போரின்போது சிறிலங்கா இராணுவம் ஒரு பொதுமகனைக்கூட கொல்லவில்லை: அல்ஜஸீராவுக்கு மகிந்த தெரிவிப்பு
Source: http://www.puthinamnews.com/?p=10787 “சிறிலங்கா இராணுவம் போரின்போது பொதுமக்கள் எவரையும் கொல்லவில்லை. அவ்வாறு கொலை செய்திருந்தால் மூன்று லட்சம் மக்களும் இராணுவத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்திருக்கமாட்டார்கள். மக்கள் அனைவரும் இராணுவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதனால்தான் அவர்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வந்தார்கள்” – என்று சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச அல் ஜஸீரா செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார். சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றம் எதனையும் புரியவில்லை . நாட்டில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்திருக்கிறது. அவ்வாறு பயங்கரவாதத்தை ஒழித்ததற்காக – சர்வதேச சமூகம் கூறுவதைப்போல – எவர் மீதும் நடவடிக்கை எடுக்கமுடியாது. நிச்சயமாக அதற்கு நான் அனுமதிக்கமாட்டேன் என்றும் மகிந்த தனது செவ்வியில் கூறியிருக்கிறார். சிறிலங்கா இராணுவத்தினர் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்றால் அரசு ஏன் விசாரணைக்குழு ஒன்றை நியமித்துள்ளது என்று செய்தியாளர் கேட்டபோது – அது சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரம் என்றும் உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடுவதை தான் விரும்பவில...