மடியில் கனமில்லைன்னா...?
மடியில் கனமில்லைன்னா...?
தாய்லாந்திலிருந்து சுற்றுலா கப்பல் ஒன்று, சமீபத்தில் சென்னைத் துறைமுகம் வந்தது. இதுபோல் கப்பல்கள் வரும்போது, அதுபற்றி படத்துடன் செய்தி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள பத்திரிகையாளர்கள், துறைமுகத்திற்கு சென்றனர். துறைமுக பி.ஆர்.ஓ., அலுவலகத்தில், முறையான அனுமதி கோரினர்.
"உங்களை படம் எடுக்க விட்டால், எடுக்க வேண்டியதை எடுக்காமல், எதை எதையோ படம் எடுத்து, "நிலக்கரி மாசு, இரும்புத்தாது தூசு...' என்று படம் போட்டு, செய்தியை வெளியிட்டு, துறைமுகத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறீர்கள். அப்புறம் எப்படி உங்களை உள்ளே விட முடியும். இந்த முறை அனுமதியில்லை' என, "கறாராக' கூறினார், பி.ஆர்.ஓ., ஜான்போஸ்கோ.
சேர்மன் உள்ளிட்ட அதிகாரிகளும், தொடர்பு எல்லைக்குள் சிக்காததால், பத்திரிகையாளர்கள் வேறு வேலையைப் பார்ப்போம் என, புறப்பட்டனர். மூத்த போட்டோ கிராபர் ஒருவர், "மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமிருக்காது... இங்கே எல்லாமே கோல்மால்தான் போலிருக்கு... அதான் உள்ளே விடமாட்டேங்கிறாங்க...' என, "கமென்ட்' அடித்தபடி நடையைக் கட்டினார்.
Comments
Post a Comment