Source:http://www.puthinamnews.com/?p=14255
ஐநா சபைக்கும், மனித நேயத்தை நிலைநாட்டி அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் சர்வதேசநாடுகளுக்கும் எங்களுடைய கண்ணீர் ததும்பிய வேண்டுகோள்.
முதற்கண் எமது அவலநிலையை உலகிற்கு கூறும் அனைத்து ஊடகங்களையும் நன்றி உணர்வோடு கரம்பற்றி நிற்கின்றோம்.
கடந்த 30 வருடகாலமாக சொந்த மண்ணிலே அடிமைகளாக, அகதிகளாக உறவுகளை இழந்து எங்களுடைய உடமைகளை இழந்து உயிரைமட்டும் மிச்சம் கொண்டு சுதந்திர வாழ்வை தேடிகொண்டு இலங்கையில் இருந்து வெளியேறிய நாங்கள் கடல்மார்க்கமாக அகதிகளை ஏற்றுக்கொள்ளும் நாடுகளை நோக்கி கடந்த 18.04.2010 அன்று அக்கரைப்பற்றில் இருந்து புறப்பட்டோம்.
இதில் குழந்தைகள் 08, பெண்கள் 06, ஆண்கள் 61 அடங்கலாக 75 உறவுகள் சுதந்திரவாழ்வுக்காக உயிரைப் பணயம் வைத்து படகுமூலம் பயணம் ஒன்றை மேற்கொண்டோம்.
5 நாட்கள் கடந்த நிலையில் 23.04.2010 அன்று படகில் ஏற்பட்ட பழுதுகாரணமாகவும், மலேசியா கடற்பரப்பினை நோக்கி காற்று அடித்த காரணத்தினாலும் படகு மலேசியக் கடற்பரப்புக்குள் நுழையநேர்ந்தது உயிருக்காக போராடிக்கொண்டிருந்த நிலையில் மலேசியப் கடற்படையினர் எம்மைக்காப்பாற்றுவதாக கூறி மலேசியா அழைத்தார்கள்.
நாங்கள் மலேசியாப் பகுதிக்கு வரவிரும்பாத நிலையிலும் கூட எம்மை கைது செய்து மலேசியாவில் 110 நாட்களாக சிறை வைத்தனர்.
இந்த வேளையில் எமக்காக எங்களுடைய உணர்வுகளை உணர்ந்த எமது இன உணர்வாளரான மலேசியாவின் மாற்று செயலணித் தலைவரான திரு.கலைவாணர் அவர்களின் மிகக்கடுமையான முயற்சியினாலும், சர்வதேக தமிழர் அமைப்புகளின் உதவியின் பயனாக 63 உயிர்கள் சிறையில் இருந்து மீட்கப்பட்ட நாங்கள் திரு.கலைவாணர் ஐயாவின் பாதுகாப்பிலும் , பராமரிப்பிலும் இருக்கின்றோம்.
இன்னும் எங்களுடன் வந்த 12 உறவுகள் விடுதலையாகமால் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையிலே நாங்கள் போராட்டவாதிகளோ, போராளிகளோ அல்ல மாறாக சுதந்திரமாக வாழ்வைத் தேடி அலையும் அப்பாவி பொதுமக்கள் நாங்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பான UNHCR எம்மை அகதிகளாக ஏற்றுக்கொண்டுள்ள நாங்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையிலும், வேலை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இலங்கையில் இருந்து வந்த நாங்கள் எதும் அற்றவர்களாக அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம்.
எம்முடன் உள்ள சிறுவர்கள் 2வருடங்களுக்கு மேலாக கல்வியை இழந்தவர்கள், பாதுகாக்கப்பட வேண்டிய பெண்கள் பாராமரிக்கப்பட வேண்டிய முதியவர்கள், வாழ்நிலைக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களும் உள்ளோம்.
இவ்வுலகின் மனிதநேயம் எங்கே? ஈழத்து அகதிகளான நாங்கள் வாழத்தகுதி அற்றவர்களா? இலங்கையில் சுதந்திரமான வாழ்வை வாழ முடியாத நாங்கள் எங்கு சென்று வாழ்வது?
கடலில் கலந்த எம் கண்ணீருக்கு யார் தருவார்கள் பதில் என தவித்துக்கொண்டிருக்கின்றோம். உயிரை மட்டும் மிச்சம் கொண்ட நாங்கள் வாழ்வில் தொடர்துன்பத்தை அனுபவிக்க விரும்பவில்லை.எமது அவல நிலையை தொடரவிடாமல் மனிதாபிமான அடிப்படையில் உலகில் அகதிகளுக்கு தஞ்சம் கொடுக்கும் நாடுகள் எம்மையும் உயிர்களாக மதித்து விரைந்து அடைக்கலம் தாருங்கள் என தற்காலிகமாக மலேசிய பினாங்கு மாநிலத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் நாங்கள் பணிவன்புடன் வேண்டிநிற்கின்றோம். மனிதநேய மிக்க தலைவர்களும் உலக தமிழ் உறவுகளும் எமது அவல நிலையை வெறும் செய்திகளாக மட்டும் பார்த்து மறந்து விடாமல் எமக்காக நீங்கள் வாழும் நாடுகளிலும் பரிந்துபேசுங்கள் எனவும் வேண்டிநிற்கின்றோம்.
மலேசிய பினாங்குப் பகுதியில் மாற்றுச் செயலணி தலைவர் திரு.கலைவாணர் ஐயா அவர்களுக்குச் சொந்தமான அலுவலகக் கட்டடத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிரு க்கும் எமக்கு கலைவாணர் தலைமையிலான ஒரு சில உள்ளுர் அமைப்புகள் மட்டுமே உதவி செய்கின்றது.
மாறாக அடிப்படை வசதிகள் பல தேவைப்படும் எமக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்களோ, உலகத் தமிழர் அமைப்புக்களோ உதவ முன்வரவில்லை என்பது மிகவும் வேதனையளிக்கின்றது.
இந்த 75 உயிர்களையும் உயிர்களாக மதித்து இவ்வுலகில் வாழ்வு தாருங்கள் என அனைவரையும் கண்ணீர் மல்க ஏக்கத்துடன் வேண்டிநிற்கின்றோம்.
கண்ணீருடன்சுதந்திர வாழ்வுதேடி தவிக்கும்
75 இலங்கைத் தமிழ் அகதிகள்.
மாற்றுச் செயலணி அலுவலகம்,
பினாங்கு,மலேசியா
Subscribe to:
Post Comments (Atom)
New Maersk Vessel Class To Enter Service
A.P. Moller - Maersk (Maersk) has named the first vessel in a series of 17,480 TEU vessels equipped with dual-fuel methanol propulsion. Th...

-
Source: http://onlineuthayan.com/english-news/uthayannews/x284z263h1h1r2p2 Early morning incident – printing machine scorched, ...
-
Source: http://www.portwings.in/articlesinterviews/shortage-of-customs-officers-impediment-to-exim-business-trade/ Port Wings New...
-
Source: http://www.portwings.in/ports/pm-modi-to-lay-foundation-of-sez-at-jnpt/ Mumbai: Port Wings News Bureau: The Prime Mini...
No comments:
Post a Comment