உயிருடன் தீயிட்டு சித்திரவதை: கொல்லப்பட்ட நடேசனின் உடலம்: புது ஆதாரம்

Source:http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1422


2009 மே மாதம் இறுதி யுத்தத்தின்போது புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர், ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் இராணுவத்திடம் சரணடைந்திருந்தனர். இவர்கள் சரணடையலாம் எனவும், சரணடைவதற்கு ஏதுவான சூழ் நிலையை தாம் தோற்றுவித்ததாகவும், ஏற்பாட்டாளராக இருந்த இந்திய, நோர்வே மற்றும் ஐ.நா அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் தெரிவித்ததை அடுத்தே அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள் சரணடைந்தார். ஆனால் அவரையும் புலித்தேவனையும், கட்டிவைத்து இராணுவத்தினர் மனிதர்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவு சித்திரவதைகளை மேற்கொண்ட பின்னரே கொலைசெய்துள்ளனர் என அறியப்படுகிறது.

முதலில் ப.நடேசன் அவர்களின் மனைவி கொலைசெய்யப்பட்டதாகவும், பின்னர் கடும் சித்திரவதைகளின் பின்னர் அவர்களின் அடிவயிற்றில் நெருப்பால் சுட்டுள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் அவர்களை இராணுவம் கட்டிவைத்து கொடுமைசெய்த காயங்கள் அவர் உடலில் காணப்படுகிறன. இறந்த பின்னர் உடலத்தை எடுத்துச் சென்று புதைக்க இருந்த இடத்தில் நின்ற இராணுவத்தினரால் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. 

மேற்படி எமக்கு கிடைக்கப்பெற்ற புகைப்படங்களை நாம் ஐ.நா வுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரிடமிருந்து தமிழக முதலமைச்சருக்கு அவசரக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், ராஜ்ய சபா உறுப்பினருமான கனிமொழி ஊடாகவே குறித்த கடிதப் பரிமாற்றங்கள் நடைபெற்றதாகவும் ஆதாரபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளது.

சமாதானச் சூழல் ஒன்றை உருவாக்குமாறும், போரை நிறுத்த இந்தியா வலியுறுத்தவேண்டும் எனவும், ப.நடேசனால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரக்கமற்ற கலைஞர் அரசும், மத்தியில் ஆட்சிபுரியும் காங்கிரசுமே, இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க மறுத்துள்ளது. அதனால் நடந்த பேரவலத்தில் பெருந்தொகையான புலிகள் மட்டுமல்ல, பொதுமக்களும் இறந்துள்ளனர். மானமுள்ள எந்தத் தமிழனும் இதனை ஒருபோதும் மன்னிக்கமாட்டான் !

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire