Monday, August 30, 2010

மத்திய அரசின் கண்காணி்ப்புக்கு பிளாக்பெர்ரி செல்போன் நிறுவனம் ஒப்புதல்

Source: www.dinamani.com

First Published : 30 Aug 2010 08:21:42 PM IST


புதுதில்லி, ஆக.30- பிளாக்பெர்ரி செல்போன்களில் இருந்து அனுப்பப்படும் தகவல்களை மத்திய அரசு கண்காணிக்க அனுமதியளிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் தகவல்களை கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் அல்லது தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு விதித்திருந்த கெடு நாளையுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், மத்திய அரசுக்கு அனுமதியளிப்பதாக பிளாக்பெர்ரி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ரிம் இன்று அறிவித்துள்ளது.

தகவல்களை கண்காணிப்பதற்கான மென்பொருள் இல்லை என்று முன்பு கூறியிருந்த அந்த நிறுவனம் இன்று அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment