கடந்த இரண்டாம் திகதி மஹிந்தவிற்கு வரலாற்றில் எதிர்பாராத மிகப்பெரிய அடி தமிழ் மக்களால் கொடுக்கப்பட்டது. அவரது இரண்டாவது பதவிக்காலம் மட்டுமல்ல முதலாவது ஆட்சியிலும் கூட இவ்வாறானதொரு அவமதிப்பு ஏற்பட்டிருக்காது.
29 ஆம் திகதி இலண்டன் வந்த மஹிந்தரை ஹீத்துறு விமான நிலையத்தில் வைத்தே பிரிட்டன் வாழ் தமிழர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர். ஆனால் சிறிலங்கா அரச ஊடகங்கள் பிரிட்டிஸ் தமிழர்க்கு ஜனாதிபதி எந்த வாசலால் வெளியேறுவார்கள் என்று கூட தெரியாமல் தவறான வெளிச்செல்லல் பகுதியில் போராட்டம் நடாத்தியதாக கேலிசெய்திருந்தனர். வழமையாக சிங்கள ஊடகங்கள் புலிச்சாயம் பூசி தமிழர்களின் ஹீத்துரு விமான நிலைய போராட்டத்தினை அவதூறு செய்ய ஆரம்பித்தனர்.
ஆனால் தமிழர்கள் மறைமுகமாக நன்கு திட்டமிட்டு தமது பிரச்சாரங்களை முடுக்கி விட்டனர். இனையத்தளங்கள், வானொலிகள், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைப்பின்னல்கள் ஊடாக செய்திகள் பரிமாறப்பட்டன.
குறுஞ்செய்திகள் ஊடாக விரைவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மஹிந்தவிற்கான கூட்டத்தினை ஏற்பாடு செய்த ஒக்ஸ்போட் சங்க அதிகாரிகளுக்கு நூற்றுக்கணக்கான தொலைபேசிகள், மின்னஞ்சல்கள், தொலை நகல்கள், அனுப்பபட்டன.
எல்லாவற்றுக்கும் மேலாக சனல்4 தொலைக்காட்சி காலமறிந்து ஒளிபரப்பிய மஹிந்த அரசின் இனவெறி கோரத்தாண்டவம் அப்பட்டமாக செய்த படுகொலைகள் ( எம் இதயக்கோவில்களை சீரளித்த) காட்சிகள் பிரிட்டனில் வாழும் தமிழர்களை மட்டும் அல்ல இலட்சக்கணக்கான பார்வையாளர்களைக்கொண்ட சனல்4 பார்வையாளர்களைச் சென்றடைந்தது. இதனால் பிரித்தானிய மக்களே உறைந்து போயினர்.
அரசியல் வாதிகள், இராஜதந்திரிகள், அதிகாரிகளை ஒரு கணம் உலுப்பியது இந்த காட்சி. குறிப்பாக பெண் அதிகாரிகள் பாதிக்கப்பட்டதாக பிரித்தானிய உள்ளக செய்திகல் தெரிவித்தன. இவற்றை பார்த்த எந்தவொரு மனிதாபிமானம் உள்ள இதயம் உள்ள மானிடம் ஒரு கணம் சிந்திக்காது இருக்க மாட்டாது.
இது இவ்வாறு இருக்க சர்வதேச மன்னிப்பு சபை , மனித உரிமை கண்காணிப்பகம் போன்ற மனித உரிமை அமைப்புக்களின் அழுத்தங்களும் அதிகமாகிக்கொண்டு போக ஒக்ஸ்போட் சங்கத்தினரால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் மஹிந்த நடத்தவிருந்த உரையினை இரத்து செய்தனர்.
இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது… இந்த செய்தியினால் இலங்கை அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திக்குமுக்காடியமை குறிப்பிடத்தக்கது. இந்த தாக்கம் மஹிந்தவிற்கு முதல் அடியாகும். இந்த தாக்கத்தில் இருந்தும் அதிர்ச்சியில் இருந்தும் மீழ் வதற்கு மஹிந்தவிற்கு நீண்டகாலம் எடுக்கும்.
மஹிந்தவின் இந்த தாக்கமானது மஹிந்த குடும்பத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கே காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் கூறியமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவின் அதிர்ச்சியினை ஏன்சிங்கள தேசத்தின் அதிர்ச்சியினை இப்போ அவர்களின் நடவடிக்கைகள் மூலமே இன்னும் அதிகமாக உனர முடிகின்றது.
1 பிரித்தானிய மக்களை திட்டித்தீர்த்தவாறு மஹிந்தவின் ஊதுகுழல் விமல் வீரவன்சவின் ஆர்ப்பாட்டம்
2 மஹிந்த கொழும்பை சென்றடைந்தபோது அவரை வரவேற்று ஆசுவாசப்படுத்திய முறை
3 பாராளுமன்றில் கடந்த மூன்று நாளாக எழுந்த கொதி நிலை, எதிரணியினர் மீதான தாக்குதல்
4 தனக்கு சாதகமாக தனது கூலிகளான தமிழர்களை ( பிரபா கணேசன், திகாம்பரம் உட்பட ) வைத்து பிரிட்டிஸ் தமிழர்களை கண்டித்தமை.
5 தமிழர் பிரதேசங்களில் குறிப்பாக கிளிநொச்சியில் தமிழ் மக்களை பலாத்காரமாக சிங்களப்படையினர் அழைத்து மஹிந்தவிற்கு ஆதரவாகவும் புலம்பெயர் தமிழர்க்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடாத்தியமை.
6 கண்டன அறிக்கைகள் உட்பட பல்வேறு அடுக்கடுக்கான நடவடிக்கைகளை மஹிந்த அரசு செய்துவருகின்றது. இதனை விட தமது ஆத்திரத்தைக்காட்டும் வெளிவராத சம்பவங்களும் இடம்பெற்றிருக்கலாம் அல்லது இடம்பெறலாம்.
7 அத்துடன் விடுதலைப்புலிகள் அங்கு நிற்கின்றார்கள் இங்கு நிற்கின்றார்கள், எட்டிப்பார்க்கின்ரார்கள் என கதைகள் வேறு அவிழ்த்து விடப்படுகின்றன. உதாரணமாக கொழும்பு பெற்றாவில் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையினை சேர்ந்த ஒருவரை தாம் பிடித்ததாகவும் அவரது வாக்குமூலம் புலிகள் அடையாளம் இல்லாத ஒரு தலைவரின் கீழ் இயங்குவதாகவும் புனை கதை ஒன்றை விட்டுள்ளது.
அடுத்ததாக கேரளாவில் புலிகள் ஒன்றிணைகின்றார்கள் என இன்னொரு கட்டுக்கதையினை இந்திய ஊடகங்கள் ஊடாக கசிய விட்டுள்ளது.
மேலும் ஸ்பானியா, பாகிஸ்தான் போன்ற தனக்கு ஆதரவான நாடுகள் ஊடாக அல்கைடா, லக்சர் ஈ தொய்பா போன்ர அமைப்புக்களுடன் புலிகளுக்கு தொடர்புள்ளதாக இன்னொரு கதையினை அந்த நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் ஊடாக கசிய விட்டுள்ளது.
உண்மையில் இந்த செய்திகளுக்கான புகைப்படங்கள் உட்பட பல உள்ளீடுகளை இலங்கையின் புலனாய்வுத்துறையினரே வழங்குகின்றனர். இவை கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்டவையாகும்.
இதில் இருந்து தெரிகின்றது என்னவெனில்
1 சிங்களம் தமிழர்க்கெதிரான போராட்டத்தினை இவ்வளவு தூரம் ஒடுக்கிய பின்னரும் எவாறு விழிப்பாக விரைவாக இயங்குகின்றது என்பது.
2 தமிழர்க்கு எதிரான இனப்படுகொலையினையும், போர்க்குற்றத்தினையும் நியாயப்படுத்த விடுதலைப்புலிகள் , பயங்கரவாதம் என்ற சொற்களை மீண்டும் மீண்டும் எவ்வாறு பயன்படுத்த முயல்கின்றது என்பது.
3 புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தினை நசுக்குவதற்கு தாயகத்தில் இருக்கும் தமிழர்களை பணையக்கைதிகளாக்கும் கீழ்த்தரமான வேலைத்திட்டங்களை செய்கின்றது என்பதும் புலனாகின்றது.
ஆனால் சர்வதேச மட்டத்திலும், புலம்பெயர் தமிழர்கள் மட்டத்திலும் ஏன் தாயகத்திலும் கூட சிங்களம் தான் செய்த படுகொலைகளுக்கும், போர்க்குற்றங்களுக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
எந்தவொரு காரணங்களையும் கொண்டு மஹிந்த ஆட்சியாளர் தப்பிக்க முடியாது.
ஈழநாதத்திற்காக ராஜேஸ்
No comments:
Post a Comment