தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்களுக்கு மாநில அரசு முட்டுக்கட்டை
Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=791788 தி . மு . க ., ஆட்சியில் துவக்கப்பட்டது என்ற காரணத்தால் , தமிழகத்தில் நடந்து வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கும் , மாநில அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது . கோவை - மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் , மற்ற திட்டங்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது . சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலைத் திட்டத்தை , 1,815 கோடி ரூபாயில் , தேசிய நெடுஞ்சாலை ஆணையம் , 2010, செப்டம்பரில் துவக்கியது . 20 சதவீத பணி மட்டுமே நடந்த நிலையில் , கூவத்தில் நீரோட்டத்தைப் பாதிக்கும் வகையில் , பணி நடப்பதாக தமிழக அரசு தடை விதித்தது . பிரதமரின் ஆலோசகர் உள்ளிட்டோர் , மாநில அரசுடன் பலகட்ட பேச்சு நடத்தியும் பயனில்லை . 485 நாட்களைக் கடந்தும் பணிகள் முடங்கியுள்ளன . இதைத் தொடர்ந்து , 630 கோடி ரூபாய் மதிப்பிலான , கோவை - மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலைத் திட்டத்தில் , மாநில அரசு சிக்க...