பெருவாரியான சிங்களர்கள் இந்தியர்கள்தான்: இலங்கைத் தூதர் கரியவாஸம் ரகசிய பிரசாரம்!
Source: http://dinamani.com/india/article1519120.ece By - எம்.ஏ.பரணீதரன் -, புது தில்லி "வட இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட சிங்களர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலை கொள்ள வேண்டும்'' என்று தில்லியில் உள்ள அந்நாட்டுத் தூதர் பிரசாத் கரியவாஸம் இந்திய ஊடகங்கள், வடநாட்டுத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ரகசிய பிரசாரம் செய்து வருகிறார். ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கடந்த 21-ம் தேதி இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னதாக, இலங்கைக்கு சாதகமான ஆதரவை இந்திய ஊடகங்கள் மூலம் பெறும் முயற்சியில் பிரசாத் கரியவாஸம் ஈடுபட்டார். இதையொட்டி கரியவாஸம் "சிங்களர்கள் வட இந்திய பூர்விகவாசிகள்' எனக் குறிப்பிட்டு அனுப்பிய மின்னஞ்சல் செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அதில் ""12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால், இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஒடிசா மற்றும் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைப்பட வேண்டும்''...