முறிகண்டிப் பகுதியில் கடந்த மூன்றாண்டுகளாக தாம் வசித்த காணி நிலங்களை கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த மக்களின் குறிப்பிட்ட நிலப் பகுதியை மக்களிடம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தளபதி பிரிக்கேடியர் ரேணுகா ரொவல் தெரிவித்தார்.
முறிகண்டி மக்களின் காணிப் பரச்சினை தொடர்பாக அந்த மக்களை தடுப்புமுகாமிலிருந்து அழைத்து கிளிநொச்சி மாவட்ட இராணுவத்தளபதி பிரிக்கேடியர் ரேணுகா ரொவல் சந்திப்பு ஒன்றை முறிகண்டி இந்து மகா வித்தியாலாயத்தில் நடத்தினார்.
ஏ-9 பாதையில் ஒரு கீலோ மீற்றர் நீளத்திற்கும் முறிகண்டி கிழக்குப் பக்கமாக 235 மீற்றருக்கும் உட்பட்ட பகுதியை மக்களிடம் கையளித்து அப்பகுதியில் மக்களை மீள்குடியேற்றம் செய்யவுள்ளதாக கிளிநொச்சித் தளபதி தெரிவித்தார்.
இருபது குடும்பகளுக்குரிய காணிகளில் முறிகண்டி கிழக்கைச் சேர்ந்த 126 குடும்பங்களை குடியேற்றப் போவதாக இராணுவம் தெரிவித்த கருத்துக்கு மக்கள் மறுப்புத் தெரிவித்தார்கள். தாங்கள் காலம் காலமாக வசித்த அனைத்துக் கரிகளையும இராணுவத்தினர் விடுவிக்க வேண்டுமென்று மக்கள் கோரககை விடுத்தனர்.
உங்கள் காணியை யாருக்காவது விட்டுக்கொடுத்துவிட்டு யாரோ ஒருவருடைய காணியிலும் அகதி முகாங்களிலும் வசிப்பீர்களா? என்று கிளிநொச்சி மாவட்ட தளபதி பிரிக்கேடியர் ரேணுகா ரொவலப் பார்த்து கண்ணீர் மல்கியபடி முறிகண்டியைச் சேர்ந்த ஒரு தாய் கேட்ட பொழுது பதில் சொல்ல முடியாமல் நின்றார் இராணுவத் தளபதி.
இன்றைய தினமே விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்லலாம் என்று அறிவித்தனர். அத்துடன் எதிர்வரும் 23ஆம் தேதி அன்று மக்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்றும் இராணுவத் தரப்பு தெரிவித்தது. எனினும் ஒட்டுமொத்த காணிகளும் விடுவிக்கப்பட்டாலே அனைத்து மக்களும் மீள்குடியேறலாம் என்று மக்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment