இலங்கை: மேலும் சில அதிர்ச்சிப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
Source: www.athirvu.com இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கையடக்கத் தொலைபேசியில் எடுக்கப்பட்ட மேலும் அதிர்ச்சியூட்டும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தியிருக்கும் இலங்கை இராணுவம். அத்தோடு அங்கே எரிகுண்டுகள் பாவிக்கப்பட்டதற்கான அடையாளங்களாக சில உடலங்கள் கருகிய நிலையில் இருக்கின்றன. மொத்தமாக 6 பெண் போராளிகளும், 5 ஆண் போராளிகளின் உடல்களும் இங்கு காணப்படுகின்றன. ஆண்போராளி ஒருவரின் உடல் கருகி இருப்பதையும் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக பெண் போராளிகளின் சீருடைகள் வேண்டுமென்றே அகற்றப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்க து . எம்மைப் பொறுத்தவரை இப் புகைப்பங்கள் இன்னும் வெளிவரவில்லை என எண்ணுகிறோம். அத்தோடு இறந்த போராளிகளை உறவினர்கள் அடையாளம் காண ஏதுவாக இருக்கும் என்ற நோக்கத்துக்காக இந்தப் புகைப்படங்களைப் பிரசுரிக்கிறோம். இப் புகைப்படங்கள், மின்னஞ்சல் ஊடாக எமக்கு கிடைக்கப்பெற்றது. Visit link for more pictures: http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4048