Source:http://www.facebook.com/alainews
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
ஊடகவியலாளர் சந்திப்பு - அறிக்கை
சென்னை,
25-03-2013
அன்புடைய ஊடக நண்பர்களுக்கு,2009ல் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழீழத்தில் நடத்திய இனப்படுகொலையின் கோரக்காட்சிகளைக் கண்டு உலக மக்கள் அனைவரும் மௌனம் காக்க தாய்த் தமிழகத்தில் இருக்குக்கூடிய மாணவர்களாகிய நாங்கள் தமிழினத்திற்கு கிடைக்க வேண்டிய நீதியைத் தேடி இந்திய அரசின் கவனத்தை ஈர்க்க எங்களை நாங்களே வருத்திக்கொண்டு அறவழியில் உண்ணாநிலை போராட்டத்தை துவங்கினோம்.
குறிப்பாக நாங்கள் வைத்த கோரிக்கைகள் 8. அதில் முக்கியமானதும் முதன்மையானதுமான அமெரிக்கா கொண்டு வரும் அயோக்கியத் தீர்மானத்தை புறக்கணித்து இந்தியாவே தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்க அங்கு பொது வாக்கெடுப்பு என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் போராட்டத்தை துவக்கினோம்.
ஆனால் ஐந்தாவது நாள் முதல் சில கல்லூரி மாணவர்கள் இதே பெயரை பயன்படுத்தி ஆனால் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியது வருந்தத்தக்க செயல். நாங்கள் யாரொருவரின் தலைமையில் இயங்காமல் இந்த 8 கோரிக்கைகளையே மையமாக வைத்து போராட்டத்தை துவங்கினோம். கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேல் மாணாவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.பொதுவில் பகிர்ந்துகொள்ளமுடியாத சில காரணங்களால் எங்கள் போராட்டம் 4வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. இருப்பினும் தமிழகத்தில் உள்ள மற்ற மாணவர்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தி தமிழகம் முழுக்க விழிப்புணர்வும், தமிழர்களுக்கு உணர்வையும் ஊட்டியுள்ளனர்.
சென்னையில் எங்கள் உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக்கொண்டு மாணவர்களாகிய நாங்கள் தமிழகம் முழுக்க பயனித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை சந்தித்து போராட்ட களத்தில் உடனிருந்து அவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டோம். இதுவரையில் 21 மாவட்டங்களில் உள்ள போராட்ட குழுவை சந்தித்துள்ளோம். எங்களில் சிலர் இன்னும் பல்வேறு மாவட்டங்களுக்கு பயனித்து கல்லூரி ஒருங்கினைப்பளர்களை சந்தித்து வருகின்றனர்.சென்னையில் போராட்டங்கள் சிறப்பாக நடந்தேரியது. அதைவிட திருச்சி, தஞ்சை, மதுரை, நெல்லை, திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக நடந்த போராட்டங்கள் நெகிழ்ச்சியாக இருந்தது.
இந்த மாணவர் போராட்டம் ஏதோ லயோலா கல்லூரி மாணவர்கள் துவங்கியதால் அவர்களுக்கே சொந்தமானது அல்ல. மாறாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணாவர்களும் இந்த போராட்டத்தை வழிநடத்தி செல்ல உரிமை உண்டு. ஆனால் தயவு செய்து தனிப்பட்ட கட்சியின் கொள்கைகளுள் நாட்டம் உடையவர்கள் இந்த மாணவர்களின் போராட்டத்தை விட்டுவிடுங்கள். மாணவர்கள் போராட்டத்தை இவர்களைப் போன்றவர்கள் வழிநடத்தினால் அவர்களின் சொந்த கட்சியின் சித்தாந்தத்தை மற்ற மாணவர்களிடம் மறைமுகமாக திணிக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
போர் துவங்கி கடந்த ஐந்து வருடங்களாக எந்த அரசியல் கட்சியாலும் அவலங்களை தடுக்க முடியாத சூழல். நீதி பெற்று தரமுடியாத நிலை. இதை மாற்ற நினைத்து மாணவர்கள் தன்னெழுச்சியாக இந்த போராட்டத்தை துவக்கியுள்ளளோம். இங்கும் வந்து தங்களுடைய சுயைலாபத்திற்காக மாணவர்களை அரசியல் கட்சிகள் ரீதியாக பிரித்து மீண்டும் களத்தை பழைய நிலைக்கு கொண்டு சென்றுவிட வேண்டாம். தொலைவில் இருந்து மாணவர்கள் கவனித்தால்தான் எல்லா கட்சிகளின் கருத்துகளையும் உள்வாங்கி ஒரு முடிவுக்கு வர இயலும்.
மாணவர்கள் இணைந்து எல்லா பொதுப் பிரச்சனைகளுக்கும் பொது மேடை அமைத்து தருகிறோம். அதில் வந்து உங்களுடைய வாதங்களையும் எதிர் வாதங்களை முன்வையுங்கள். அதில் எங்களுக்கு எது சிறந்ததென்று படுகிறதோ அதை நாங்கள் பொதுமக்களிடம் கொண்டு சேர்கிறோம். மாணவர்களை மாணவர்களாகவே இயங்க விடுங்கள்..
ஐநாவில் இந்த முறை தமிழர்களுக்கு பயனளிக்காத, எதிர்மறையான தீர்மானத்தை கொண்டுவந்த நாடு அமெரிக்கா என்ற வகையில்தான் அமெரிக்காவை எதிர்த்தோம். எங்களது அடுத்தக்கட்ட போராட்டம் என்பது மனிதநேயம் உள்ள தமிழர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் இணைத்து ஈழத்தில் பொது வாக்கெடுப்பு வேண்டி இந்தியாவை நிர்பந்திக்கும் வகையில் அமையும். அதற்கான ஆதரவை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கட்சிகளையும் அனைத்து மாநிலங்களில் உள்ள மாணவர்களையும் அனுகி நம் தரப்பு நியாயங்களை எடுத்துரைப்போம்.
தமிழர்களாகிய நம் நியாயமான கோரிக்கைகளை இந்திய நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடத்தி அதில் நிறைவேற்ற வேண்டிய வகையில் போராட்டம் அமையும்.
போராட்டக்களத்தில் எங்களுக்கு ஆதரவாக இருந்த சில அரசியல் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் மற்றும் தமிழ் உணர்வாளர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். உறுதியான முறையில் அறவழியில் தொடர்ந்த இந்த மாணவர் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த காவல் துறையை இவ்வேளையில் நினைத்து பார்க்கின்றோம். எங்களுடைய மாணாவர் போராட்டம் பெரும் எழுச்சி பெற உறுதுணையாக இருந்த ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். இனி வரும் நாட்களிலும் இது தொடரும் என்று நம்பிக்கை கொள்கிறோம். சமூக அவசியத்துக்காக துவங்கப்பட்டுள்ள இந்த மாணவர்களின் இயக்கத்துக்கு கல்லூரிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று பணிவண்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பின்வரக்கூடிய நாட்களில் எங்களுடைய மாணவர்கள் போராட்டம் படிப்பிற்கும் பொது அமைதிக்கும் பங்கம் விலைவிக்காத வகையில் அதே சமயம் உறுதியான நம்பிக்கையுடன் அனைத்து மனிதநேயம் உள்ளவர்களையும் திரும்பிப்பார்க்கவைக்கும் வகையில் அறவழியில் தொடர்வோம்.
இதற்காக தமிழகம் முழுக்க பயணித்து வரும் ஏப்ரல் முதல் வாரத்திற்குள் மாணவர்கள் கட்டமைப்பு ஒரு இறுதியான வடிவம் பெறும்.
ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் ஈந்த விக்ரம் மற்றும் கெளதமி அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மாணவர்களின் போராட்டமானது வெற்றிகரமாக பயணித்துக்கொண்டுள்ளது. நாம் நமது இலக்கை நிச்சயமாக சென்றடைவோம். யாரும் இது போன்ற உயிர் மாய்த்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடவேண்டாம் என மாணவர் கூட்டமைப்பு சார்பாக வேண்டிக் கொள்கிறோம்.
அரசியலில் அனுபவமுள்ள நடுநிலையான பொதுவாழ்வில் எளிமையாக வாழும் தோழர் நல்லக்கண்ணு ஐயா மற்றும் நெடுமாறன் ஐயா போன்றவர்களை மாணாவர்களாகிய எங்களுக்கு ஆலோசனை வழங்க அழைப்புவிடுக்கப்போகிறோம்.
நன்றிமாநில வழிநடத்தும் குழு சார்பாக
ஜோ பிரிட்டோ 86789 62611

No comments:
Post a Comment