கோமா நிலையில் சென்னைத் துறைமுக மருத்துவமனை
Source: http://dinamani.com/edition_chennai/chennai/2013/04/30/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/article1568051.ece By -முகவை.க.சிவகுமார்-, திருவொற்றியூர் சென்னைத் துறைமுக மருத்துவமனை நிர்வாகச் சீர்கேடுகளில் சிக்கித் தவிப்பதாக பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தகுதிச் சான்று காலாவதியான பிறகும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனம் வாகனச் சோதனையில் திருவொற்றியூர் போலீஸரிடம் சிக்கிய சம்பவம் மருத்துவமனை நிர்வாகத்தின் அவல நிலையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. பழமையும், பெருமையும்வாய்ந்த மருத்துவமனை: 130 ஆண்டுகள் பழமை கொண்ட சென்னைத் துறைமுகத்தில் அமைந்துள்ள மருத்துவமனை 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் நலனுக்காக கட்டப்பட்ட இந்த மருத்துவமனையில் அவசரம், தீவிரம், கண், இதய நோய், மகப்...