபக்தர்கள் அனுபவித்த கொடுமைகள் வர்ணனைகள் நெஞ்சத்தை உருக்கும் வகையில் அமைந்திருக்கும்.
எட்டையபுரத்தில் 1882 டிசம்பர் 11 இல் பிறந்த மகாகவி பாரதி, 1921 செப்டம்பர் 11 ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீக்கும் வரை புரட்சிப் பிழம்பாகவே வாழ்ந்தார். இன்றும் அவர் தம் பாடல்களால் சோர்வுற்றுக் கிடப்போர்க்கு உணர்ச்சியூட்டி வருகிறார். அதுவே அமரகவித்துவம் என்பது.
ஒரு கவிஞனாக, பத்திரிகையாளனாக, கட்டுரையாளராக, தேசபக்த வீரனாக, சமூகப் புரட்சியாளனாக பல அவதாரங்களை தம் 39 வயதுக்குள் எடுத்து வீர புருஷனாக வாழ்ந்தவர் மகாகவி பாரதி. வெள்ளையரின் அடக்குமுறைக்குப் பயப்படாமல் சுதேசக் கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்தியவர். வறுமை துரத்தியபோதும் கொள்கை விட்டகலாத நெஞ்சுறுதியை தம் வாழ்வில் வெளிப்படுத்தியவர்.
நம் நாடு சுதந்திரம் பெற்று சுயராஜ்யம் மலர்ந்த இந்த அறுபதாம் ஆண்டில், நாம் மகிழ்ந்து கொண்டாடும் சுதந்திரத்தைத் தம் மனக்கண்ணால் கண்டு, சுதந்திரம் பெறும் முன்பே ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே நாம் ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோ மென்று பாடிய பாரதியை ஆதர்ஷ புருஷனாக அடுத்த தலைமுறைக்கும் அறிமுகப் படுத்துவோம். அதுவே அமரகவிக்கு நாம் செய்யும் மரியாதை.
கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீராம்

ICTSI secures 25-year extension to operate Mindanao Container Terminal

Mindanao International Container Terminal Services Inc. (MICTSI), a subsidiary of International Container Terminal Services Inc. (ICTSI), ha...