போராயுதம் போகட்டும் அறிவாயுதத்தை தூக்குவோம்

Source:http://www.valampurii.com/online/viewnews.php?ID=25929

தீ பற்றி எரிகிறது. தீ ...தீ... இப்படி ஒருவர் கதறுகிறார். இன்னொருவரோ தீயைத் தணிப்பதற்கு வழி தேடுகிறார். தீ... தீ... என்று கதறி என்ன பயன்? தீயை எங்ஙனம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது எனச் சிந்தித்து சமயோசிதமாக செயற்படுவது அறிவின் பண்பட்டது. எனவே கத்திக் கதறுவதைவிட, காத்திரமான செயற்பாட்டை எடுப்பதுமேல்.தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஆயுதப் போராட்டத்தில் முப்பது ஆண்டுகளை தொலைத்துவிட்டனர்.இவ்வாறான நீண்ட ஆயுதப் போராட்டத்திற்கான காரணம் சேர் பொன்.இராமநாதன் போன்ற தமிழ்த் தலைவர்கள் அறிவாயுதத்தை பிரயோகிக்கத் தவறியமையாகும்.

அவர்கள் நினைத்திருந்தால், தமிழ் மக்கள் சகல உரிமைகளோடும் வாழும் வகை பெற்றிருப்பர். ஆனால், சேர் பொன். இராமநாதன் போன்றவர்கள் சிங்கள மக்களோடு சேர்ந்து வாழ முடியும் எனக் கருதினர். அவர்களிடம் சின்னத்தனம் இருக்கவில்லை. ஆனால் இந்த நாட்டின் முதல் பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்க உள்ளிட்ட அன்றைய சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்கள் தொடர் பில் கபடத்தனமாக நடந்துகொண்டனர். இதனால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டனர். ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகிற்று.சர்வதேச சமூகத்தின் மாறுநிலைக் கொள்கைகள் எங்கள் ஆயுதப் போராட்டத்தின் ஆணி வேரை அறுத்துவிட எங்கள் நிலை மோசமான தாயிற்று.

எனினும் ஆயுதப் போராட்டத்தின் தோல்வி தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமையை இல்லாது செய்துவிட முடியாது. ஆகவே போராயுதம் என்பதில் இருந்து விடு பட்ட நாம் அறிவாயுதத்தை ஏந்தவேண்டியவர்களாக இருக்கின் றோம். அறிவாயுதம் என்பது போராயுதம் வைத்தி ருப்பவரையும் வெற்றி கொள்ளக்கூடியது.அறிவாயுதப் போராட்ட த்தில் தோல்விக்கு இடமேயில்லை. இராஜதந்திரத்திற்கான வியூகம் என்பது முதன்மை பெறுகின்றது. உதாரணத்திற்கு வெளிநாட்டுத் தூதுவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து தமிழ் மக் களின் நிலைமைகளைக் கேட்கின்றனர். அவர் கள் யாரைச் சந்தித்தாலும் சந்திப்பவர்களுடன் நடத்துகின்ற கலந்துரையாடல்களில் இருந்தே தமிழ் மக்களின் சமகால நிலைமை பற்றி தீர்மானிப்பர். எனினும் இதுவிடயத்தில் நாம் ஒருமித்து எங்கள் அவல நிலையை கூறத் தலைப்பட் டோமா எனில் இல்லை என்பதே பதிலாக இருக்கும். எனவே இங்குதான் அறிவாயுதம் தேவைப்படுகின்றது. வெளிநா ட்டுத் தூதுவர்கள் வருவ தற்கு முன்னதாக அவர்கள் யார்? அவர்களிடம் எந்தப் பிரச்சினையை எடுத்துக் கூற வேண் டும். அவர்கள் எங்கள் தொடர்பிலும் அரசு தொடர்பிலும் கொண்டுள்ள உறவுநிலை யாது என்பது பற்றி முன்கூட்டியே ஆராய்ந்து திட்டமிட்டு அதன் பிரகாரம் ஒத்த கருத்தை முன்வைக்க வேண்டும். இதைவிடுத்து தேடிவந்த தூதுவர்க ளிடம் சொல்லவேண்டியதை சொல்லாமல் விட்டு விட்டு, தேவையற்றதை கதைப்பது எங்கள் மீட்சியை நாங்களே தடுத்து நிறுத்துவதற்கு ஒப்பானதாகும்.

Comments

Popular posts from this blog

PM Modi to lay foundation of SEZ at JNPT

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire