Tuesday, April 3, 2012

கவிபாரதி வித்யாலயா பள்ளியில் 20 மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் தபாலில்?



சென்னை-19. திருவொற்றியூர், கவிபாரதி வித்யாலயா பள்ளியில் 20
மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. கட்டணம்
ஏதும் செலுத்தவில்லை என டி.சி.யிலேயே எழுதியுள்ளனர்.

இப்பெற்றோர்கள் கட்டணம் கட்ட பலமுறை முயற்சி எடுத்தபோதும், முழுக்கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே பெறுவோம் எனக்கூறி தடுத்தது பள்ளி நிர்வாகம் தான். மேலும்,
அரசுக்கட்டணத்தை பதிவுத்தபாலில் செலுத்திய மாணவர்கள் சுமார் 20 பேருக்கு
பகுதிக்கட்டணம் மட்டுமே தாங்கள் செலுத்தியுள்ளதால் பள்ளி தீர்மானித்த
கட்டணத்தை ஏப்ரல்,5 க்குள் கட்டுங்கள், இல்லையெனில் நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் எங்களது சங்கம் சார்பாக வழக்குத்
தொடுத்திருந்தோம். நீதியரசர்.சிங்காரவேலு விசாரித்து, அதிகக் கட்டணம்
பள்ளியில் வசூலிக்கப்படுகிறதா என இறுதித் தீர்ப்பு வழங்க வேண்டும் என
உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்த அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், நிர்வாகம் பள்ளி தீர்மானித்த கட்டணத்தை செலுத்தாத
பெற்றோர்களின் குழந்தைகள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கையை துவங்கியுள்ளனர்.

31-03-2012 அன்று தகுதி அட்டை(REPORT CARD) வழங்கப்படுவதாக நிர்வாகம்
அறிவித்திருந்தது. கட்டணத்தை முழுமையாக/பகுதியாக செலுத்தாத
குழந்தைகளுக்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைத்து விட்டோம் என தகவல் பலகை
வைக்கப்பட்டிருந்தது. 

அரசு தீர்மானித்த கட்டணத்தை செலுத்திய பெற்றோர்களைத்தான் பகுதிக்கட்டணம் கட்டியவர்களாக சித்தரித்துள்ளனர்
நிர்வாகம். பின்னர் சுமார் 50 பெற்றோர்கள் பள்ளி முதல்வரை சந்தித்தோம்.
அனைத்து குழந்தைகளும் இன்று தகுதி அட்டை பெறுகையில் எங்கள் குழந்தைகள்
மனநிலை பாதிக்கப்படும் என்று கூறினோம். ஆனால், வீட்டுக்கு செல்லுங்கள்
வந்திருக்கும் எனக்கூறினார் பள்ளி முதல்வர். பின்னர், இதை ஒரு கடிதமாக
தரவேண்டுமென பெற்றோர்கள் கேட்டுக்கொண்டபடி, திருவொற்றியூர் காவல் துணை
ஆய்வாளர் திரு.பரமசிவம் முன்னிலையில் நிர்வாகம் அனைவருக்கும் அளித்தது.
ஆனால், அன்று தான் அதனை அனுப்பியுள்ளனர். ஆனால்,30-03-2012 அன்றே டி.சியை
மாணவர்களுக்கு தபாலில் அனுப்பும் வேலையையும் நிர்வாகம் செய்துவிட்டது.

குறிப்பாக, 31-03-2012 அன்று பள்ளிக்கு வந்த காவல்துறை துணை ஆய்வாளர்
திரு.  பரமசிவம்   அவர்களிடம், இப்போது கூட கட்டணம் முழுவதையும்
செலுத்துகிறோம், பில் தரச்சொல்லுங்கள் என்று கூறினோம்.  மேலும், நாங்களாக
அலுவலம் சென்ற போது அங்கு மற்றொரு தகவல் பலகை இருந்தது. அதில், இன்று
பள்ளிக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது(Today, No Fees Collection) என
போர்டு வைக்கப்பட்டிருந்தது.இது போன்று பல முறை நடந்துள்ளது. கட்டணம்
கட்டத்தயாராக இருப்பதாக பல முறை நாங்கள் சங்கம் சார்பாக கடிதம்
அனுப்பியுள்ளோம். ஆனால், பள்ளி நிர்வாகம் தீர்மானித்த கட்டணம் மட்டுமே
பெறுவோம், அரசுக்கட்டணத்துக்கு என எங்களிடம் பில் இல்லை என்றும் மறுத்த நிர்வாகம், பணமாக கட்ட அவ்வைக்காப்பகத்துக்கு செல்ல வேண்டும்,

காசோலையெனில் தேதி இல்லாமல் முழுமையான தொகையைக் கட்ட வேண்டும் என்றும் நிர்ப்பந்தப்படுத்தியதால் தான் பெற்றோர்களால் கட்ட இயலவில்லை.

தபாலில் சிலர் அனுப்பியுள்ளனர், அது முறையற்றது, அதைப்போல் யாரும்
கட்டத்தேவையில்லை என்றும் கூறியது பள்ளி நிர்வாகம் தான்.
மாற்றுச்சான்றிதழை தபாலில் அனுப்பி வைத்த பள்ளி நிர்வாகத்தின் செயலே
அவர்களின் நோக்கத்தை எடுத்துரைப்பதாக உள்ளது.

இக்கல்வியாண்டு துவங்கியது முதலே எங்கள் குழந்தைகள் ஏராளமான துயரங்களை
பள்ளியில் அனுபவித்து வந்துள்ளனர். கடந்தாண்டும் தகுதி அட்டை முதலில் தர
மறுத்து, திருவள்ளூர் மாவட்ட சி.இ.ஓ. தலையிட்டார். பின்னர் நோட் வழங்க
மாதவரம் தாசில்தார், புக் வழங்க திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.குப்பன், மாதவரம் தாசில்தார், காவல்துணை ஆய்வாளர் எனப் பலர்
தலையிட்டுள்ளனர். ஏப்ரலில் கல்வியாண்டு துவங்கியது முதல் ஒரு கட்டண
விபரத்தை அமல்படுத்தினர். பின்னர், நீதிபதி.ரவிராஜபாண்டியன்
சீரமைப்புக்கட்டணம் அறிவிக்கப்பட்ட பின்னர், ஆகஸ்டு-2011 முதல் புதிய
கட்டண முறையை அமல்படுத்தினர். கல்வியாண்டின் இடையில் கட்டணத்தை
மாற்றக்கூடாதென்ற சி.பி.எஸ்.இ.விதிகளுக்கு இது முரணானது. மேலும், அரசுக்
கட்டணத்துக்கு முரணாக,TECHNOLOGY BASED EDUCATION  என்ற பெயரில்
எல்.கே.ஜி-யூ.கே.ஜி வகுப்புகளுக்கு ரூ.7,500யும், ஒன்று முதல் பத்தாவது
வகுப்பு வரை ரூ.4000யும் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும், optional
extra co-curricular என்ற பெயரில் 2250-3000 வரையும் வசூலிக்கப்பட்டு
வருகிறது. இதற்காக பள்ளி வேலை நேரமே ஆகஸ்டு முதல் மாற்றப்பட்டு,
அரசுக்கட்டணத்தை செலுத்திய மாணவர்களுக்கு ஒருவிதமாகவும்- பள்ளி கேட்ட
கட்டணத்தை செலுத்தியவர்களுக்கு மற்றொரு விதமாகவும் என இரண்டு கால
அட்டவணைகள் கொண்டு பள்ளி இயங்கிவருகிறது. ஆண்டுவிழா கூட நடத்தாத பள்ளி
நிர்வாகம் extra co-curricular day   என்று அரசுக்கட்டணம் செலுத்திய
குழந்தைகளை புறக்கணித்து விட்டு விழா நடத்தினார்கள். அதன் உச்சமாக இன்று
டிஸ்மிஸ் என்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எங்கள் குழந்தைகளின் கல்வியையும், வாழ்வையும் பாதுகாக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
                                              இப்படிக்கு,
                                               எஸ்.விநாயக மூர்த்தி,

செயலாளர், கவிபாரதி வித்யாலயா மாணவர் பெற்றோர் சங்கம்
9710767383, 9677244993

No comments:

Post a Comment

ICTSI secures 25-year extension to operate Mindanao Container Terminal

Mindanao International Container Terminal Services Inc. (MICTSI), a subsidiary of International Container Terminal Services Inc. (ICTSI), ha...