Wednesday, June 30, 2010

பார்வதி அம்மாள் மீண்டும் வல்வை மருத்துவமனையில்

Source: http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4046

மலேசியாவில் இருந்து ஊருக்குத் திரும்பியதில் இருந்து வல்வெட்டித்துறை அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பார்வதி அம்மாளின் உடல்நிலை இம்மாத நடுப்பகுதியில் மோசமடைந்தது. அவரால் உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் மேலதிக சிகிச்சைக்கும், சோதனைகளுக்காகவும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். மேலதிக சிகிச்சைகளால் அவரது உடல்நிலை தற்போது ஓரளவு சீரடைந்துள்ளது.

இதையடுத்து மீண்டும் வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது சொந்த இடம் வல்வெட்டித்துறை என்பதால் அவரை அங்கு வைத்துப் பராமரிப்பது இலகுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment