Friday, September 16, 2011

மேயர் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 10 பேர் அறிவிப்பு; சென்னையில் சைதை துரைசாமி போட்டி



சென்னை, செப். 16-
 
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற அக்டோபர் மாதம் தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் மேயர் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.
 
சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி. மு.க. வேட்பாளராக சைதை துரைசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழு எடுத்த முடிவின்படி உள்ளாட்சி தேர்தலில் கீழ்க்கண்ட 10 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்.
 
அதன் விவரம் வருமாறு:-
 
1. சென்னை - சைதை துரைசாமி
 
2. வேலூர் - கார்த்தியாயிணி
 
3. சேலம் - சவுண்டப்பன்
 
4. ஈரோடு - மல்லிகா பரமசிவம்
 
5. கோவை - செ.ம.வேலுசாமி
 
6. திருப்பூர் - திருப்பூர் ஆ.விசாலாட்சி
 
7. திருச்சி - எம்.எஸ்.ஆர்.ஜெயா
 
8. மதுரை - வி.வி.ராஜன் செல்லப்பா
 
9. நெல்லை - விஜிலா சத்தியானந்த்
 
10. தூத்துக்குடி- எல்.சசிகலா புஷ்பா.
 
சென்னை மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சைதை துரைசாமி முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சைதை துரைசாமி, கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இவர் மனித நேய அறக் கட்டளை நடத்தி வருகிறார்.
 
இதில் மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக ஐ.ஏ.எஸ். பயிற்சி அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

New Maersk Vessel Class To Enter Service

  A.P. Moller - Maersk (Maersk) has named the first vessel in a series of 17,480 TEU vessels equipped with dual-fuel methanol propulsion. Th...