SOURCE: http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4839
எஸ்சோ என்று எல்லாரும் அன்பாக அழைக்கப்படும் சூசை அவர்களின் இறுதி நேரம் ! இராணுவ முற்றுகைக்குள் சிக்குண்ட அவர் எவ்வாறு இறந்தார் ? அவருக்காக ஏன் 2,000 மக்கள் அங்கே அணி திரண்டார்கள் ? இவை எல்லாம் இதுவரை வெளிவராத செய்திகள் ! முள்ளிவாய்க்காலின் ஒரு சிறிய பகுதியில் 17ம் திகதி இரவு என்ன நடந்தது என்பதனை இங்கே விவரிக்கிறோம் !
2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி: இந்தியாவில் நடைபெற்ற தேர்தலின் முடிவை அறிவிக்கும் நாள். ப.ஜ.க கட்சி ஆட்சிக்கு வந்தால் அன்றைய தினமே புலிகளுக்கு ஒரு நல்ல செய்தி இந்தியாவில் இருந்து வர இருக்கிறது என்று இந்தியாவில் உள்ள சில தமிழ் உணர்வாளர்கள் ஏற்கனவே ப.நடேசன் அவர்களிடம் கூறியிருந்தார்கள்[அவர்கள் யார் யார் என்று சொல்வதனால் தீர்வுகிட்டப்போவது இல்லை: அதனால் நாம் அதனைக் குறிப்பிடவும் இல்லை] ஆனால் அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற செய்தி புலிகளின் உயர்மட்டத் தலைவர்களுக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்தது. 16ம் திகதி இரவே கடல் மார்க்கமாக ஒரு உடைப்பைச் செய்து அங்கிருந்து மூத்த தளபதிகளுடன் ஒரு குழு வெளியேறவேண்டும் என்று, ரட்ணம் மாஸ்டர் தலைமையிலான சிலர் திட்டங்களைத் தீட்டினார்கள். ஆனால் முள்ளிவாய்க்கால் கடல் பரப்பில் ஒவ்வொரு 100 மீட்டருக்கும் 1 டோராப் படகு நிறுத்தப்பட்டிருந்தது.
அப்படியே இலங்கை கடற்படையின் வலைப்பின்னலை உடைத்தாலும் அதற்கு அப்பால், இந்திய கடற்படையினர் அங்கே நின்றுகொண்டு இருக்கிறார்கள், என்ற செய்தி ராமேஸ்வரத்தில் இருந்து புலிகளின் முக்கிய புலனாய்வு உறுப்பினர் ஒருவரால் சட்டலைட் தொலைபேசியூடாகத் தெரிவிக்கப்பட்டது. இச் செய்தி 16ம் திகதி இரவுவேளை கிடைக்கப்பெற்றதால் அன்றைய தினம், ஸ்ரீலங்கா கடற்படையின் முற்றுகையை உடைக்கும் திட்டம் பூண்டோடு கைவிடப்பட்டது. சுமார் 1 KM சதுரடிப் பரப்பில் அப்போது புலிகள் முடங்கிப்போய் இருந்த காலகட்டம் அது. அவர்களைச் சுற்றி சுமார் 30,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை இராணுவம் கனரக ஆயுதங்களோடு நின்றிருந்தார்கள். 16ம் திகதிக்கு முன்னதாகவே புலிகளை பூண்டோடு அழிக்கவேண்டும் என்று கோட்டபாய திட்டங்களை தீட்டியிருந்தார். காரணம் அதுவும் இந்தியாவில் ஆட்சிமாறினால், சிலவேளை போருக்கு இந்த மத்திய அரசு உதவாது என்று அவர் ஏற்கனவே கணக்குப்போட்டிருந்தார்.
ஆனால் மலேசியாவில் இருந்து வந்த ஒரு டெலிபோன் கால், இராணுவ நகர்வுகளை மெதுவாகச் செய்யுங்கள் என்று கோட்டபாயவிடம் கூறியுள்ளது. காரணம் புலம்பெயர் நாடுகளில் இருந்து தாம் பணத்தை சேகரிப்பதாக செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. சேகரிக்கப்படும் காசு தமது கைகளுக்கு வரும்வரையாவது முழுமையாகக் கைப்பற்றவேண்டாம் என்பது தான் அந்தக் கோரிக்கை ஆகும்.[இது எவ்வாறு நடந்தது என்பது பெரியகதை- அதனை இன்னும் ஒரு அத்தியாயத்தில் நாம் எழுத உள்ளோம்]
இன் நிலையில், புலிகளின் மூத்த தலைவர்களை அங்கிருந்து தப்பிக்கச் செய்வதும், அருகில் உள்ள அடர்ந்த காடு ஒன்றுக்குள் அவர்களை செல்லவைக்கவும், கேணல் ஜெயம் தலைமையில்லான வீரர்கள் ஒழுங்குசெய்துகொண்டு இருந்த காலகட்டம் அது.
17ம் திகதி [இரவு பெயர் குறிப்பிட முடியாத ஒரு இடத்தில்] முள்ளிவாய்க்காலில் இருந்து நந்திகடல் நோக்கிச் செல்ல ஒரு குழு தயாரனது. ஆனால் அந்த இடத்தை இலங்கை இராணுவம் இலகுவாக வேவு பார்க்க முடியும் என்ற நிலை காணப்பட்டது. அத்தோடு வானில் பீச் கிராஃப் என்னும் வேவு விமானம் வேறு வட்டமிட்டுக்கொண்டு இருக்கிறது. இதன்போது இலங்கை இராணுவத்தின் கவனத்தை திசைதிருப்ப புலிகளின் கடற்படைத் தளபதி, மீனவ மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். அதற்கு அமைவாக அவர்களில் சுமார் 2,000 மக்கள் ஒரு இடத்தில் திடீர் எனக் கூடினார்கள். அவர்கள் அங்கிருந்து இராணுவக் கட்டுப்பாடு இடத்துக்குள் செல்வதுபோல ஒரு தோற்றப்பாடு உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக இராணுவத்தின் கவனம் அப் பகுதிக்கு திரும்பி இருக்கலாம்( இதனை உறுதியாகச் சொல்லமுடியாது) ஆனால் இதனைப் பாவித்து அவ்விடத்துக்கு அருகாமையில் இருந்த புலிகளின் உயர்மட்ட குழு புறப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக அவர்களோடு இரகசியக் குறியீட்டைப் பாவித்து தொடர்பில் இருந்த புலிகளின் கடற்படைத் தளபதி சூசை அவர்கள், ஒரு கட்டத்தில் அக் குழு ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார்கள் என்று அங்கிருந்த பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை அவ்விடம் நோக்கி இலங்கை இராணுவம் நகர்ந்து வந்துகொண்டு இருப்பதாக, சூசைக்கு தகவல் கிடைக்க மக்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு சூசை அவர்கள் பணித்துள்ளார். என் மீது நம்பிக்கை வைத்து நான் அழைத்தவுடன் இவ்வளவு பேர் திரண்டு வந்ததற்க்காக நன்றி.. என்று அவர் கூறியது தான் அவரது இறுதி வார்த்தையாக இருந்தது. மக்களுக்கு என்னசெய்வது என்று புரியவில்லை. கடற்கரை ஓரமாக அவர்கள் நடந்துசெல்ல ஆரம்பித்து சுமார் 5 நிமிடத்தில் ஒரு ஒற்றை துப்பாக்கி வேட்டு மட்டும் அவர்கள் காதுகளில் கேட்டது. அப்போது சூசை அண்ணாவை திரும்பிப் பார்த்த பொதுமகன் ஒருவர் அதிர்சியில் உறைந்துபோனார். தனது பிஸ்டலை எடுத்து அவர் தனக்கே சூடுவைத்துக்கொண்டார். அதற்கு முன்னதாக தச்சுத் தவறிக்கூட தான் உயிருடன் எதிரியின் கைகளில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக, சயனைட் வில்லையையும் அவர் கடித்துவிட்டார். இரவு அவ்விடத்துக்கு வந்த இராணுவத்தினர் டோச் லைட் அடித்து சூசை அவர்களின் உடலை அடையாளம் கண்டு பிடித்தனர். அப்போது எடுக்கப்பட்ட படம், இராணுவத்தினர் ஒருவரின் மோபைல் போன் ஒன்றில் இருந்து பெறப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவரின் சாட்சியமும் இங்கே பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழ் வீர மறவர்களை நாம் காப்பியங்களிலும் , புராணங்களிலும் தான் படித்திருப்போம். ஆனால் அவர்கள் ஈழத்தில் வாழ்ந்து மடிந்து மாவீரர்கள் ஆகிய நவீன புராணங்கள் இவை. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இவர்கள் புகழ் அழியாது !
அதிர்வுக்காக:
வல்லிபுரத்தான்.

No comments:
Post a Comment