Source:http://www.alaikal.com/news/?p=47795
இந்த நாள் ஒரு மகிழ்ச்சிகரமான நாள் சர்வதேச மனித உரிமைகள் கழகம்
ஆனந்தச் செய்தி.. நோபல் பரிசாளர் ஒரு கிறிமினல் – சீனா சீற்றம்
சீனாவின் ஆட்சி முறைமை தவறானது, அங்கு நிலவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி உலக ஒழுங்கிற்கு தப்பான செயல் என்று விமர்சித்து வந்த லீ குவாங்கிற்கு வழங்கிய நோபல் பரிசு தவறானது என்று நோர்வேக்கான சீனத் தூதுவர் சீற்றமடைந்துள்ளார்.
இவர் சீன சட்டங்களுக்கு முரணாகச் செயல்பட்டு தற்போது சிறையில் தள்ளப்பட்டுள்ள நபர் என்றும், நாட்டின் ஒழுங்கு முறைக்குள் குழப்பத்தை ஏற்படுத்திய ஒரு கிறிமினல் என்றும் இவருக்கெல்லாம் ஏது நோபல் பரிசு என்றும் ஏளனமாகக் கேட்டுள்ளார்.
ஆக இந்தப்பரிசை வேண்ட அவருக்கு சீனா சிறைக்கதவுகளை திறக்காது, அவர் சீனக் கொட்டடிச் சிறைக்குள் சித்திரவதைப்படப்போவதுதான் அதிகரிக்கும்.
அதேநேரம் இது குறித்து கருத்துரைத்த சர்வதேச மன்னிப்புச் சபையின் டென்மார்க் தலைவர் லாஸ் நோர்மன் ஜொகான்சன் கூறும்போது இன்றய நாள் மனிதகுல வரலாற்றில் ஒரு மகிழ்ச்சிக்குரிய நாளாக அமைகிறது என்றுள்ளார். சீனா போன்ற உலக மக்கள் தொகை கூடிய ஒரு நாட்டில் பல கட்சிகள் கொண்ட ஜனநாயக ஆட்சி மலரவேண்டும் என்று போராடிய ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள நோபல் பரிசு மகத்தானது, இந்த நாள் மகிழ்ச்சிக்குரிய நாள் என்றும் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் சீன போலீசாரால் கைது செய்யப்பட்ட லீக்கு 11 வருடங்கள் கடும் சிறைவாசம் விதிக்கப்பட்டுள்ளது. நோர்வேயில் உள்ள நோபல் பரிசுக் கமிட்டி இந்தப்பரிசை அவருக்கு எவ்வாறு வழங்கப்போகிறது என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.
அதேவேளை சர்வாதிகார ஆட்சிகள், மனித உரிமை மீறல்கள் போன்ற அரசு முறைசார் அராஜகங்களை நடாத்தும் ஆட்சியாளரின் முகமூடிகளைக் கிழிப்பதற்கு இத்தகைய பரிசுகள் ஒரு தூண்டுகோலாக அமைவதையும் மறுக்க இயலாது.
பர்மாவில் உள்ள இராணுவ சர்வாதிகார ஜிந்தா ஆட்சிக்கு எதிராக அங்குள்ள தலைவர் ஆங் சூங் சுகி அம்மையாருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதும், அவர் இன்றுவரை தடுப்புக்காவலிலேயே இருப்பதும் உலகறிந்த விடயமாகும்.
அதேபோல இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை எழுதிய சல்மான் ருஷ்டிக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்க அவருக்கு ஈரானிய மதத்தலைவர் அயதுல்லா கொமெய்னி மரணதண்டனை அறிவித்ததும் பழைய கதைகளாகும்.
எவ்வாறாயினும் லீக்கு வழங்கப்பட்டுள்ள பரிசு வரும் நாட்களில் பலத்த சர்ச்சைகளை உருவாக்க வாய்ப்புள்ளது.
Saturday, October 9, 2010
மாவீரர் நாளுக்கு புலம் பெயர் தமிழர் மத்தியில் குழப்பத்தை உருவாக்க சிங்கள உளவுத்துறை சதி திட்டம்
தமிழர் தாயகத்தை எதிரியிடம் இருந்து காத்து அங்கு தனியாட்சி நடத்தி வந்த விடுதலை புலிகளின் கட்டமைப்பு தமது மண் மீட்பு மண் காக்கும் போரில் தம் உயிர்களை நீர்த்த போராளிகளை மாவீரர் நாளில் நினைவு கூறுவது வழமை.
அவ்வாறாக வரும் கார்த்திகை மாதம் இருபத்தி ஏழாம் திகதி ஐரோப்பாவில் வருகை தந்து தமிழ் மக்கள் மத்தியில் பேச இருந்த சீமானை சிறையில் அடைத்தது தமிழக அரசு.
அவரது பேச்சின் வாயிலாக தமிழ் மக்கள் மீண்டும் புலிகள் பக்கம் அவர்களின் உரிமை போர் பக்கம் தூண்டபட்டு அந்த போராட்டம் துளிர்க்கும் என நம்புகிறது அந்நிய பேரினவாத படைகள் அரசுகள்.
தமிழ் ஈழ விடுதலை போரில் பங்கெடுத்து சிறை கூடத்தில் இருக்கும் முக்கிய போராளி தலைவர்களை புலம் பெயர் நாடுகளிட்க்கு அனுப்பி அங்கு தமிழ் மக்கள் மத்தியில் புதிய குழப்பத்தை பிரிவினையை உருவாக்கவும் புலிகள் இவ்வாறு செய்தார்கள் என்ற சில காணொளி காட்சிகளை வெளியிடவும் சிங்கள புலனாய்வு துறையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறாக சிறை வைக்கபட்ட போராளிகள் சிலர் புலம் பெயர் நாடுகளிட்க்கு அந்த நாட்டு சிங்கள தூதரகங்கள் வாயிலாக நேரடியாக இயக்கபடுகின்றனர்.
எதிர் வரும் மாதம் வரவிருக்கும் மாவீரர் தினத்திற்க்கு முன்னர் தமிழ் ஈழத்திற்க்கு ஆதரவாக செயல்பட்டு வரும் முக்கியஸ்தர்களை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற போர்வையில் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளன. இதில் முக்கியமாக பிரான்ஸ் சுவிஸ் லண்டன் நாடுகளே முதன்மை வகிக்கின்றன.
இவர்களின் இந்த கூட்டு குழப்ப அறிக்கைகளை வெளியீடு செய்யும் நோக்குடன் சில இணைய தளங்கள் இவர்களின் பேரம் பேச்சுக்கு இணங்கியுள்ளன.
ஒன்று பட்டு உருத்திரகுமார் பின்னால் அணி திரளும் தமிழ் மக்களை இரண்டுபட வைத்து அதன் ஊடாக தாம் நினைத்தை சாதிக்க முனையும் இலங்கை அரசின் இந்த நாசகார சதி நடவடிக்கையில் இருந்து தமிழர்கள் தப்பி பிழைக்க விழிப்பாக இருக்கும் படி கேட்டு கொள்ளபடுகின்றனர்.
கோஸ்டி மோதலகளை உருவாக்கி அதன் வாயிலாக நிகழ்வுகளில் குழப்பத்தை உருவாக்கவும் இவர்கள் முனைந்து வருகின்றனர். மக்களே விழிப்பாக இருங்கள் ..விரைவில் உளவாளிகள் உங்கள் முன் குழப்பங்களுடன் ….! ஆணி வேர் அறுக்க வரும் இந்த அந்நியர்களை நான் வேரோடு தறிப்போம் ..!
Friday, October 8, 2010
No sting Operation! Corporation claims mosquito density down
By G Saravanan
Published in The New Indian Express, Chennai on October 8, 2010:
CHENNAI: According to the Corporation, the mosquito density in the city has gone down. But ask any kid in the vicinity and the mosquito sting marks he shows you will be an answer in themselves.
If you go by the Corporation’s claim, its survey last week revealed that mosquito density had dropped by 15-20 per cent in the city. Do an independent cross-verification in the surveyed areas and you will find that the ground reality is entirely different.
While the field report (collected on September 23) says that mosquito density in areas along the Otteri Nullah in Ward 68 (Anna Nagar East) had come down, residents from the area dispute the claim, saying that the menace, in fact, had increased.
“We have been facing the onslaught of the winged monsters every year, and particularly, the last few months were very horrible to all the locals here,” informs Jeevarathinam, a resident.
It’s not Anna Nagar East alone that is at its wits’ end. Many parts across the Corporation’s 10 zones face similar problems. Zones 2 (Basin Bridge), 3 (Pulianthope) and 5 (Kilpauk) are the worst hit.
Not just has the survey thrown up trashy figures, the Corporation still does not have the big picture of mosquito density across the city. The reason: many of its field staff never files their data on time.
Residents also question the method of collecting data, which they argue lacks authentication and cross verification by higher officials of the Corporation health department.
According to sources, the civic body’s 20 field staff visit select spots (notified by zonal entomologists) twice a day to collect data. In the first visit ( from 7.30 am to 8.30 am), they use a small vessel to collect samples of larvae from waterways and storm water drains. In the evening (from 5.30 pm to 7.30 pm), they use a suction tube to collect adult mosquitoes from designated spots near slums. The numbers they get are extrapolated to arrive at the mosquito density.
Whatever the method, have we really arrived to a reliable estimate of the mosquito population? The answer is a big no. Time the Corporation get its act together.

Tuesday, October 5, 2010
எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!

ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது.
இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.
தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார்.
வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''
படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!
ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...
வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?
நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.
மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள்.
முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்;
4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி.
"சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?
ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான்.
தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.
சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.
இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.
படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.
தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது.
அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும்.
ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும்.
மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!
"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!
மனநலம் பாதித்த குழந்தைகளுடன் பரிதவிக்கும் இலங்கை பெண் அகதி

Source:http://www.dinamani.com
கும்மிடிப்பூண்டி, அக். 4: கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது 2 பிள்ளைகளுடன் போராடி வருகிறார் இலங்கை பெண்மணி தவமணிதேவி (60).
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மகன் பிரகாஷ் (25), மனநலம் பாதிக்கப்பட்ட மகள் சந்திரவதனா (30) ஆகியோருடன் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வரும் இவர் தமிழக அரசின் உதவியை எதிர்நோக்கி இருக்கிறார்.
இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த வீரப்பபுரத்தைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மனைவி தவமணிதேவி. சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் அமிர்தலிங்கம் உயிரிழந்தார்.
இந்நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மீண்டும் போர் மூண்டது. அப்போது சுமார் 10 பேர் கொண்ட இலங்கை ராணுவத்தினர், தவமணிதேவியின் வீட்டுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இச் சம்பவத்தில் தவமணிதேவி, அவரது மகன் பிரகாஷ், மகள் சந்திரவதனா உள்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். பிரகாஷுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு அவருக்கு வலிப்பு நோயும், மனநிலை பாதிப்பும் ஏற்பட்டது. சந்திரவதனாவுக்கும் மனநிலை பாதிக்கப்பட்டது.
அந்த நிலையில் தவமணிதேவி தனது பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக வீடு, நகைகளை விற்று குடும்பத்துடன் தமிழகத்துக்கு அகதியாக வந்ததாகக் கூறுகிறார். மண்டபம் முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அங்கு பிரகாஷ் மற்றும் சந்திரவதனா உடல்நிலை மோசமானதால், கூடல்பூதூர் அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு மதுரை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பிறகு தவமணிதேவி, தனது 90 வயதான தந்தை, மகன் பிரகாஷ், மகள் சந்திரவதனா ஆகியோருடன் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் தங்கியிருக்கிறார்.
இதுகுறித்து தவமணிதேவி கூறுகையில், ""சொந்த வீடு, நிலபுலன், வயிறார உணவு, அமைதியான வாழ்க்கை என்று இலங்கையில் வாழ்ந்து வந்த நாங்கள் விதி வசத்தால் உயிரைக் காத்துக்கொள்ள அகதிகளாய் தமிழகம் வந்தோம். வயிறார உணவுக்கே போராடி வரும் இந்த சூழலில், எனது மகன், மகள் ஆகியோரின் மருத்துவம் மற்றும் பராமரிப்பு செலவுக்கு உதவிட எனக்கு யாருமில்லை. எனவே தமிழக அரசு உதவிட வேண்டும்'' என்றார்.
இந்நிலையில் தவமணிதேவி தனது குடும்ப சூழலை விவரித்து, தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் அகதிகள் முகாம் உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார்.
தவமணிதேவியின் குடும்ப நிலையை உணர்ந்து, தமிழக அரசு உதவ முன் வரவேண்டும் என்பதே முகாம் மக்களின் கோரிக்கையாகும்.
Friday, October 1, 2010
Complete ban on Plastic carry bags becomes effective from Oct 2

Source: The Daily Telegram, Port Blair
With a view to protect and improve the quality of environment and to prevent control and abate environmental pollution in these islands, the A&N Administration has imposed complete ban on plastic carry bags irrespective of thickness, size, colour and nature in the islands. The ban becomes effective from 2nd of October, 2010.
A notification issued to this effect says extensive use is being made of plastic carry bags, which by reason of their chemical of physico-chemical properties, are liable to cause harm to human beings, ther living creatures, plants, micro-organisms and the environment of Andaman & Nicobar Islands.

The negative environmental impacts are more visible at tourist spots, beaches, roads, drains and sewers, markets, ports/ harbours, part of reserved forests, national parks both marine and terrestrial, wildlife sanctuaries, biological parks, gardens and water reservoirs in the Andaman & Nicobar Islands frequented by the tourists and others.
Accordingly, the ban on plastic carry bags extends to its use, storage, import, manufacture, transportation, distribution or sale and disposal.
The Administration has assigned the task of implementing this ban to the District Magistrates/ Assistant Commissioners/ Tehsildars of all Districts, the Secretary, Port Blair Municipal Council, the Chief Executive Officer of all the Zilla Parishads, Executive Officers of Panchayat Samitis, Secretaries of Gram Panchayats, the Divisional Forest Officers/ Deputy Conservator of Forests/ Range Officers in Reserved Forests/ Protected Areas and the Station House Officers of all Police
Stations.
The Deputy Commissioners of all the districts of UT of Andaman & Nicobar Islands shall implement these orders related to prohibition on use, storage, import, manufacture, transportation, distribution or sale and disposal of plastic carry bags in their respective jurisdictions.
The Administrator, Union Territory of Andaman and Nicobar Islands hereby, further directs that the Member Secretary, Andaman Nicobar Administration Pollution Control Committee shall co-ordinate and monitor the enforcement of the above orders and also authorizes him to file complaints under Section 19 of the Environment (Protection) Act, 1986.

Any violation of these directions shall entail punishment under the Environment (Protection) Act, 1986.
Subscribe to:
Posts (Atom)
Pawan Hans Helicopter Crash-Lands in Sea Off Mayabunder Coast; All Passengers Rescued
Mayabunder, 24 February 2026: A Pawan Hans helicopter with five passengers, including an infant, reportedly crash-landed into the sea near ...
-
Source: http://www.portwings.in/ports/pm-modi-to-lay-foundation-of-sez-at-jnpt/ Mumbai: Port Wings News Bureau: The Prime Mini...
-
Source: http://www.portwings.in/articlesinterviews/shortage-of-customs-officers-impediment-to-exim-business-trade/ Port Wings New...
-
Source: http://onlineuthayan.com/english-news/uthayannews/x284z263h1h1r2p2 Early morning incident – printing machine scorched, ...