ராஜீவ் காந்தியை கொன்றது பிரபாகரனல்ல சி.ஐ.ஏ : விமல் வீரவன்ச
ராஜீவ்காந்தியைக் கொன்றால் தமது இயக்கத்திற்கு பாதகம் வருமென்பதை உணராத முட்டாள் இல்லை பிரபாகரன் என அமைச்சர் வீரவன்ச, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி புகழ்ந்துரைத்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலைச் சம்பவம் தொடர்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரபாகரனுக்கே தெரியாமல், தமிழகத்தில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை வைத்து ராஜீவ் காந்தியை அமெரிக்காதான் கொலை செய்துள்ளது. எனவும் அவர் தெரிவித்துள்ள கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ திட்டத்தின்படிதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தானாகவே முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டார் என நான் திடமாக நம்புகிறேன்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தானாகவே முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டார் என நான் திடமாக நம்புகிறேன்.
ராஜீவை படுகொலை செய்வதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஏற்படக் கூடிய பாதக நிலைமைகள் குறித்து பிராபகரன் கவனம் செலுத்தாமல் இருந்திருக்க முடியாது.
பிரபாகரனுக்கு தெரியாமல் தமிழகத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அமெரிக்க உளவுப் பிரிவு, ராஜீவை படுகொலை செய்யும் ஒப்பந்தத்தை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை.
காந்தி குடும்பத்தினர் இந்தியாவை ஆட்சி செய்யும் வரையில் தெற்காசிய பிராந்தியத்தில் தங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்திருந்ததால்தான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவின் மிக நெருங்கிய நண்பர் விமல் வீரவன்ச. சிங்கள அரசின் அமைச்சரவையில் இருக்கும் ஒருவர் கூறியுள்ள கருத்து அந்த அரசின் கருத்தாக அமைய இடமுண்டு. சிறீலங்கா அரசு மீது சர்வதேச சமுதாயம் கொண்டு வரும் அழுத்தம் காரணமாக அது தாறுமாறாக கதைக்க ஆரம்பித்துள்ளது. போகும் போக்கில் மேலும் பல செய்திகள் விமல் வீரவன்ச வாயால் வரக்கூடிய வாய்ப்புண்டு.
Comments
Post a Comment