தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்



தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்! ஒற்றை இலக்க நாட்களே உள்ளது. இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம்.
 
பதினேட்டு மாதங்களுக்கு முன்
ஓய்வின்றி தெருவெல்லாம் தவமிருந்தோம்!
ஓலமிட்டோம்!
ஒப்பாரி வைத்தோம்!
எமக்கு நீதி கிடைக்காதா என ஏங்கினோம்
ஆனால் இன்று,
அதற்கான ஒரு சந்தர்பத்திற்கான அறிகுறி தென்படுகிறது
ஆனால்,
நாம் தான்
ஓய்ந்து விட்டோமா?
அல்லது
உறங்கித்தான் விட்டோமா?

 
அதற்கு தகுந்தார்போல் "சேனல் 4" உலகின் எந்த மூளையிலும் நடந்திராத இளம் போராளிகளின் கொடுமையானதொரு காணொளியை உலகின் பார்வைக்கு கொண்டுசென்றுள்ளது. அக்காணொளியையும் சேர்த்து இதுவரை உள்ள அனைத்து ஆதாரங்களையும் இறுதி கட்டமாக ஐ.நா.வின் நிபுணர் குழுவிற்கு அனுப்புவோம்.

 

 
Ms. Sooka Yasmin

 
Mr. Steven R. Ratner

 
Mr. Marzuki Darusman

 
ஒவ்வொரு தமிழர்களும் அக்குழுவினர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக போர்க்குற்ற புகைப்படங்களையும், காணொளிகளையும், ஆவணங்களையும் அனுப்பி வைப்போம்.

 
திசம்பர் 15-ம் திகதி வரை இச்செய்தியினை முதல் பக்கத்திலேயே இருக்கும்படி அனைத்து தமிழ் இணையங்களையும் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.

 
மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் இந்த மின்னஞ்சல்-களை தெரியபடுத்தவும்
 
கீழ்க்கண்ட இணைப்புகளில் போர்க்குற்ற ஆதாரங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக புகைப்படங்களும், காணொளிகளுக்கான இணைய இணைப்புகள் உள்ளது.

Grisly Photos Reveal Genocide by Sri Lankan Government Against Tamil People -www.Salem-News.com
Srilanka: If this isn't GENOCIDE, WAR CRIME, Then What on Earth is?

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire