Saturday, June 19, 2010

பார்வதி அம்மாள் கவலைக்கிடம்




பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த பார்வதி அம்மாள், சில வாரங்களாக இலங்கை வல்வெட்டித்துறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆரம்பத்தில் அங்கு அவரது உடல் நிலை சீராக இருந்தது. ஆனால் நாளடைவில் மோசமடையத் தொடங்கியது.
அவரை ஆய்வு செய்த மருத்துவர்கள், இரண்டு சீறுநீரகங்களும் வீங்கி இருப்பதாகத் தெரிவித்தனர். அவரால் சரிவர உணவு சாப்பிடவும் முடியவில்லை.
இதையடுத்து பார்வதி அம்மாளுக்கு மேல்சிகிச்சை அளிப்பதற்காக, யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் நேற்றும் இன்றும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை என்று மருத்துவமனைத்தரப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ICTSI secures 25-year extension to operate Mindanao Container Terminal

Mindanao International Container Terminal Services Inc. (MICTSI), a subsidiary of International Container Terminal Services Inc. (ICTSI), ha...